ஜி.எஸ்.டி., வரிச்சுமை குறைந்ததால்...நுகர்பொருட்கள் விலை குறைப்பு தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்புஜி.எஸ்.டி., வரிச்சுமை குறைந்ததால்...நுகர்பொருட்கள் விலை குறைப்பு தயாரிப்பு ... ... அர­சி­யல் தோற்­க­லாம்; பொரு­ளா­தா­ரம் தோற்­ற­தில்லை! அர­சி­யல் தோற்­க­லாம்; பொரு­ளா­தா­ரம் தோற்­ற­தில்லை! ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பி.பி.எப்., முத­லீடு பற்றி அதிகம் அறி­யாத அம்­சங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2017
23:52

பர­வ­லாக அறி­யப்­பட்ட, முத­லீட்டு வாய்ப்­பான பி.பி.எப்., எனக் குறிப்­பி­டப்­படும், ‘பப்ளிக் புரா­விடண்ட் பண்டு’ திட்­டத்தின், அதிகம் அறி­யப்­ப­டாத அம்­சங்கள் குறித்து ஒரு பார்வை.


வட்டி விகிதம் குறையும் சூழ­லிலும், பி.பி.எப்., அதிகம் நாடப்­படும் முத­லீட்டு வாய்ப்­பு­களில் ஒன்­றாக விளங்­கு­கி­றது. நீண்ட கால நோக்கில் பலன் தரு­வதும், வரி சேமிப்பு உள்­ளிட்ட சாத­க­மான அம்­சங்கள் இருப்­பதும், இதன் சிறப்­பம்­ச­மாக இருக்­கி­றது. முத­லீடு காலத்தில் மட்டும் அல்­லாமல், பலனை பெறும் போதும், இது வரிச்­ச­லுகை கொண்­ட­தாக இருக்­கி­றது. இந்த திட்டம் பிர­ப­ல­மா­ன­தாக இருந்­தாலும், இது தொடர்­பாக அதிகம் அறி­யப்­ப­டாத அம்­சங்­களும் இருக்­கின்­றன.


பங்­க­ளிப்பு :

பி.பி.எப்., திட்­டத்தில் செய்­யப்­படும் முத­லீடு, 15 ஆண்­டுகள் ‘லாக் இன்’ காலம் கொண்­டது. ஆனால், இந்த முதிர்வு காலம், கணக்கு துவக்­கப்­பட்ட நாளில் இருந்து கணக்­கி­டப்­ப­டு­வது இல்லை என்­பது தெரி­யுமா? பி.பி.எப்., திட்ட விதி­மு­றைகள் படி, ‘டிபாசிட்’ செய்­யப்­பட்ட நிதி ஆண்டின் இறு­தியில் இருந்து, முதிர்வு காலம் கணக்­கி­டப்­ப­டு­கி­றது. எனவே, எந்த மாதத்தில் கணக்கு துவக்­கப்­பட்­டது என்­பது முக்­கியம் அல்ல. உதா­ர­ணத்­திற்கு, ஒருவர், 2014 ஜூலையில் கணக்கு துவக்கி இருந்தால், அவ­ரது கணக்­கிற்கு துவக்கம், 2015 முதல் கணக்­கி­டப்­பட்டு, 2030 ஆண்டு முதிர்வு கால­மாக அமையும்.


திட்­டத்தின் விதி­மு­றை­க­ளின்­படி, குறைந்­த­பட்சம், 500 ரூபாய் மற்றும் அதி­க­பட்சம், 1.50 லட்சம் ரூபாய் முத­லீடு அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றது. சொந்­த­மாக துவக்­கிய கணக்கு அல்­லது மைனர்கள் பெயரில் துவக்­கப்­பட்ட கணக்கு எல்­லா­வற்­றுக்கும், இது பொருந்தும். மொத்­த­மாக பணம் செலுத்­தலாம் அல்­லது மாதத் தவ­ணை­களில் செலுத்­தலாம். ஆனால், நிதி­யாண்டில், 12 தவ­ணை­க­ளுக்கு மேல் செலுத்த முடி­யாது. லாக் இன் காலம் நிதி­யாண்டின் இறு­தியில் இருந்து துவங்­கு­வதால், திட்டக் காலத்தில் செலுத்­தப்­படும் பங்­க­ளிப்பு, 16 ஆக கரு­தப்­படும். கணக்கு துவங்கும் போது செலுத்­தப்­படும் தொகை, முதல் பங்­க­ளிப்­பாக கரு­தப்­படும். அதன்பின், திட்டக் காலத்தில் 15 பங்­க­ளிப்­புகள் செலுத்­தப்­பட்டு இருக்கும். மாதாந்­திர பங்­க­ளிப்­புக்கும், இது பொருந்தும்.


வட்டி கணக்­கீடு:

இத்­திட்­டத்தில், மாதந்­தோறும் பங்­க­ளிப்பு செலுத்­து­ப­வர்கள், ஒவ்­வொரு மாதமும், 5ம் தேதிக்கு முன்­ன­தாக, பணம் செலுத்­து­வது ஏற்­றது. மாதத்தின், 5ம் தேதி முதல், மாத கடைசி வரை உள்ள தொகையே, வட்டி கணக்­கிட எடுத்துக் கொள்­ளப்­ப­டு­வதால், இந்த காலத்­திற்குள் தொகையை செலுத்­தினால், அதுவும் வட்டி கணக்கில் சேரும். மொத்­த­மாக தொகையை செலுத்­து­வ­தாக இருந்தால், நிதி­யாண்டின், ஏப்., 5க்கு முன்­ன­தாக செய்ய வேண்டும். மார்ச், 31 வட்டி செலுத்­தப்­பட்­டாலும், ஏப்., 5ம் தேதிப்­படி தான், வட்டி கணக்­கி­டப்­ப­டு­கி­றது.நிர்­ண­யிக்­கப்­பட்ட தொகைக்கு மேல் செலுத்­தப்­படும் தொகைக்கு, எந்த வட்­டியும் கிடை­யாது, தற்­போ­தைய நிலைப்­படி, இந்த திட்­டத்­திற்­கான வட்டி விகிதம், ஆண்­டுக்கு, 7.8 சத­வீதம் என, தீர்­மா­னிக்­கப்­பட்டு உள்­ளது. கடந்த ஆண்டு, ஏப்., முதல், வட்டி விகிதம், காலாண்டு அடிப்­ப­டையில் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது. அதற்கு முன் இது, ஆண்­டுக்கு ஒரு­முறை தீர்­மா­னிக்­கப்­பட்­டது.


பகுதி விலக்கல்:

இந்­தி­யாவில் வசிப்­பவர் மட்­டுமே, கணக்கு துவங்க முடியும். எனினும், இணைந்து கணக்கு துவக்கம் வாய்ப்பு இல்லை. மைனர்­க­ளுடன் இணைந்து பாது­கா­வலர் கணக்கு துவக்­கலாம். இந்­தி­யாவில் வசிக்­கா­தவர் மற்றும் இந்து கூட்டு குடும்பம் கணக்கு துவங்க முடி­யாது. இந்­தியர் ஒருவர், வெளி­நாட்டில் வாழும் இந்­தி­ய­ராக மாறினால், அவ­ரது பெய­ரி­லான, பி.பி.எப்., கணக்கு நிறுத்­தப்­படும் என, சமீ­பத்தில், அரசு அறி­வித்­துள்­ளது. அதன்பின், கணக்கு முடிக்­கப்­படும் காலம் வரை, அஞ்­ச­லக வட்டி விகி­தமே வழங்­கப்­படும். பி.பி.எப்., திட்டம், 15 ஆண்­டுகள் காலத்­திற்­கா­னது என்­றாலும், இடையே பகுதி விலக்கல் மற்றும் கடன் வசதி சாத்­தியம். மீதி தொகை மற்றும் பங்­க­ளிப்பு காலத்­திற்கு ஏற்ப, இதற்­கான விதி­முறை அமையும். கட­னுக்கு, திட்ட வட்­டியை விட, 2 சத­வீதம் கூடுதல் வட்டி வசூ­லிக்­கப்­படும். எனினும், பகுதி விலகல் அனு­ம­திக்­கப்­படும், 7வது ஆண்­டுக்கு பின், இதன் மீது கடன் பெற முடி­யாது. ‘நாமி­னேஷன்’ வச­தியும் இருக்­கி­றது.


நீண்­ட­கால நலன்:

* பி.பி.எப்., நீண்­ட­கால நலன் தரும் திட்டம். கூட்டு வட்­டியின் பலன் தரு­வது.
* வரி சேமிப்பு அளிப்­பது. எல்லா கட்­டத்­திலும் வரி விலக்கு கொண்­டது.
* முதிர்வு காலத்­திற்கு பின், 5 ஆண்டு நீட்­டிக்கும் வாய்ப்பு உள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)