‘பிட்காயின்’ 10,000 டாலரை கடந்து சாதனை‘பிட்காயின்’ 10,000 டாலரை கடந்து சாதனை ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.55 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.55 ...
‘தொழில்நுட்பம், அறிவியல் துறைகளில் பெண்களின் பங்களிப்பு உயர வேண்டும்’: இவாங்கா டிரம்ப் வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2017
23:54

ஐதராபாத் : ‘‘தொழில்­நுட்­பம், அறி­வி­யல் உட்­பட, அதிக வளர்ச்சி வாய்ப்­புள்ள துறை­களில், பெண்­களின் பங்­க­ளிப்பை அதி­க­ரிக்­கும் வகை­யில், அரசு கொள்­கை­களை வகுக்க வேண்­டும்,’’ என, அமெ­ரிக்க அதி­பர், டொனால்டு டிரம்ப் மகளும், ஆலோ­ச­க­ரு­மான, இவாங்கா டிரம்ப் வலி­யு­றுத்தி உள்­ளார்.


தெலுங்­கானா மாநி­லம், ஐத­ரா­பா­தில், சர்­வ­தேச தொழில் முனை­வோர் மாநாட்­டின் இரண்­டா­வது நாளான நேற்று, ‘பணி­யா­ளர் மேம்­பாடு மற்­றும் திறன் பயிற்­சி­களில், புதிய கண்­டு­பி­டிப்­பு­களை உரு­வாக்க நம்­மால் முடி­யும்’ என்ற தலைப்­பில், கருத்­த­ரங்­கம் நடை­பெற்­றது.


இதில், இவாங்கா டிரம்ப் பேசி­ய­தா­வது: அமெ­ரிக்­கா­வில், ஆண், பெண் தொழி­லா­ளர்­களின், ஊதிய விகித சமன்­பாட்­டிற்­கான கொள்­கை­களின் தேக்க நிலையை மாற்ற, ஒவ்­வொரு அதி­ப­ரும் முயற்சி மேற்­கொண்டு வந்­துள்­ள­னர். அனைத்து பெண்­களும், பணி­யாற்­றும் பெண்­கள் தான். அவர்­கள், தங்­கள் குடும்­பத்­திற்­கா­கவோ அல்­லது வல்­லு­ன­ரா­கவோ பணி­யாற்­று­கின்­ற­னர். ஒரு பெண், தான் ஈட்­டும், 1 டால­ரில், தன் குடும்­பத்­திற்­கும், சமூ­கத்­திற்­கும், 90 சென்ட் செல­வ­ழிக்­கி­றார்.


அமெ­ரிக்­கா­வில், 24 சத­வீத பெண்­கள் மட்­டுமே, கணினி வல்­லு­னர்­க­ளாக உள்­ள­னர்; 13 சத­வீத பெண்­கள், தொழில் முனை­வோ­ராக விளங்­கு­கின்­ற­னர். அமெ­ரிக்க அரசு, ‘ஸ்டெம்’ கல்­வித் திட்­டத்­தில், அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யி­யல் மற்­றும் கணித துறை­களில், பெண்­களின் பங்­க­ளிப்பை அதி­க­ரிக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ளது. இதன் மூலம், இத்­து­றை­களில், ஆண்­க­ளுக்கு நிக­ரான பெண்­களின் பங்கு உய­ரும். இவ்­வாறு அவர் கூறி­னார்.


இக்­க­ருத்­த­ரங்­கில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நிர்­வாக இயக்­கு­னர், சந்தா கோச்­சார் பேசி­ய­தா­வது: பெண்­கள், தொழில் மற்­றும் பணி­யில் வெற்றி பெற, கல்வி, ஊக்­கம் மற்­றும் சுயா­தி­கா­ரம் என்ற மூன்று அம்­சங்­கள் முக்­கி­யம். இந்­தியா, பெண்­களின் சுயா­தி­கார முன்­னேற்­றத்­திற்கு, ஏரா­ள­மான திட்­டங்­களை செயல்­ப­டுத்­து­கிறது. இதன் கார­ண­மாக, அர­சி­யல், விளை­யாட்டு, ராணு­வம் உட்­பட பல்­வேறு துறை­களில், பெண்­கள் சாதனை புரி­கின்­ற­னர். எனி­னும், பெண்­கள் முன்­னேற்­றத்­திற்கு, இன்­னும் அதி­கம் செய்ய வேண்­டி­யது உள்­ளது. பட்­ட­தாரி பெண்­களில், 25 சத­வீ­தம் பேர் கூட, பணி­யா­ளர் சமூ­கத்­தில் இடம் பெறா­மல் உள்­ள­னர்.


‘பணிச் சூழ­லில், ஆண், பெண் இடை­வெ­ளியை குறைப்­ப­தன் மூலம், மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில், 70 ஆயி­ரம் கோடி டாலர் அள­விற்கு கூடு­த­லாக அதி­க­ரிக்­கும் ஆற்­றல், இந்­தி­யா­விற்கு உள்­ளது’ என, மெக்­கின்சே ஆய்­வ­றிக்கை தெரி­விக்­கிறது. இவ்­வாறு அவர் கூறி­னார்.


இக்­க­ருத்­த­ரங்­கில், பிரிட்­டன் முன்­னாள் பிர­த­மர், டோனி பிளேயர், மனைவி, செர்ரி பிளே­யர் மற்­றும் சர்­வ­தேச முன்­னணி நிறு­வ­னங்­களின் பெண் உய­ர­தி­கா­ரி­கள் பங்­கேற்­ற­னர்.


மேம்பட்ட ஆற்றல்:

ஆண்­களை விட, தங்­களை தாழ்ந்­த­வர்­க­ளாக பெண்­கள் கரு­தக் கூடாது. பெண்­க­ளுக்கு, தொழில்­நுட்­பக் கல்வி வசதி கிடைத்­தால், அவர்­கள் ஆண்­களை விட மேம்­பட்ட ஆற்­றல் கொண்­ட­வர்­க­ளாக மிளிர்­வர்.

-செர்ரி பிளேயர்
மகளிருக்கான செர்ரி பிளேயர் அறக்கட்டளை நிறுவனர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)