ஜி.எஸ்.டி., வரிச்சுமை குறைந்ததால்...நுகர்பொருட்கள் விலை குறைப்பு தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்புஜி.எஸ்.டி., வரிச்சுமை குறைந்ததால்...நுகர்பொருட்கள் விலை குறைப்பு தயாரிப்பு ... ... அர­சி­யல் தோற்­க­லாம்; பொரு­ளா­தா­ரம் தோற்­ற­தில்லை! அர­சி­யல் தோற்­க­லாம்; பொரு­ளா­தா­ரம் தோற்­ற­தில்லை! ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நிதி ஒழுங்கு தரும் பாடங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2017
23:49

கடந்த, 2016 நவம்­பரில் அறி­விக்­கப்­பட்ட, பண மதிப்பு நீக்க நட­வ­டிக்கை அதிர்ச்சி வைத்­தி­ய­மாக அமைந்­த­தோடு, நிதி விஷ­யங்­களை கையாள்­வது
தொடர்­பான, முக்­கிய பாடங்­க­ளையும் கற்றுத் தந்­தது. ரொக்­கத்தை கையாள்­வது, ‘டிஜிட்டல்’ முறைக்கு மாறு­வது, பிளாஸ்டிக்
பணத்தை பயன்­ப­டுத்­து­வது தொடர்­பான இந்த பாடங்கள், நிதி ஒழுங்­கிற்­காக தவ­றாமல் பின்­பற்­றப்­பட வேண்­டி­ய­வை­யா­கவும் அமை­கின்­றன.


ரொக்­கத்தை குறை­யுங்கள்:

வீட்டில், ரொக்­க­மாக பணத்தை வைத்­தி­ருப்­பது இயல்­பா­னது என்­றாலும், தேவைக்கு அதி­க­மான பணத்தை, கையில் வைத்­தி­ருக்க வேண்டாம் என்­பதே, நிதி வல்­லு­னர்­களின் ஆலோ­ச­னை­யாக இருக்­கி­றது. அவ­சர செல­வுக்கு தேவை­யான தொகை தவிர, எஞ்­சிய ரொக்கம், வீட்டில் அல்­லது வங்கிக் கணக்கில் துாங்கிக் கொண்­டி­ருப்­பதை விட, பொருத்­த­மான நிதி சாத­னங்­களில் முத­லீடு செய்து, அதன் மீது வரு­மானம் பெறலாம். பி.பி.எப்., வைப்பு நிதி போன்­ற­வற்­றையும் நாடலாம்.

டிஜிட்­ட­லுக்கு மாறுங்கள்:

பணப் பரி­வர்த்­த­னைக்கும், ‘பில்’­களை செலுத்­தவும், நவீன தொழில்­நுட்பம் பல வழி­களை ஏற்­ப­டுத்தி தந்­து இ­ருக்­கி­றது. தொழில்­நுட்­பத்தை தழுவிக் கொள்­வதில் தயக்கம் காட்­டு­வதை கைவிட்டு, இத்­த­கைய, ‘டிஜிட்டல்’ வழி­க­ளுக்கு மாற வேண்டும். டிஜிட்டல் வாலட்கள், இணைய வங்கிச் சேவை போன்­றவை கைகொ­டுக்கும். பிளாஸ்டிக் பணம் எனப்­படும், கிரெடிட் கார்டு அல்­லது டெபிட் கார்­டையும் பயன்­ப­டுத்­தலாம். யு.பி.ஐ., செய­லி­யையும் பயன்­ப­டுத்­தலாம்.

வரு­மான வரி கணக்கு:

பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கைக்கு பின், 2 லட்­சத்­திற்கும் அதி­க­மான ரொக்­கத்தை, வங்­கியில், ‘டிபாசிட்’ செய்­த­வர்கள், அதை வரு­மான வரி கணக்கு தாக்­கலின் போது குறிப்­பிட வேண்டும் என, தெரி­விக்­கப்­பட்­டது. அதிக ரொக்­கத்தை டிபாசிட் செய்வோர், சிக்­க­லுக்கு இலக்­காயினர். ஆனால், முறை­யாக வரு­மான வரி கணக்கு தாக்கல் செய்­வதன் மூலம், இது போன்ற சிக்­கல்­களை தவிர்க்­கலாம். வரி திட்­ட­மிடல், வரி சேமிப்­பிற்கு உதவும்.


செலவை கவனி:

பணப் பரி­வர்த்­த­னைக்­காக, ‘டிஜிட்டல்’ முறைக்கு மாறு­வதில், பல வித அணு­கூ­லங்கள் இருக்­கின்­றன. அவற்றில் ஒன்று, செல­வுகள் அனைத்­தையும் கண்­கா­ணிக்க முடியும் என்­ப­தாகும். எல்லா செல­வு­க­ளுக்கும், டிஜிட்டல் பதி­வுகள் இருப்­பதால், எங்கே அதிகம் செலவு செய்­கிறோம் என, கண்­ட­றிந்து, அவற்றை சரி செய்யும் வாய்ப்பு இருக்­கி­றது. இதனால் வீண் செல­வு­கள் இருக்­காது.


நிதி ஒழுங்கு ‘டிஜிட்டல்’

பரி­வர்த்­த­னைக்கு மாறு­வதன் மூலம், நிதி செயல்­பா­டுகள் தொடர்­பான, மற்ற தொழில்­நுட்ப சேவை­க­ளையும் அறி­முகம் செய்து கொள்­ளலாம். நிதி திட்­ட­மி­ட­லுக்­கான செய­லி­களை பயன்­ப­டுத்­து­வதன் மூலம், பட்­ஜெட்டை சீராக்கி கொள்­ளலாம். ரசீ­துகள் உள்­ளிட்­ட­வற்றை டிஜிட்டல் மய­மாக்கி பரா­ம­ரிக்­கலாம். டிஜிட்டல் லாக்கர் உள்­ளிட்ட சேவை­க­ளையும் பயன்­ப­டுத்தி, பலன் பெறலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)