பதிவு செய்த நாள்
03 டிச2017
00:26
மகிந்திரா நிறுவனம், எம்.பி.வி., எனும், ‘மல்டி பர்பஸ் வெஹிகிள்’ வகையைச் சேர்ந்த புதிய வாகனத்தை, புத்தாண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கு, ‘யு321’ என, பெயரிடப்பட்டு உள்ளது. இது, உடல் கூடுடன் சேஸிஸ் இணைந்து ஒரே வார்ப்பாக தயாரிக்கப்படும், ‘மோனோகாக், பாடி’ உடைய வாகனம்.இது, மகிந்திராவின் முதல், மோனோ காக் வாகனம். அதனால், கார் பிரியர்களிடையே, ஒருவித எதிர்பார்ப்பை இது ஏற்படுத்தி உள்ளது.
இதில், ‘எம் பால்கன்’ வகையைச் சேர்ந்த, 130 எச்.பி., திறனுடைய, ‘1.6 லி., டீசல் இன்ஜின்’ பொருத்தப்பட்டு உள்ளது. இதை, மகிந்திரா, ‘ஸாங் யாங்’ நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்து உள்ளது. இதில், ஏழு இருக்கைகள் பொருத்தப்பட்டு உள்ளன. எனினும், இதன் முழு விபரங்களை, அதிகாரபூர்வமாக வெளியிடாமல், மகிந்திரா ரகசியம் காக்கிறது. இதன் விலை, 10 லட்சம் – 15 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|