ஆச்­ச­ரி­யத்­தில் ஆழ்த்த  காத்­தி­ருக்­கும் சந்தை மாற்­றங்­கள்ஆச்­ச­ரி­யத்­தில் ஆழ்த்த காத்­தி­ருக்­கும் சந்தை மாற்­றங்­கள் ... பங்குச் சந்தை பங்குச் சந்தை ...
சந்­தைக்கு உண்டு சாதிக்­கும் வலிமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2017
03:52

மத்­திய அரசு, 178 பொருட்­களின், ஜி.எஸ்.டி., வரி விகி­தத்தை, நவ., 15ம் தேதி முதல், 18 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 5 சத­வீ­த­மாக குறைத்­த­போது, பெரும் எதிர்­பார்ப்பு எழுந்­தது. வரிக் குறைப்­பின் பலன் பொது­மக்­க­ளுக்கு கைமாற்­றப்­படும்; அதன்­மூ­ல­மாக, பல்­வேறு முக்­கி­ய­மான பொருட்­களின் விலை­கள் சட­ச­ட­வென குறை­யும்; அது பொரு­ளா­தா­ரம் மேம்­ப­ட­வும் வேலை­வாய்ப்­பு­கள் பெரு­க­வும் வழி­செய்­யும் என்­பது எதிர்­பார்ப்பு. ஆனால், யதார்த்­தம் முற்­றி­லும் வேறு.
மத்­திய அரசு, 178 பொருட்­களின், ஜி.எஸ்.டி., வரி விகி­தத்தை, நவ., 15ம் தேதி முதல், 18 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 5 சத­வீ­த­மாக குறைத்­த­போது, பெரும் எதிர்­பார்ப்பு எழுந்­தது. வரிக் குறைப்­பின் பலன் பொது­மக்­க­ளுக்கு கைமாற்­றப்­படும்; அதன்­மூ­ல­மாக, பல்­வேறு முக்­கி­ய­மான பொருட்­களின் விலை­கள் சட­ச­ட­வென குறை­யும்; அது பொரு­ளா­தா­ரம் மேம்­ப­ட­வும் வேலை­வாய்ப்­பு­கள் பெரு­க­வும் வழி­செய்­யும் என்­பது எதிர்­பார்ப்பு. ஆனால், யதார்த்­தம் முற்­றி­லும் வேறு.ஒரு­சில பன்­னாட்டு நுகர்­பொ­ருள் தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் மட்­டும் உடனே, வரிக் குறைப்­பின் பலனை பொது­மக்­க­ளுக்கு வழங்க முன்­வந்­தன.குறையவில்லைஅந்­தப் பொருட்­களில், ஜி.எஸ்.டி., என்று தனியே வரி வசூ­லிக்­கப்­ப­டு­வ­தில்லை. அது விற்­பனை விலை­யில் சேர்க்­கப்­ப­டு­வ­தால், மொத்த அல்­லது சில்­லரை விற்­ப­னை­யா­ளர்­க­ளி­டம் விலை திருத்­தத்தை வழங்கி, நடை­மு­றைப்­ப­டுத்­தத் துவங்­கி­விட்­டன.ஆனால், உண்­மை­யான சோதனை, உண­வ­கங்­களில் தான் ஏற்­பட்­டது. 18 மற்­றும் 12 சத­வீ­தங்­களில் இருந்த வரி­கள் அனைத்­தும் நீக்­கப்­பட்டு, எந்­த­வி­த­மான உண­வ­க­மாக இருந்­தா­லும், 5 சத­வீத வரி வசூ­லித்­தால் போதும் என்­றது மத்­திய அரசு. உண­வ­கங்­களும், நவ., 15 முதல், வரி­யைச் செவ்­வனே குறைத்­து­விட்­டன.அப்­ப­டி­யா­னால், உண­வுப் பொருட்­களின் விலை­கள் குறை­யும் என்­று­தானே நினைப்­பீர்­கள்? இங்­கே­ தான் ஆன்டி- கிளை­மாக்ஸ்; விலை குறை­ய­வில்லை. பழைய விலைக்கு அரு­கி­லேயே விலை­கள் உள்ளன. ஒரு­சில இடங்­களில் கூட­வும் செய்­து­விட்­டன. உண­வுப் பொருட்­களின் அடிப்­படை விலையை உயர்த்­தி­விட்­டன உண­வ­கங்­கள்.வரி­சை­யாக கார­ணங்­கள்ஜி.எஸ்.டி., கவுன்­சில், உண­வ­கங்­க­ளுக்­கான வரியை, 5 சத­வீ­த­மாக குறைத்­த­போது, அவர்­கள் உள்­ளீட்டு வரி­யைக் கோர­மு­டி­யாது என்று சொல்­லி­விட்­டது. உள்­ளீட்டு வரி­யின் மூலம் பெற்ற பலனை, உண­வ­கங்­கள், பொது­மக்­க­ளுக்கு கைமாற்ற மறுத்­தன என்­பதே இதற்­கு கார­ணம்.விலை குறை­யா­த­தற்கு, இப்­போது, உள்­ளீட்டு வரி­யையே உண­வ­கங்­கள் கார­ண­மா­கச் சொல்­கின்றன.பெரிய நிறு­வ­னங்­க­ளாக இருந்­தால், 10 – 12 சத­வீ­தம் வரை­யும், சிறிய உண­வ­கங்­க­ளாக இருந்­தால், 2 – 3 சத­வீ­தம் வரை­யும் உள்­ளீட்டு வரி­யி­னால், அவர்­க­ளுக்கு லாபம் கிடைத்து வந்­தன.உள்ளீட்டு வரிஉள்­ளீட்டு வரி நிறுத்­தப்­பட்­ட­தால், தங்­க­ளுக்கு நஷ்­டம் ஏற்­பட்­டுள்­ள­தாக கரு­து­கின்றன உண­வ­கங்­கள். மெக்­டொ­னால்ட் போன்ற பெரிய நிறு­வ­னங்­களே இத்­தகு விளக்­கங்­களை பொது­மக்­கள் பார்­வைக்கு வைத்­து­விட்­டன.ஜி.எஸ்.டி., அம­லுக்கு வந்த, ஜூலை 2017 முதல், தங்­கள் விற்­ப­னை­யில் சுமார் 30 சத­வீ­தம் வரை சரிவு ஏற்­பட்­டுள்ள நிலை­யில், உள்­ளீட்டு வரி­யைக் கோர முடி­யாது என்­பது இன்­னொரு சவுக்­கடி எனக் கரு­து­கின்றன உண­வ­கங்­கள்.அவர்­கள் பயன்­ப­டுத்­தும் இடு­பொ­ருட்­கள், சேவை­கள் அனைத்­தி­லும் ஏற்­க­னவே, ஜி.எஸ்.டி., இருக்­கிறது. அத­னால் ஏற்­பட்­டுள்ள கூடு­தல் செல­வி­னங்­களை எங்கே போய் ஈடு­கட்­டு­வது? அதைப் பொது­மக்­கள் தலை­யில் சுமத்­து­வது ஒன்றே வழி. பணி­யா­ளர் சம்­ப­ளம், இடத்­தின் வாடகை ஆகி­யவை தொடர்ந்து உயர்ந்­து­வ­ரும் நிலை­யில், அவற்­றைச் சமா­ளிக்­க­வும் விலை­யேற்­றம் தான் ஒரே வழி.உண­வ­கங்­கள் தரப்­பில் சொல்­லப்­படும் இத்­த­கைய கார­ணங்­கள், நியா­யம் போல் தோன்­றி­னா­லும், வாடிக்­கை­யா­ளர்­கள் என்ற பாவப்­பட்ட ஜீவன்­கள், எங்கே தங்­கள் தரப்பு நியா­யத்­தைச் சொல்­வது? வெளியே சாப்­பிட்டே தீர­வேண்­டிய கட்­டா­யத்­தில் இருக்­கும், ‘நகர அக­தி­கள்’ பெரு­கி­வ­ரும் நாடு இது. அவர்­க­ளு­டைய மாதாந்­திர பட்­ஜெட்­டில் விழும் பெரிய துண்டை யார் ஈடு­கட்­டு­வர்?கொள்ளை லாபத்­துக்கு எதி­ராக, இந்த நிலை­யில் தான், கொள்ளை லாபம் அடிப்­போ­ரைத் தட்­டிக்­கேட்க ஒரு அமைப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது, மத்­திய அரசு. ‘நேஷ­னல் ஆன்டி பிரா­பி­டீ­ரிங் அதா­ரிட்டி’ என்ற இந்த ஆணை­யம், அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்கு இயங்­கும். இதில் தெரி­விக்­கப்­படும் புகார்­களின் அடிப்­ப­டை­யில் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு, கொள்ளை லாபம் அடிக்­கும் நிறு­வ­னங்­களின், ஜி.எஸ்.டி., பதி­வையே ரத்து செய்­து­வி­ட­வும் முடி­யும்.இந்த நடை­முறை பல அடுக்­கு­க­ளைக் கொண்­ட­தாக இருப்­ப­தால், ஏரா­ள­மான கேள்வி. முத­லில் எது லாபம், எது கொள்ளை லாபம்? இது துறைக்­குத் துறை மாறு­ப­டாதா?மருந்து நிறு­வ­னங்­களில் கிடைக்­கும் லாபம் அப­ரி­மி­த­மா­னது என்று ஊருக்கே தெரி­யும். அதற்­கான முயற்சி, மூல­த­னம், ஆய்­வு­கள், சோத­னை­கள், காப்­பு­ரி­மைக் கட்­ட­ணம் என்று ஒரு மருந்து கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு செய்­யப்­படும் முத­லீடு ஏரா­ளம். அதன் இறு­தி­யில்­தான் ஒரு மாத்­தி­ரையோ, டானிக்கோ சந்­தைக்கு வரும். அங்கே கொடுக்­கப்­படும் விலை என்­பது அந்த ஒரு மாத்­தி­ரைக்கு மட்­டும் கொடுக்­கப்­ப­டு­வது அன்று, அதன் பின்­னுள்ள அத்­தனை முயற்­சி­க­ளுக்­கும், மூளை உழைப்­புக்­கும், காத்­தி­ருத்­த­லுக்­கும் சேர்த்தே வழங்­கப்­ப­டு­வது. இதனை கொள்ளை லாபம் என்று வரை­யறை செய்­ய­மு­டி­யுமா?‘சாதா பொங்­கலு’க்கு மேல் இரண்டு முந்­தி­ரிப்­ப­ருப்­பை­யும், பாதாம்­ப­ருப்­பை­யும் போட்­டு­விட்டு, அதனை ‘ஸ்பெ­ஷல் பொங்­கல்’ என்று விலை கூட்­டி­னால், அது கொள்ளை லாபம் என்ற வரை­ய­றைக்­குள் வருமா?மேலும் தொழில் எதி­ரி­கள் வேண்­டு­மென்றே, இந்த ஆணை­யத்­தில், போட்டி நிறு­வ­னங்­களின் தயா­ரிப்­பு­கள் மீது புகார்­கள் கொடுத்து இம்­சைப்­ப­டுத்­தும் வாய்ப்­பும் இருக்­கிறது. இவற்­றைக் கண்­டு­பி­டிப்­பது எப்­படி? இதற்­கான விடை­களை இந்த ஆணை­யம் தான் கண்­டு­பி­டிக்­க­வேண்­டும்.மக்­கள் பலமே மகத்­தா­னதுஅர­சாங்­கம் வழங்க விரும்­பும்சலு­கை­களை இடை­யி­லுள்ள நிறு­வ­னங்­கள் கப­ளீ­க­ரம் செய்ய முனை­யும்­போது, என்ன செய்­ய­வது? இதற்­குத் தீர்வு தான் என்ன?மக்­க­ளா­கிய நாம் தான் இதற்­கான தீர்வை வழங்­கப் போகி­றோம். ஆம், போட்­டி­யும், சந்­தை­யும், ஆத­ர­வுமே வணி­கர்­களின் கண்­ணைத் திறக்­கும்.நீங்­களும் நானும் வாங்­கக்­கூ­டிய விலை­யில், எங்கே தர­மான பொருட்­கள் கிடைக்­கின்­ற­னவோ, அதற்கு ஆத­ரவு தெரி­விக்­க­வேண்­டும். பிற­வற்­றைப் புறக்­க­ணிக்க வேண்­டும். புறக்­க­ணிப்­பின் வலி, வணி­கர்­க­ளுக்­கும் தொழில்­து­றை­யி­ன­ருக்­கும் நன்கு புரி­யும். இது­தான் சந்­தை­யின் வலிமை.சந்­தை­யைத் தீர்­மா­னிப்­பது வணி­கர்­கள் அல்ல, மக்­க­ளா­கிய நாம் தான் என்ற நம்­பிக்­கை­யோடு செயல்­பட்­டால், விலை­கள் சரி­யும், சேவை­களின் தரம் உய­ரும். ஜி.எஸ்.டி.,யின் பலன்­கள் நம்மை வந்து சேரும்.– ஆர்.வெங்­க­டேஷ்பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)