ஓட துவங்­கி­விட்­டதா ஜி.டி.பி., தேர்?ஓட துவங்­கி­விட்­டதா ஜி.டி.பி., தேர்? ... வாடகை ஒப்­பந்­தத்தில் கவ­னிக்க வேண்­டி­யவை! வாடகை ஒப்­பந்­தத்தில் கவ­னிக்க வேண்­டி­யவை! ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சிறந்த முடி­வு­களை எடுக்கும் வழி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2017
01:09

முடி­வெ­டுப்­பதில் உள்­ளு­ணர்வை நம்­பு­வதில் உள்ள சிக்­கல்­களை விளக்கும், சிப் ஹீத் மற்றும் டேன் ஹீத் அவற்­றுக்கு தீர்வு கண்டு, சிறந்த முடி­வு­களை எடுக்கும் வழி­களை, தங்கள், ‘டிசிஸிவ்’ புத்­த­கத்தில் விளக்­கு­கின்­றனர்.

முடி­வெ­டுக்கும் போது, உள்­ளு­ணர்வு சொல்­வதை கேட்டு நடப்­பதில், மூன்று வித­மான சிக்­கல்கள் உள்­ளன. முதல் சிக்கல் என்­ன­வெனில், நாம் இரண்­டுக்கும் மேற்­பட்ட வாய்ப்­பு­களை பரி­சீ­லிப்­ப­தில்லை என்­ப­தாகும். ஓஹியோ பல்­க­லைக்­க­ழ­கத்தின் பால் நட் எனும் ஆய்­வாளர், முக்­கிய நிறு­வ­னங்­களின் முடி­வுகள் குறித்து நடத்­திய ஆய்வில், 69 சத­வீத சூழலில், ஒரே ஒரு மாற்று வாய்ப்பு மட்­டுமே இருந்­த­தாக குறிப்­பி­டு­கிறார். இரண்­டா­வது சிக்கல், நாம் பெரும்­பாலும் குறு­கிய கால உணர்­வு­க­ளுக்கு இலக்­காகி, நீண்ட கால சித்­தி­ரத்தை பார்க்கத் தவறி விடு­கிறோம். உங்­க­ளு­டைய கடந்த கால மோச­மான முடி­வு­களை திரும்பி பார்த்­தாலே, இதை புரிந்து கொள்ள முடியும். மூன்­றா­வ­தாக நாம் பெரும்­பாலும், நம் முடி­வுகள் சரி­யாக இருக்கும் என, நம்­பி­வி­டு­வது தான். ஆனால் உண்­மையில் அவை அவ்­வாறு இருப்­ப­தில்லை. இந்த சிக்­கல்­களை தவிர்க்க, வாய்ப்­பு­களை அதி­கப்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்.

கையில் ஒரு மாய விளக்கு இருப்­ப­தாக நினைத்து, அதில் தேய்த்­ததும் வாய்ப்­புகள் எல்லாம் மறைந்து போய்­விட்­ட­தாக அனு­மா­னித்து, புதிய மாற்று வாய்ப்­புகள் குறித்து யோசிக்க வேண்டும். நம் முன் நல்ல வாய்ப்­புகள் இல்லை எனும் அனு­மா­னத்தில், புதிய வாய்ப்­பு­களை தேடும் போது, சிறந்த முடி­வுகள் தோன்றும் வாய்ப்­புள்­ளது. மற்­றொரு வழி, பிரச்­னையில் இருந்து விலகி நின்று யோசிப்­பதாகும். ஒரு­முறை ஆய்வின் போது, மாண­வர்­க­ளுக்கு இரண்டு வித­மான வேலை­வாய்ப்­புகள் அளிக்­கப்­பட்­டன. முதல் வேலை, நல்ல சம்­பளம் ஆனால் திருப்தி அளிக்­கா­தது; இரண்­டா­வது வேலை திருப்தி அளிக்க கூடி­யது. ஆனால் குறைந்த சம்­பளம் என தெரி­விக்­கப்­பட்ட போது, 66 சத­வீத மாண­வர்கள் முதல் வேலையை தேர்வு செய்­தனர். ஆனால் நண்­பர்­க­ளுக்கு பரிந்­து­ரைக்­கு­மாறு கூறிய போது, 88 சத­வீத மாண­வர்கள் இரண்­டா­வது வேலையை பரிந்­து­ரைப்போம் என்­றனர். நெருங்­கிய நண்­பர்­க­ளுக்கு எது சிறந்­தது என யோசித்த போது, குறு­கிய கால நலனை விட்டு விலகி, அவர்­களால் யோசிக்க முடிந்­தது.

முடி­வெ­டுப்­ப­தற்கு முன், சோதித்து பார்த்து விடு­வது இன்­னொரு சிறந்த வழி­யாகும். பெரிய முடி­வு­களை எடுக்கும் முன், நடை­முறை நிலையை அறிய, அவற்றை சோதித்து பார்க்க வேண்டும். தவ­றாக நடந்­ததால் என்­னாகும் எனும் நிலைக்கு தயா­ராக இருப்­பது ஏற்­றது. எப்­போதும் மேலும் ஒரு மாற்று வாய்ப்பை கைவசம் வைத்­தி­ருப்­பது நல்­லது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)