ஜி.எஸ்.டி., வரிச்சுமை குறைந்ததால்...நுகர்பொருட்கள் விலை குறைப்பு தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்புஜி.எஸ்.டி., வரிச்சுமை குறைந்ததால்...நுகர்பொருட்கள் விலை குறைப்பு தயாரிப்பு ... ... அர­சி­யல் தோற்­க­லாம்; பொரு­ளா­தா­ரம் தோற்­ற­தில்லை! அர­சி­யல் தோற்­க­லாம்; பொரு­ளா­தா­ரம் தோற்­ற­தில்லை! ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமாடிட்டி சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2017
23:59

கச்சா எண்ணெய்

கச்சா எண்­ணெய் விலை, தொடர்ந்து ஐந்து வாரங்­க­ளாக, உயர்ந்த வண்­ணம் உள்­ளது. சர்­வ­தேச சந்­தை­யில், ஒரு பேரல் கச்சா எண்­ணெய் விலை, 57.90 டாலர் எனும், இரு ஆண்டு உச்­சத்தை தொட்­டது. ஒபெக் உறுப்பு நாடு­களில், அதி­க­ளவு எண்­ணெய் உற்­பத்தி செய்­யும் நாடு, சவுதி அரே­பியா. ஒபெக் உறுப்பு நாடு­கள் அமைப்­பில் இல்­லாத நாடு­களில், அதி­க­ள­வில் எண்­ணெய் உற்­பத்தி செய்­யும் நாடு, ரஷ்யா. இந்த இரு நாடு­களும், தற்­போது இணைந்து, உற்­பத்தி குறைப்பை நீட்­டிக்க முடிவு செய்­துள்ளன.


இதற்கு முன், 2018 மார்ச் வரை, தின­சரி, 1.8 மில்­லி­யன் பேரல் அள­வுக்கு, உற்­பத்­தியை குறைத்­துக் கொள்­வது என, முடி­வெ­டுக்­கப்­பட்டு இருந்­தது. இதை, மேலும் ஒன்­பது மாதங்­க­ளுக்கு அதா­வது, 2018 டிச., வரை நீட்­டிக்க, சவு­தி­யும், ரஷ்­யா­வும் விருப்­பம் தெரி­வித்து உள்ளன.இந்த அறி­விப்பை தொடர்ந்து, விலை சர­ச­ர­வென உயர்ந்­தது. ஒபெக் உறுப்பு நாடு­களின் அடுத்த கூட்­டம், நவ., 30ல், வியன்னா நக­ரத்­தில் நடை­பெற உள்­ளது. அப்­போது, உற்­பத்தி குறைப்பு குறித்த அதி­கா­ர­பூர்வ அறிக்கை வெளி­யாக இருக்­கிறது.கடந்த வாரம், 7ம் தேதி நடை­பெற்ற, உலக எண்­ணெய் கண்­ணோட்­டம் குறித்த அறிக்­கை­யில், 2018ல், தேவை உய­ரும் என்ற கருத்­துக் கணிப்­பும், விலை உயர்­வுக்கு சாத­க­மாக அமைந்­தது.


இதற்­கி­டையே, கடந்த மாதம், அமெ­ரிக்­கா­வில் ஏற்­பட்ட சூறா­வ­ளி­யால் இயங்­கா­மல் இருந்த, ஆழ்­கு­ழாய் கிண­று­கள் இயங்­கத் துவங்கி இருக்­கின்றன. இதை­ய­டுத்து, அமெ­ரிக்­கா­வின் தின­சரி எண்­ணெய் உற்­பத்தி, தொய்­வில் இருந்து மீண்டு, இயல்பு நிலைக்கு திரும்­பும் என்ற எதிர்­பார்ப்பு கார­ண­மாக, எண்­ணெய் விலை உயர்வு கட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­டது. வரும் நாட்­களில், எண்­ணெய் விலை, சர்­வ­தேச சந்­தை­யில், 58.75 டாலர் மற்­றும் 60 டாலர் வரை உயர வாய்ப்பு உள்­ளது. இருப்­பி­னும், 60 டாலரை கடந்து உயர்ந்து செல்ல, வாய்ப்பு குறை­வா­கவே காணப்­ப­டு­கிறது.


பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்:

சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2
எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 3,665 3,580 3,755 3,870
என்.ஒய்.எம்.இ.எக்ஸ். (டாலர்) 56.10 54.80 58.75 60.00


தங்கம், வெள்ளி

தங்­கம், வெள்ளி ஆகி­யவை, முந்­தைய மூன்று வார சரி­வுக்கு பின், கடந்த வாரம், விலை உயர்ந்து வர்த்­த­க­மா­கின. இருப்­பி­னும், வெள்­ளி­யன்று சரிவு ஏற்­பட்டு, வர்த்­த­கம் முடி­வுற்­றது.சர்­வ­தேச சந்­தை­யில், தங்­கம் மூன்று வாரங்­க­ளாக, ஒரு அவுன்ஸ், 1,260 – 1,290 டாலர் என்ற விலை­யில், அதா­வது, 30 டாலர் மாற்­றத்­துக்­குள் சீரான வர்த்­த­கத்தை சந்­தித்­தது. இந்த அள­வு­களில், ஏதே­னும் ஒரு பக்­கம் கடக்­கும் நிலை­யில், அதன் போக்கு நிச்­ச­யிக்­கப்­படும்.


வெள்ளி, ஒரு அவுன்ஸ், 16.55 – 17.25 டாலர் என்ற நிலை­யில், வர்த்­த­க­மா­கிக் கொண்­டி­ருக்­கிறது. அமெ­ரிக்க அரசு கரு­வூ­லங்­களின் ஆதா­யம், வெள்­ளி­யன்று உயர்ந்­தது. இதன் கார­ண­மாக, முத­லீட்­டா­ளர்­கள், தங்­கம் மீதான ஆர்­வத்தை குறைத்து, கரு­வூ­ல­கங்­களில் முத­லீடு செய்­த­னர். மேலும், தனி­ந­பர் மற்­றும் நிறு­வ­னங்­க­ளுக்­கான வரி குறைப்பு நட­வ­டிக்­கை­யால், அமெ­ரிக்க பொரு­ளா­தா­ரம் வலுப்­படும் என்ற எதிர்­பார்ப்­பும், ‘டாலர் இண்­டெக்ஸ்’ எனப்­படும், அமெ­ரிக்க நாணய குறி­யீடு உயர கார­ண­மா­கி­யது. இது, தங்­கம் மற்­றும் வெள்ளி விலை­களில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி, சரிவை சந்­திக்க வைத்­தது. அமெ­ரிக்க நிறு­வ­னங்­க­ளுக்­கான வரி­யா­னது, 35 சத­வீ­தத்­தில் இருந்து, 20 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்டு உள்­ளது.


இந்­திய ஆப­ரண சந்­தை­யில், டால­ருக்கு நிக­ரான, இந்­திய ரூபா­யின் மதிப்பு சரிந்­த­தின் விளை­வாக, விலை உயர்ந்­தது. 10 கிராம், 30, 530 ரூபாய் என்ற நிலை­யில், வெள்­ளி­யன்று வியா­பா­ர­மா­கி­யது. உள்­நாட்டு சந்­தை­யில், தேவை­யா­னது அதி­க­ரித்­துள்­ளது. இது, திரு­ம­ணம் மற்­றும் விசே­ஷங்­க­ளுக்­காக, கொள்­மு­தல் செய்­யும் கால­மா­கும். அமெ­ரிக்க மத்­திய வங்­கி­யின், வட்டி விகி­தம் குறித்த கூட்­டம், டிச., மாதம் நடை­பெற உள்­ளது. தற்­போது, புதி­தாக நிய­ம­னம் ஆகி­யி­ருக்­கும், அமெ­ரிக்க மத்­திய வங்­கி­யின் தலை­வ­ரான, ஜெரோம் போவல், வட்டி விகி­தம் குறித்து எடுக்க உள்ள தீர்­மா­னம் குறித்த எதிர்­பார்ப்­பும், சந்­தை­யில் தற்­போது நிலவி வரு­கிறது. இந்த முடி­வு­கள், விலை­களில் எதி­ரொ­லிக்­கும்.


தங்கம்:

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்
சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2
எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 27,775 27,450 28,150 28,350
காம்எக்ஸ் (டாலர்) 1,215 1,202 1,234 1,241


வெள்ளி:

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்
சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2
எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 36,425 36,110 37,245 37,650
காம்எக்ஸ் (டாலர்) 15.45 14.95 16.30 16.55


செம்பு:

செம்பு விலை, கடந்த வாரம் சரி­வில் முடி­வ­டைந்­தது. ஓராண்டு கால­மாக, விலை உயர்ந்த வண்­ணம் இருந்த செம்பு, வியா­பா­ரி­கள் லாபம் ஈட்­டு­தல் கார­ண­மாக, இம்­மாத துவக்­கம் முதல், விலை­யில் சிறிய சரிவு காணப்­ப­டு­கிறது. அமெ­ரிக்க டாலர் இண்­டெக்ஸ் உயர்வு மற்­றும் சீன இறக்­கு­மதி, சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட செம்பு இறக்­கு­மதி ஆகி­யவை, குறைந்­த­தன் விளை­வாக, தற்­போது விலை குறைந்து காணப்­ப­டு­கிறது. வரும் நாட்­களில், சர்­வ­தேச சந்­தை­யில், ஒரு பவுண்டு செம்பு, 3.05 டாலர் என்ற நிலை நல்ல சப்­போர்ட் ஆகும். இதை கடக்­கும் நிலை­யில், மீண்­டும் விலை குறைய அதிக வாய்ப்­புள்­ளது.


பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்
சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2
எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 380.70 378.00 358.20 387.00

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)