பதிவு செய்த நாள்
19 நவ2017
06:58
மஹிந்திரா நிறுவனம், மேம்படுத்தப்பட்ட, ஸ்கார்பியோ, எஸ்.யு.வி.,யை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை வந்த ஸ்கார்பியோ வாகனங்களில், இது மிகவும் சக்தி வாய்ந்ததாம். இதில், ஸ்கார்பியோ வாகனங்களில் வழக்கமாக பொருத்தப்படும், ‘2.2 லி., எம்ஹாக் டீசல் இன்ஜின்’ பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால், அத்துடன் ஆறாவது தலைமுறை, ‘போர்க் வார்னர் டர்போ சார்ஜரும்’ இடம் பெற்றுள்ளது.துவக்க நிலை வேரியன்ட், எஸ் – 3. இதில், 75 எச்.பி., திறன் உற்பத்தி செய்யக்கூடிய, எம்.டி.சி.ஐ.ஆர்., இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. அடுத்ததாக, ‘எஸ் – 5, எஸ் – 7’ ஆகிய வேரியன்ட்களில், 120 எச்.பி., திறனுடைய இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இதில், ‘டாப் வேரியன்ட்’களான, ‘எஸ் – 7, எஸ் – 11’ ஆகியவற்றில், 140 எச்.பி., திறனுடைய இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இதில், எஸ் – 7ல் மட்டும், 6 கியர்கள் உள்ளன. மற்றபடி, இவற்றில், 10 மொழிகளில் தகவல்களை தரக்கூடிய, 6 அங்குல இன்போடெயின்மென்ட் திரை, ரிவர்ஸ் பார்கிங் கேமரா உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|