132 நாட்களில் 210 பொருட்களின் ஜிஎஸ்டி குறைப்பு132 நாட்களில் 210 பொருட்களின் ஜிஎஸ்டி குறைப்பு ... ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தினால் ஆயுள் முழுவதும் மது குடிக்கலாம் ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தினால் ஆயுள் முழுவதும் மது குடிக்கலாம் ...
புதிய ஜிஎஸ்டி குறைப்பு : எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2017
14:57

புதுடில்லி : மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நேற்ற நடைபெற்ற 23 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு ஏறக்குறைய 200 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி எந்தெந்த பொருட்கள் ஜிஎஸ்டி.,யின் எந்த வரிவிகிதத்தின் கீழ் வருகிறது என்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
28 % லிருந்து 18 % ஆக குறைக்கப்பட்ட பொருட்கள் :
வையர், கேபிள்கள், மின் கடத்திகள், மின்சார கம்பிகள், மின்சார பிளக்குகள், ஸ்விட்கள், சோகெட்கள், ஃயூஷ்கள், மின் இணைப்பான்கள், எலக்ட்ரிகல் போர்டுகள், பேனல்கள், மின் இணைப்பிற்கான பொருட்கள், மர சாமான்கள், நாற்காலிகள் உள்ளிட்ட மர சாதானங்கள், பயணப் பெட்டிகள், சூட்கேஸ், பிரீப்கேஸ், டிராவல் பைகள், கைப்பைகள்.
சலவை சோப்புகள், சலவை பொருட்கள், சரும சோப்புகள், சருமத்தை சுத்தம் செய்வதற்கான க்ரீம்கள் அல்லது லிக்யூட்கள், ஷாம்பு வகைகள், ஹே க்ரீம்கள், ஹேர் டை வகைகள், ஷேவிங்கிற்கு முன் மற்றும் பின்னர் பயன்படுத்தப்படும்பொருட்கள், டியோடோரன்ட்கள், அழகு சாதனை பொருட்கள், வாசனை பொருட்கள், அறை வாசனை பொருட்கள்.
பேன்கள், பம்ப்கள், கம்ப்ரசர்கள், விளக்குகள், விளக்குகளை பொருத்துவதற்கான பொருட்கள், பேட்டரி செல்கள், சுகாதாரப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தர விரிப்புக்கள், குளியலறை மற்றும் சமையலறை வடிவமைப்பிற்கான பிளாஸ்டிக் பொருட்கள், மார்பிள், கிரானைட்கள், டைல்ஸ்கள், வாக்யூம் பிளாஸ்க், லைட்டர்.
கை கடிகாரம், சுவர் கடிகாரம், வாட்ச் ஸ்ட்ராப், ஜவுளி பொருட்கள், ஸ்டவ், குக்கர், எலக்ட்ரானிக் சாதனங்கள் அல்லாத வீட்டு உபயோகப் பொருட்கள், ரேசர் மற்றும் ரேசர் பிளேடுகள், பிரிண்டர்கள், அலுவலக பயன்பாட்டு சாதனங்கள், கதவுகள், ஜன்னல்கள், அலுமினியம் பட்டைகள், பிளாஸ்டர் உள்ளிட்ட ஒட்டும் பொருட்கள், கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், சிலேட், மைகா, பைப்கள், பைப் பிட்டிங் சாதனங்கள், வால்பேப்பர், வால் கவரிங்கள்
அனைத்து வகையான கண்ணாடி பொருட்கள், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் எடை மிஷின்கள், தீ தடுப்பு சாதனங்கள், கைப்பிடி சாதனங்கள், புல் டோசர், ரோடு ரோலர், லோடர், எர்த் மூவிங், எஸ்கலேட்டர்கள், தையல் இயந்திரங்கள், ரேடியோ மற்றும் டிவி.,க்கான எலக்ட்ரானிக் பொருட்கள், சவுண்ட் ரெக்கார்டிங் பொருட்கள், சிக்னல் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடு சாதனங்கள்.
உடற்பயிற்சி சாதனங்கள், திருவிழா மற்றும் பண்டிகை கருவிகள், அனைத்து இசை கருவிகள் மற்றும் பாகங்கள், செயற்கை பூக்கள் மற்றும் பழங்கள், வெடி பொருட்கள், கோகோ கலந்த வெண்ணை, கொழுப்பு, எண்ணெய் பவுடர், எசன்ஸ், காபி தயாரிப்பு பொருட்கள், சாக்லேட்கள், சூயிங்கம், ஊட்டச்சத்து பானங்கள், செயற்கை ரப்பர்கள், பயினாக்குலர், டெலஸ்கோப், கேமிரா, புரோஜக்டர், மைக்ரோஸ்கோப், ஆய்வக உபகரனங்கள்.
18 % லிருந்து 12 % ஆக குறைக்கப்பட்ட பொருட்கள் :
கிரைண்டர்கள், சுத்திகரிக்கப்பட்ட சரக்கரை, அடைக்கப்பட்ட பால், பாஸ்தா, சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகள், மருத்துவத்திற்கான ஆக்சிஜன், பிரிண்டிங் இங்க், சணல் மற்றும் பருத்தி பைகள், தொப்பிகள், விவசாயம், வனத்துறை, அருவடை கருவிகள், தையல் இயந்திர பாகங்கள், மூக்குக்கண்ணாடிகள், மூங்கில் நாற்காலிகள்
18 % லிருந்து 5 % குறைக்கப்பட்ட பொருட்கள்

கடலை மிட்டாய், பொரி உருண்டை, எள் மிட்டாய், வறுகடலை, பிராண்ட் பெயர்களை விற்கப்படும் உருளைக்கிழங்கு மாவுகள், சட்னி பவுடர், சுத்திகரிக்கப்பட்ட சல்பர்
12 %லிருந்து 5 % குறைக்கப்பட்ட பொருட்கள்
துருவிய தேங்காய், இட்லி, தோசை மாவு, லெதர், பயிறுகள், சணல், மீன்பிடி சாதனங்கள்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)