பதிவு செய்த நாள்
10 நவ2017
23:55
புதுடில்லி : நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, செப்டம்பரில், 0.50 சதவீதம் சரிவடைந்து, 3.8 சதவீதமாக குறைந்துள்ளது.
ஆகஸ்டில், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, முந்தைய ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு, 4.3 சதவீதமாக உயர்ந்துஇருந்தது. செப்டம்பரில், சுரங்கத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 7.9 சதவீதமாக உள்ளது. தயாரிப்பு மற்றும் மின் துறைகள் தலா, 3.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, செப்டம்பரில், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி அதிகரித்துள்ளது.மருந்து, தாவரப் பொருட்கள், கம்ப்யூட்டர், மின்னணு சாதனங்கள், மோட்டார் வாகன துறைகளின் வளர்ச்சி நன்கு இருந்தது.
தொழில் துறை உற்பத்தியை கணக்கிடுவதில்,பெரும் பங்கு வகிக்கும், நிலக்கரி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட முக்கிய எட்டு துறைகள், செப்டம் பரில், 5.2 சதவீதம்; தயாரிப்பு துறை 3.4 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளன. தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, ஏப்., – செப்., வரையிலான காலத்தில், 2.5 சதவீதமாக உள்ளது. சுரங்கம், தயாரிப்பு மற்றும் மின் துறைகள், முறையே, 3.9, 1.9 மற்றும், 5.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|