‘பயண ரத்து கட்டணத்தை ரத்து செய்க’; விமான நிறுவனங்களிடம் அரசு கண்டிப்பு‘பயண ரத்து கட்டணத்தை ரத்து செய்க’; விமான நிறுவனங்களிடம் அரசு கண்டிப்பு ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.51 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.51 ...
‘ரெப்போ’ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்குமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2017
23:54

புதுடில்லி : ரிசர்வ் வங்­கி­யின் நிதிக் கொள்­கை­யில், வங்­கி­க­ளுக்­கான, ‘ரெப்போ’ வட்டி விகி­தம் குறைக்­கப்­ப­டுமா என, எதிர்­பார்ப்பு எழுந்­துள்­ளது.


ரிசர்வ் வங்­கி­யின் நிதிக் கொள்கை குழு, அக்., 5ல் வெளி­யிட்ட அறிக்­கை­யில், ‘வங்­கி­க­ளுக்கு, ரிசர்வ் வங்கி வழங்­கும் குறு­கிய கால கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்டி, மாற்­ற­மின்றி, 6 சத­வீ­த­மா­கவே தொட­ரும்’ என, தெரி­விக்­கப்­பட்டு இருந்­தது. ‘நாட்­டின் பொரு­ளா­தாரம் வளர்ச்சி காண்­ப­தற்­கும் அல்­லது ஸ்தி­ர­மாக இருப்­ப­தற்­கு­மான கார­ணி­கள், மேலும் வலுப்­பெ­றா­த­வரை, பண­வீக்­கத்­தின் தாக்­கத்தை கருதி, வட்டி விகி­தத்­தில் மாற்­றம் செய்­ய­வில்லை’ என, ரிசர்வ் வங்கி கவர்­னர், உர்­ஜித் படேல் தெரி­வித்­தி­ருந்­தார்.


இந்­நி­லை­யில், டிச., 6ல், ரிசர்வ் வங்­கி­யின், அடுத்த நிதிக் கொள்கை அறி­விப்பு வெளி­யாக உள்­ளது. அதில், ‘ரெப்போ விகி­தம் குறைக்­கப்­பட வேண்­டும்’ என, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் விரும்­பு­வ­தாக, தக­வல் வெளி­யாகி உள்­ளது.


இது குறித்து, பெயர் வெளி­யிட விரும்­பாத அரசு உய­ர­தி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, ஏப்., – ஜூன் வரை, 5.7 சத­வீ­த­மாக குறைந்து இருந்­தது. ஜூனில், 1.54 சத­வீ­த­மாக இருந்த சில்­லரை பண­வீக்­கம், ஆகஸ்­டில், 3.36 சத­வீ­த­மாக அதி­க­ரித்து, செப்­டம்­ப­ரில், 3.28 சத­வீ­த­மாக குறைந்­தது. எனி­னும், ரிசர்வ் வங்கி, ரெப்போ விகி­தத்தை மாற்­ற­வில்லை. அக்­டோ­ப­ரில், சில்­லரை பண­வீக்­கம், 3.58 சத­வீ­த­மாக உயர்ந்­துள்ள போதும், அது, ரிசர்வ் வங்கி நிர்­ண­யித்த, 4 சத­வீத வரம்­பிற்­குள் தான் உள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.


இந்­நி­லை­யில், ஜி.எஸ்.டி., கவுன்­சில், 210 பொருட்­க­ளுக்­கான வரியை குறைத்­துள்­ளது. ஓட்­டல்­க­ளுக்கு சீராக, 5 சத­வீத வரி நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. கரீப் பருவ உற்­பத்தி, 2.8 சத­வீ­தம் குறை­யும் என, மதிப்­பி­டப்­பட்­டா­லும், பருவ மழை பொழிவு சீராக இருக்­கும் என, கூறப்­ப­டு­கிறது. சமீ­பத்­தில், இந்­தி­யா­வின் கடன் தகுதி மதிப்பை, ‘மூடிஸ்’ தர நிர்­ணய நிறு­வ­னம் உயர்த்தி உள்­ளது. பிர­த­மர் மோடி­யின் சீர்­தி­ருத்த திட்­டங்­களை பாராட்­டி­யுள்ள, ஸ்டாண்­டர்டு அண்டு பூர்ஸ் நிறு­வ­னம், ‘இந்­தி­யா­வின் கடன் தகுதி மதிப்­பில் மாற்­ற­மில்லை’ என, கூறி­யுள்­ளது.


இது போன்ற அம்­சங்­க­ளால், டிச., 6ல், ரெப்போ வட்டி குறைக்­கப்­ப­ட­லாம். அவ்­வாறு இல்­லை­யென்­றா­லும், 2018 பிப்­ர­வ­ரி­யில் வெளி­யாக உள்ள, அடுத்த நிதிக் கொள்கை அறி­விப்­பி­லா­வது, ரெப்போ வட்டி குறைக்­கப்­பட வேண்­டும் என, நிதி­ய­மைச்­சக வட்­டா­ரம் எதிர்­பார்க்­கிறது. இவ்­வாறு அவர் கூறி­னார்.


நிலைப்பாடு சரியல்ல:

ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழு­வின் நிலைப்­பாடு, வரை­ய­றுக்­கப்­பட்ட இலக்­கிற்கு வெளியே உள்­ளது. ஓராண்டு கால­மாக, ரிசர்வ் வங்கி நிர்­ண­யித்த இலக்­கிற்கு குறை­வா­கவே பண­வீக்­கம் உள்­ளது. ஆனால், ‘ரெப்போ’ வட்­டியை குறைப்­ப­தில் மட்­டும், ரிசர்வ் வங்கி ஏனோ மெத்­த­ன­மா­கவே இருக்­கிறது

-சுர்ஜித் பல்லா, உறுப்பினர், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)