சந்­தைக்கு உண்டு சாதிக்­கும் வலிமைசந்­தைக்கு உண்டு சாதிக்­கும் வலிமை ... கமாடிட்டி சந்தை கமாடிட்டி சந்தை ...
பங்குச் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2017
03:52

தேசிய பங்­குச் சந்தை குறி­யீ­டான, ‘நிப்டி’ கடந்த வார துவக்­கத்­தில் சரிவை சந்­தித்­தா­லும்,வார இறுதி நாட்­களில் உயர்ந்து வியா­பா­ர­மா­கி­யது. நவ., 6ல், சந்தை வர­லாற்று உச்­ச­மான, 10,490 புள்­ளி­களை தொட்­டது. அதன்­பின், தொடர்ச்­சி­யாக, 394 புள்­ளி­கள் குறைந்து, 10,094 புள்­ளி­களை அடைந்­தது.சர்­வ­தேச தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘மூடிஸ்’ இந்­தி­யா­வின் கடன் மதிப்பு தரத்தை, 2004க்கு பின், கடந்த வாரம் அதி­க­ரித்­தது. இதை­ய­டுத்து, வெளி­நாட்டு நிதி நிறு­வ­னங்­கள் மற்­றும் பிற முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, இது ஒரு வாய்ப்­பாக அமை­யும் என, கரு­தப்­பட்­டது. இந்­திய நிறு­வ­னங்­கள், வெளி­நாட்டு வங்­கி­களில், எளி­தில் கடன் பெற உத­வி­யாக இருக்­கும் என்ற கண்­ணோட்­டத்­தால், சந்­தை­யில் பங்­கு­கள் விலை அதி­க­ரித்­தது.இது, வரும் நாட்­களில், சந்­தைக்கு சாத­க­மான போக்கை உரு­வாக்­கும். இதன்­படி, பங்­கு­கள் விலை உயர்ந்து காணப்­படும்.நவ., 30ல், உள்­நாட்டு மொத்த உற்­பத்தி புள்ளி விப­ரம் மற்­றும், ‘ஒபெக்’ நாடு­களின் உற்­பத்தி குறைப்பு நீட்­டிப்பு கூட்ட முடி­வு­கள் ஆகி­யவை, வெளி வர உள்ளன.அமெ­ரிக்க வட்டி விகி­தம் குறித்த கூட்­டம், டிச., 12, 13ல் நடை­பெற உள்­ளது. டிச., 18ல், குஜ­ராத் தேர்­தல் முடி­வு­கள் வரும். வரும் நாட்­களில், இவற்­றின் தாக்­கம் சந்­தை­யில் எதி­ரொ­லிக்­கும்.அமெ­ரிக்க மற்­றும் ஐரோப்­பிய சந்­தை­கள், தொடர்ந்து உயர்வை சந்­தித்து வரு­கின்றன. அமெ­ரிக்க அரசு கொண்டு வந்­துள்ள வரி விகித சீர்­தி­ருத்­தம், ‘செனட்’ சபை­யில் நிறை­வேற்­றப்­ப­டா­மல் இருக்­கிறது. மேலும், இனி இரு­முறை வட்டி விகி­தம் உயர்த்­தப்­படும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இந்த நிதி­யாண்­டின், இரண்­டாம் மற்­றும் மூன்­றாம் காலாண்டு முடி­வு­களில், ஜி.எஸ்.டி.,யின் தாக்­கத்தை, சிறி­த­ளவு உணர முடி­யும்.‘நிப்டி’ ஏழு நாட்­க­ளுக்கு பின், வார இறு­தி­யில், சரி­வில் இருந்து உயர்ந்­தது. அடுத்த ரெசிஸ்­டென்ட், 10,460 மற்­றும் 10,590 ஆகும். சப்­போர்ட், 10,240 மற்­றும் 10,090 ஆகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)