வாடகை ஒப்­பந்­தத்தில் கவ­னிக்க வேண்­டி­யவை!வாடகை ஒப்­பந்­தத்தில் கவ­னிக்க வேண்­டி­யவை! ... ரூபாயின் மதிப்பு சரிவு : ரூ.64.79 ரூபாயின் மதிப்பு சரிவு : ரூ.64.79 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஆதார் எண்­ணுடன் இணைக்க வேண்­டிய நிதிச்­சே­வைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2017
01:15

வங்கி கணக்கு, மியூச்­சுவல் பண்ட், காப்­பீடு உள்­ளிட்ட பல்­வேறு நிதிச்­சே­வை­களை, ஆதார் எண்­ணுடன் இணைப்­பது அவ­சி­ய­மாகும் நிலையில், இவற்­றிற்­கான கெடு பற்றி ஒரு பார்வை.

சமூக நலத்­திட்­டங்­க­ளுக்­கான பலன் பெறு­வது தவிர, பல்­வேறு நிதிச்­சே­வை­க­ளையும் ஆதார் அடை ­யாள எண்­ணுடன் இணைப்­பது, தவிர்க்க இய­லா­த­தாகி இருக்­கி­றது. ஏற்­க­னவே வங்கி சேமிப்பு கணக்கு, மியூச்­சுவல் பண்ட் திட்ட முத­லீ­டுகள், ஆதார் எண்­ணுடன் இணைக்­கப்­பட வேண்டும் என அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. அண்­மையில் காப்­பீட்டு திட்­டங்­களும் ஆதார் எண்­ணுடன் இணைக்­கப்­பட வேண்டும் என, காப்­பீட்டு ஆணையம் தெரி­வித்து இ­ருந்­தது. முக்­கிய நிதிச்­சே­வை­களை ஆதார் எண்­ணுடன் இணைப்­பதற்­கான காலக்­கெ­டுவும் நெருங்கி கொண்­டி­ருக்­கி­றது. எந்­த­தெந்த சேவை­களை ஆதார் எண்­ணுடன் இணைக்க வேண்டும் என்­பது குறித்து, ஒரு கண்­ணோட்டம்.

முதலில் மொபைல்:
மற்ற சேவைகள் போலவே மொபைல் எண்­ணையும் ஆதார் எண்­ணுடன் இணைப்­பது அவ­சி­ய­மா­கி­றது. மொபைல் எண்ணை இணைக்க, அடுத்த ஆண்டு பிப்., 6ம் தேதி வரை, அவ­காசம் இருந்­தாலும், முதலில் மொபைல் எண்ணை ஆதார் எண்­ணுடன் இணைத்து விடு­வது நல்­லது. ஏனெனில் மற்ற நிதிச்­சே­வை­களை, ஆதார் எண்­ணுடன் இணைக்கும் போது, அதை நிறை­வேற்ற தேவை­யான ஒரு முறை பாஸ்­வேர்டை பெறு­வது எளி­தாக இருக்கும். ஆதா­ருடன் மொபைல் எண் அல்­லது இ – மெயில் முக­வரி இணைக்­கப்­பட்­டுள்­ளதா என்­பதை சரி பார்ப்­ப­தற்­கான வசதி, ஆதார் சேவைக்­கான இணை­யத்தில் உள்­ளது. இதன் மூலம், மொபைல் எண் இணைக்­கப்­பட்­டுள்­ளதா என்­பதை உறுதி செய்து கொள்­ளலாம். https://goo.gl/rv7w3v இணைக்­கப்­ப­ட­வில்லை எனில் முதலில் அதற்­கான நட­வ­டிக்­கையை எடுக்க வேண்டும். இதற்­கான நடை­முறை எளி­தாக்­கப்­பட்­டுள்­ளது. டிசம்பர் மாதம் முதல், செல்போன் சேவை நிறு­வன இணை­ய­த­ளத்­திற்கு சென்று ஒரு முறை பாஸ்­வேர்டை பெற்­றுக் ­கொள்­ளலாம். ஆதா­ருடன் இணைக்­கப்­பட்ட மொபைல் எண்­ணிற்கு இது அனுப்பி வைக்­கப்­படும்.

இந்த பாஸ்­வேர்­டையும், ஆதார் எண்­ணையும் சமர்­ப்பித்தால் இணைப்பு அங்­கீ­க­ரிக்­கப்­படும். ஐ.வி.ஆர்.எஸ்., எனப்­படும் குரல் வழி சேவை வச­தியும் இருக்­கி­றது.வங்­கி­சே­வைகள்வங்கி சேமிப்பு கணக்கு மற்றும் மியூச்­சுவல் பண்ட் திட்டங்­க­ளு­டனும் ஆதார் எண்ணை இணைக்க, டிச., 31 வரை அவ­காசம் உள்­ளது. வங்கி கணக்­குடன் ஆதார் எண்ணை இணைக்க, கணக்கு வைத்­துள்ள வங்கி கிளைக்கு நேரில் சென்று, உரிய படி­வத்தை பூர்த்து செய்து வழங்­கலாம். நெட் பேங்கிங் வசதி மூலம் இதை நிறை­வேற்­றலாம். எஸ்.எம்.எஸ்., மூல­மான வச­தியும் அளிக்­கப்­ப­டு­கி­றது. இதே போல மியூச்­சுவல் பண்ட் முத­லீ­டு­கள் இணைப்பை மியூச்­சுவல் பண்ட் நிறு­வன இணை­ய­தளம் அல்­லது வினியோக சேவை அளிக்கும் நிறு­வன இணை­ய­தளம் மூலம் நிறை­வேற்­றலாம். இந்த இணை­ய­த­ளங்­களில் இதற்­கான இணைப்பை காணலாம். மேலும் மியூச்­சுவல் பண்ட் திட்­டங்­களில் முதலீடு செய்ய ஆதார் அடிப்­ப­டை­யி­லான கே.ஒய்.சி., இனி அவ­சியம்.இதே போலவே அஞ்­ச­லக சேமிப்பு உள்­ளிட்ட சிறு­சே­மிப்பு திட்­டங்­க­ளுக்­கான முத­லீ­டு­களும் ஆதார் எண்­ணுடன் இணைக்கப்­பட வேண்டும். பி.பி.எப்., கிசான் விகாஸ் பத்­திரம், தேசிய சேமிப்பு சான்­றிதழ் ஆகி­ய­வற்­றுக்கும் இது பொருந்தும்.

காப்­பீடு:
ஏற்­க­னவே உள்ள முத­லீட்­டா­ளர்கள் தங்கள் ஆதார் எண் உரிய அஞ்­ச­லக அலு­வ­லகம் அல்­லது வங்கி கிளையில் டிசம்பர் மாத இறு­திக்குள் சமர்ப்­பிக்க வேண்டும். மேலும் வரு­மான வரி கணக்கு தாக்கல் செய்ய, பான் கார்டு மற்றும் ஆதார் எண் இணைக்­கப்­ப­டு­வதும் கட்­டா­ய­மாகும்.பங்­குச்­சந்தை முத­லீட்­டிற்கும் ஆதார் இணைப்பு அவ­சியம். பங்கு முத­லீட்டு புரோக்­க­ரிடம் ஆதார் ஸ்கேன் செய்த நகலை அளிக்­கலாம். அவ­ரது இணை­ய­தளம் மூலம் ஆதார் எண்ணை அளிக்­கலாம். காப்­பீடு பாலி­சி­க­ளையும் ஆதார் எண்­ணுடன் இணைக்க வேண்டும். ஆயுள் காப்­பீடு, மருத்­துவ காப்­பீடு, பயண காப்­பீடு உள்­ளிட்­ட­வற்­றுக்கும் இது பொருந்தும். ஆதார் எண்ணின் ஸ்கேன் செய்த நகலை முகவர் அல்­லது ஏஜன்ட் மூலம் சமர்ப்­பிக்­கலாம்.

ஆதார் இணைப்பு:
* வங்கி கணக்கை ஆதார் எண்­ணுடன் இணைக்க வேண்டும்* மியூச்­சுவல் பண்ட் முத­லீடு உள்­ளிட்ட நிதிச்­சே­வை­களை இணைப்­பதும் அவ­சியம்* காப்­பீடு பாலிசிகளை இணைப்­பதும் அவ­சி­ய­மா­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)