பதிவு செய்த நாள்
29 நவ2017
23:52

கோவை : மதுரை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள, சர்வதேச சரக்கு முனையம், டிச., 15 முதல், செயல்பாட்டுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, தமிழக வர்த்தகம் மற்றும் தொழில் துறை மூத்த தலைவர், ரத்னவேலு கூறியதாவது: கடந்த, 2010 டிசம்பரில், மத்திய நிதி அமைச்சகம், ‘மதுரை விமான நிலையத்தில், சர்வதேச சரக்கு முனையம் அமைக்கப்படும்’ என, அறிவித்தது. இது தற்போது, ஏழு ஆண்டுகளுக்கு பின், டிச., 15 முதல், செயல்பாட்டுக்கு வர உள்ளது. இது, இந்த பிராந்தியத்திற்கு கிடைத்த வரப் பிரசாதமாகும். மேலும், இந்த பிராந்தியத்தில், அதிக ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளதால், சர்வதேச சரக்கு முனையம் அமைக்க வலியுறுத்தி வந்தோம்.
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் இருந்து, காய்கறிகள், மலர்கள், பழங்கள், ஆடைகள், கைத்தறி பொருட்கள் உள்ளிட்டவை, மாதம், 150 – 200 டன் என்ற அளவில் மற்ற விமான நிலையங்கள் மூலம், ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது, மதுரையில் சர்வதேச சரக்கு முனையம் அமைந்த பின், மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|