பதிவு செய்த நாள்
26 நவ2017
03:23
யமஹா நிறுவனம், அதன், ‘எம்.டி., – 09’ ரக பைக்கின் மேம்பட்ட மாடலை, சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. எனினும், சந்தையில் கிடைக்கும் இப்போதைய மாடலை விட, ‘ஸ்டைல்’ அம்சங்களில் கூடுதல்,ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. எனினும், இப்புதிய பைக்கின் விலை குறைக்கப்பட்டு உள்ளது. டில்லியில், ஷோரூம் துவக்க விலை, 10.88 லட்சம் ரூபாய். முந்தையதை விட, 48 ஆயிரம் ரூபாய் குறைவு.இந்த, ‘நேக்கட் ஸ்ட்ரீட் பைட்டர்’ பைக், முந்தைய மாடலை போலவே, முழுக்க முழுக்க, வெளிநாட்டில் தயாராகி இறக்குமதி செய்யப்படுகிறது. இதில், புதிய, எல்.இ.டி., விளக்குகள், ரேடியேட்டருக்கு புதிய, ‘பின்’கள், பெரிய, ‘ஏர் ஸ்கூப்’ மற்றும் புதிய, ‘ரியர் வியூ மிரர்’ என, பல கூடுதல் அம்சங்கள் உள்ளன. பின்புறத்தில் உள்ள, ‘டெயில் லேம்ப்’ வாகனத்தின் உடலுடன் சேர்த்தார் போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. முன்புற, ‘சஸ்பென்ஷன்’ மற்றும், ‘சீட்’ ஆகியவை புதிது. எனினும், முன்பிருந்த, 115 எச்.பி., திறனை உற்பத்தி செய்யும், அதே, 847 ‘சிசி’ இன்ஜின் தொடர்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|