மத்திய அரசு அறிவிப்பு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்கு  வரிச்சலுகை 2 சதவீதம் உயர்வுமத்திய அரசு அறிவிப்பு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்கு வரிச்சலுகை 2 சதவீதம் ... ... இ.டி.எப்., எனும் முத­லீட்டு புரட்சி இ.டி.எப்., எனும் முத­லீட்டு புரட்சி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமாடிட்டி சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2017
00:57

கச்சா எண்ணெய்
கச்சா எண்­ணெய் விலை, இரண்டு ஆண்டு உச்­சத்தை கடந்த வாரம் எட்­டி­யது. சர்­வ­தேச சந்­தை­யில், ஒரு பேரல், 58.95 டாலர் என்ற அள­வி­லும், உள்­நாட்டு பொருள் வாணிப சந்­தை­யான, எம்.சி.எக்ஸ்ல் ஒரு பேரல், 3,800 ரூபாய் வரை­யும் உயர்ந்­தி­ருந்­தது. கச்சா எண்­ணெய் மொத்த உற்­பத்­தி­யில், மிகப்­பெ­ரிய மற்­றும் முதன்மை நாடாக, சவுதி அரே­பி­யா­வும், இரண்­டாம் இடத்­தில், ரஷ்­யா­வும் உள்ளன. இந்­நா­டு­கள், ஒபெக் மேற்­கொண்ட உற்­பத்தி குறைப்பு நட­வ­டிக்­கைக்கு ஆத­ர­வாக இருக்­கின்றன.

மேலும், வரும் மார்ச், 2018 உடன் முடி­வ­டைய இருக்­கும் உற்­பத்தி குறைப்பு ஒப்­பந்­தத்தை மேலும் ஒன்­பது மாதங்­க­ளுக்கு அதா­வது, டிசம்­பர், 2018 வரை நீட்­டிப்­ப­தற்கு ஆத­ர­வா­க­வும் இருப்­ப­தாக தெரி­வித்­தது. இதை­ய­டுத்து, விலை உயர ஆரம்­பித்­தது. அமெ­ரிக்கா தன் எண்­ணெய் தேவை­களை சொந்த உற்­பத்தி மற்­றும் இறக்­கு­மதி மூல­மாக நிறை­வேற்றி வரு­கிறது. அமெ­ரிக்க இறக்­கு­ம­தி­யில் அதிக பங்கு வகிக்­கும் நாடான கனடா, உலக மொத்த கச்சா எண்­ணெய் உற்­பத்­தி­யில், மூன்­றா­வது இடத்தை வகிக்­கிறது.

கன­டா­வி­லி­ருந்து கச்சா எண்­ணெய் குழாய் மூல­மாக அமெ­ரிக்­கா­வுக்கு கொண்டு வரப்­ப­டு­கிறது. அண்­மை­யில் இக்­கு­ழா­யில் ஏற்­பட்ட அடைப்பு கார­ண­மாக இறக்­கு­மதி சேவை தற்­கா­லி­க­மாக துண்­டிக்­கப்­பட்­டது. இதன் கார­ண­மாக, அமெ­ரிக்­கா­வில் திடீர் தட்­டுப்­பாடு நில­வி­யது. இது­வும் எண்­ணெய் விலை சட்­டென்று உயர கார­ண­மாகி விட்­டது.வரும் வியா­ழக்­கி­ழமை அன்று, வியன்னா நக­ரத்­தில், ஒபெக் உறுப்பு நாடு­களின் கூட்­டம் நடை­பெற உள்­ளது. மிகுந்த எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு இடையே இக்­கூட்­ட­மா­னது கூட்­டப்­பட இருக்­கிறது. இக்­கூட்­டத்­தில் எடுக்­கப்­படும் தீர்­மா­னம் சந்­தை­யில் கச்சா எண்­ணெய் விலை­யின் போக்கை நிர்­ண­யிக்­கும். வரும் நாட்­களில், 60 டாலர் என்­பது அடுத்த இலக்­கா­கும்.
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 3,752 3,630 3,875 4,000என்.ஒய்.எம்.இ.எக்ஸ். (டாலர்) 56.70 54.50 60.00 62.50

தங்கம், வெள்ளி
தங்­கம் மற்­றும் வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலை கடந்த வாரம் சரி­வில் முடி­வ­டைந்­தன. வார ஆரம்­பத்­தில் விலை குறைந்­தது. பின்­னர் இறுதி நாட்­களில் சரி­வி­லி­ருந்து சிறிய அள­வில் மீண்­டா­லும், முந்­தைய வாரத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் குறைந்தே உயர்ந்­தது.தங்­கத்­தின் ஆப­ரண தேவை­யில், சீனா மற்­றும் இந்­தியா ஆகிய நாடு­கள், மிக முக்­கி­ய­மான பங்கு வகிக்­கின்றன. உள்­நாட்டு சந்­தை­யில், தங்­கத்­தின் நுகர்­வில் கடந்த வாரங்­களில் தொய்வு காணப்­பட்­டது. சீனா­வின் இறக்­கு­ம­தி­யா­னது, நவம்­பர் மாதம் குறை­வா­கும். இருப்­பி­னும், டிசம்­பர் மாதம் இறக்­கு­மதி அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஆசி­யா­வின் அடுத்த பெரிய சந்தை, ஜப்­பான் ஆகும். இங்கு ஆப­ரண நுகர்வு உயர்ந்து காணப்­ப­டு­கிறது. மேலும் டால­ருக்கு நிக­ரான, ’யென்’ மதிப்பு உயர்ந்து வரு­வ­தால், தங்­கம் விலை சற்று சரிந்­தது. இத­னால் வாங்­கும் திறன் அதி­க­ரித்து காணப்­ப­டு­கிறது. ஆசி­யா­வில்­தான் ஆப­ர­ணத் தங்­கத்­தின் தேவை அதி­க­மாக இருக்­கிறது. அத­னால் நுகர்­வும் அதி­க­மாக இருக்­கிறது. அமெ­ரிக்க பங்கு சந்­தை­கள் தொடர்ந்து உயர்ந்த வண்­ணம் உள்ளன. இதன் கார­ண­மா­க­வும் தங்­கம் மீதான மூத­லீட்டு ஆர்­வம் குறைந்­து­விட்­டது. இருப்­பி­னும், அமெ­ரிக்க நாணய குறி­யீ­டான, டாலர் இண்­டெக்ஸ் பிற நாண­யங்­க­ளுக்கு எதி­ராக மதிப்பு குறைந்து வரு­கிறது. இத­னால் தங்­கம் மற்­றும் வெள்ளி விலை வீழ்ச்­சி­யா­னது கட்­டுக்­குள் கொண்டு வரப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மேலும், அமெ­ரிக்க மத்­திய வங்கி வட்டி விகி­தம் குறித்த அறி­விப்பு வெளி­யாக இருக்­கிறது. அடுத்த மாதம், 12 மற்­றும் 13 தேதி­களில் நடை­பெற உள்ள நிதிக் கொள்கை கூட்­டத்­தில் 0.25 சத­வீ­தம் அள­வுக்கு வட்­டி­வி­கி­தம் குறைக்­கப்­படும் எனும் பர­வ­லான கருத்­தும் இருக்­கிறது. இவ்­வி­ரண்டு கார­ணங்­க­ளை வைத்து பார்க்­கும்­போது விலை குறைவு என்­பது தற்­கா­லி­க­மா­னது என்றே கூற­லாம். தங்­கத்­தின் விலை­யைப் பொறுத்­த­வரை, 1,260 டாலர் என்­பது நல்ல சப்­போர்ட் ஆகும். இதனை கடக்­காத நிலை­யில் விலை உயர வாய்ப்பு உள்­ளது.

தங்கம்:
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 29,350 29,020 29,550 29,900காம்எக்ஸ் (டாலர்) 1,282 1,270 1,294 1,308

வெள்ளி
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 39,080 38,610 39,670 40,020காம்எக்ஸ் (டாலர்) 16.90 16.55 17.16 17.22

செம்பு
செம்பு விலை­யா­னது, கடந்த ஒரு மாத கால­மாக சரி­வில் இருந்து வந்­தது. இந்த ஆண்­டின் உச்­சத்தை, அக்­டோ­பர் மாதம் எட்­டி­யது. அதன் பின் சரி­வில் இருந்து வந்­தது. கடந்த வாரம் ஏற்­பட்ட மாற்­றங்­கள் கார­ண­மாக, விலை உயர்ந்து வர்த்­த­க­மா­கி­யது. சர்­வ­தேச சந்­தை­யான, லண்­டன் மெட்­டல் எக்ஸ்­சேஞ்­சில் செம்பு விலை ஒரு டன், 7 ஆயி­ரம் டால­ராக இருந்­தது. இதற்கு அமெ­ரிக்க நாணய மதிப்பு குறைவு மற்­றும் செம்பு வரத்து குறைவு கார­ண­மா­கும்.

உல­கத்­தின் மொத்த செம்பு உப­யோ­கத்­தில், 50 சத­வீ­தம், சீனா உப­யோ­கிப்­ப­தா­கும். சொந்த உள்­நாட்டு உற்­பத்தி மற்­றும் இறக்­கு­மதி மூல­மாக, சீனா­வின் தேவை நிறை­வேற்­றப்­ப­டு­கிறது. தென் அமெ­ரிக்க நாடு­க­ளுக்கு, சீனா மிகப்­பெ­ரிய ஏற்­று­மதி நாடு ஆகும். லண்­டன் மெட்­டல் எக்ஸ்­சேஞ்ச் புள்­ளி­ வி­வ­ரப்­படி, செம்பு இருப்பு, 5,475 டன் குறைந்து, 2,13,600 டன் என ஆகி­யி­ருக்­கிறது. மேலும் செப்­டம்­பர், 15 முதல் இது­வரை இருப்பு, 30 சத­வீ­தம் குறைந்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது. வரும் நாட்­களில் விலை உயர்ந்து வர்த்­த­க­மாக வாய்ப்­புள்­ளது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 448.20 443.00 452.00 460.00

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)