ஓட துவங்­கி­விட்­டதா ஜி.டி.பி., தேர்?ஓட துவங்­கி­விட்­டதா ஜி.டி.பி., தேர்? ... ரூபாயின் மதிப்பு சரிவு : ரூ.64.79 ரூபாயின் மதிப்பு சரிவு : ரூ.64.79 ...
வாடகை ஒப்­பந்­தத்தில் கவ­னிக்க வேண்­டி­யவை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2017
01:11

வாடகை வீட்டை நாடும் போது, குடி­யி­ருப்­ப­தற்­கான வாடகை ஒப்­பந்­தத்தை அமைத்து கொள்­வது நல்­லது. வாடகை ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­திடும் முன், அதில் முக்­கி­ய­மான சில அம்­சங்­களை கவ­னிக்க தவ­றக்­கூ­டாது. ஒப்­பந்­தத்தில் முதலில் கவ­னிக்க வேண்­டிய அம்சம், வாடகை தொகை மற்றும் அதை உயர்த்­து­வது தொடர்­பான ஷரத்­தாகும். ஒப்­பந்­தத்தில் உயர்த்­து­வது பற்றி எதுவும் குறிப்­பி­டாமல் இருந்து, சில மாதங்­க­ளி­லேயே வாட­கையை உயர்த்­தினால், வீட்­டுக்­கா­ரரை இது குறித்து எளி­தாக எதிர்­கொள்­ளலாம். பொது­வாக ஆண்­டிற்கு, 10 சத­வீத உயர்வு இருக்­கலாம்.

இது குறித்து, ஒப்­பந்­தத்தில் தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளதா என, பார்க்க வேண்டும். ஆனால், பெரும்­பாலும் ஒப்­பந்தம், 11 மாதக் காலத்­திற்கு செய்­யப்­பட்டு, அதன்பின் புதுப்­பிக்­கப்­ப­டு­வதை மனதில் கொள்ள வேண்டும். குடி­யி­ருக்கும் காலம், ஒப்­பந்­தத்தை முறித்துக் கொள்ளும் ஷரத்து, ‘நோட்டீஸ்’ காலம் ஆகி­யவை பற்­றியும் குறிப்­பிட்டு இ­ருக்க வேண்டும்.

கட்­ட­ணங்கள்:
வாடகை தொகை தாம­த­மானால், ஏதேனும் அப­ராதம் உண்டா என, தெளி­வு­படுத்திக் கொள்ள வேண்டும். சொசைட்டி அமைப்பு, உடற்­ப­யிற்சி கூடம் போன்ற, வச­தி­க­ளுக்­கான தனி கட்­டணம் உண்டா என்றும் தெளி­வு­படுத்திக் கொள்ள வேண்டும். பொருந்­தக்­கூ­டிய எல்லா கட்­ட­ணங்­களும் ஒப்­பந்­தத்தில் குறிப்­பிட்­டி­ருக்க வேண்டும். ஏற்­க­னவே குடி­யி­ருந்­தவர் அல்­லது வீட்டு உரி­மை­யாளர் ஏதேனும் கட்­ட­ணத்தை நிலு­வையில் வைத்­துள்­ளாரா என்றும் கவ­னிக்க வேண்டும்.

இதர நிபந்­த­னைகள்
ஒப்­பந்­தத்தில் வேறு ஏதேனும் நிபந்­த­னைகள் உள்­ள­னவா என, தெரிந்து கொள்ள வேண்டும். உதா­ர­ணத்­திற்கு ஒரு சிலர் செல்­லப்­பி­ரா­ணிகள் வைத்­தி­ருக்க தடை சொல்­லலாம்; இரவு நேரத்தில் சத்­த­மாக இசை கேட்கக் கூடாது என சொல்­லலாம். முக்­கி­ய­மாக, வீட்டை வாட­கைக்கு விடு­வது உரி­மை­யா­ளரா; அல்­லது குடி­யி­ருப்­பவர் விடு­கி­றாரா... என, தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டை நேரில் சென்று பார்­வை­யிட வேண்டும். ஏதேனும் பழுது இருக்­கி­றதா; எல்லாம் சரி­யாக இருக்­கி­றதா... என, கவ­னிக்க வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)