பதிவு செய்த நாள்
12 நவ2017
03:18
டேட்ஸன் இந்தியா கார் நிறுவனம், ஜப்பானைச் சேர்ந்த, நிஸான் நிறுவனத்தின் அங்கம். ‘ரெனோ’ நிறுவனத்துடன் இணைந்து, சென்னையில், கார் உற்பத்தியை நிஸான் நிறுவனம் மேற்கொண்டு உள்ளது. இந்த ஆலையில், ‘கோ, கோ பிளஸ், ரெடி – கோ’ ஆகிய ரக கார்களை, டேட்ஸன் உற்பத்தி செய்கிறது. அங்கு தற்போது, ஒரு லட்சமாவது, டேட்ஸன் கார் தயாராகி உள்ளது. அந்த சிறப்பு, ரெடி – கோ காருக்கு கிடைத்துள்ளது.இது குறித்து, ரெனோ நிஸான், ஆட்டோமோட்டிவ் இந்தியா நிறுவன மேலாண் இயக்குனர், ஜெரோம் செய்காட் கூறுகையில், ‘‘இந்த மைல் கல், வாடிக்கையாளர்கள், எங்கள் தயாரிப்பு மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுவதாக உள்ளது. நிஸான் இந்தியா, நிறுவனத்தின் மொத்த விற்பனையில், டேட்ஸன் கார்களின் பங்கு, 50 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|