மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லைமாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை ... வளமான வர்த்தக வாய்ப்பு:சிறகடிக்குது சில்லரை விற்பனை துறை:சிறிய நகரங்களில் பெருகுது முதலீடு வளமான வர்த்தக வாய்ப்பு:சிறகடிக்குது சில்லரை விற்பனை துறை:சிறிய ... ...
ஜி.எஸ்.டி.,அறி­வோம் – தெளி­வோம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2017
00:35

இந்­தி­யா­வில், ஜி.எஸ்.டி., எவ்­வாறு நிர்வகிக்கப்­ப­டு­கிறது?
இந்­தி­யா­வின் கூட்­டாட்சி அமைப்பை மன­தில் வைத்து, இரு பாகங்­க­ளாக, ஜி.எஸ்.டி., பிரிக்­கப்­பட்டு உள்­ளது. அதா­வது, சி.ஜி.எஸ்.டி.,எனப்­படும், மத்­திய, ஜி.எஸ்.டி., மற்­றும், எஸ்.ஜி.எஸ்.டி., எனப்­படும், மாநில ஜி.எஸ்.டி., மத்­திய அர­சும், மாநில அர­சும் பொருட்­கள் மீது ஒரே நேரத்­தில், ஜி.எஸ்.டி., விதிக்­கும். ஒவ்­வொரு சரக்கு மற்­றும் சேவை­களை வழங்­கும் போதும் வரி விதிக்­கப்­படும்.
மாநி­லங்­கள் இடை­யி­லான பரி­மாற்­ற­மாக இருந்­தால், அர­சி­யல் சாச­னத்­தின் பிரிவு, 269 ஏ – 1ன் கீழ், மாநி­லங்­க­ளுக்கு இடையே வினி­யோ­கிக்­கப்­படும், அனைத்து பொருட்­கள் மற்­றும் சேவை­க­ளுக்கு, மத்­திய அரசு, ஐ.ஜி.எஸ்.டி., எனப்­படும், ஒருங்­கிணைந்த சரக்கு மற்­றும் சேவை வரி வசூ­லிக்­கும்.ஐ.ஜி.எஸ்.டி., என்­பது, தோரா­ய­மாக, மத்­திய, ஜி.எஸ்.டி., – மாநில, ஜி.எஸ்.டி., ஆகி­யவை, சேர்ந்த அள­வில் இருக்­கும்.
ஒவ்­வொரு நிலை­யி­லும், பொருட்­கள் அல்லது சேவையை வினி­யோ­கம் செய்­யும் போது, மத்திய, ஜி.எஸ்.டி.,யின் உள்­ளீட்டு வரி வரவை, மத்­திய, ஜி.எஸ்.டி.,யில் ஈடு­செய்ய முடி­யும்.இதே போல, மாநில, ஜி.எஸ்.டி.,யில் உள்ள உள்­ளீட்டு வரி வரவை, மாநில, ஜி.எஸ்.டி.,யுடன் ஈடு­செய்ய முடி­யும். ஆனால், மத்­திய சரக்கு மற்­றும் சேவை வரி­யு­டன், மாநில சரக்கு மற்­றும் சேவை வரியை ஈடு­செய்ய முடி­யாது.
ஒரு குறிப்­பிட்ட சரக்கு மற்­றும் சேவைக்கு, சி.ஜி.எஸ்.டி., – எஸ்.ஜி.எஸ்.டி., எவ்­வாறு விதிக்கப்­ப­டு­கிறது?
சரக்கு மற்­றும் சேவை­க­ளுக்கு, ஒவ்­வொரு பரி­மாற்­றத்­தின் போதும், ஒரே நேரத்­தில், மத்­திய, ஜி.எஸ்.டி., மற்­றும், மாநில, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­படும். மேலும், இரண்­டும் ஒரே விலைஅல்­லது மதிப்­பிற்கு விதிக்­கப்­படும்.சரக்கு அல்­லது சேவை­களின் வினி­யோ­கத்­தின் போது கொடுக்­கப்­படும் தள்­ளு­படி தொகைக்­கும், ஜி.எஸ்.டி.,​ உண்டா?​ஒப்­பந்­தப்­படி செய்­யப்­படும் வினி­யோ­கங்­களுக்கு வழங்­கப்­படும்​,​ தள்­ளு­படி தொகைக்கு, ​​ஜி.எஸ்.டி.,​ இல்லை.
ஜி.எஸ்.டி., விதிப்­பால், நுகர்­வோ­ருக்கு என்ன பயன்?
மத்­திய, மாநில அர­சு­கள், பல்­வேறு வகை­யான மறை­முக வரி­களை விதித்த போது, பொருட்­க­ளுக்கு ஏற்­க­னவே விதிக்­கப்­பட்ட அனைத்து வரி­களும், கணக்­கில் வரவு வைக்­கப்­ப­டு­வ­தில்லை. இத­னால், பெரும்­பா­லான சரக்கு மற்­றும் சேவை­களின் விலை, மறை­முக வரி­க­ளால் அதி­க­ரித்­தது.
தற்­போது, ஜி.எஸ்.டி., மூலம், சரக்கு மற்­றும் சேவை­களின் மதிப்­பு­க­ளுக்கு, ஒரே அள­வான மற்­றும் வெளிப்­ப­டை­யான வரி அளவு விதிக்­கப்­பட்டு, வரவு வைக்­கப்­ப­டு­கிறது.இத­னால், இறுதி நுகர்­வோர் மட்­டும், வெளிப்­படை­யான முறை­யில் வரி செலுத்­தும் நிலை ஏற்­ப­டு­கிறது. மேலும், இந்த வரி­யின் வெளிப்­ப­டைத் தன்மை நிர்­வ­கிப்­ப­தற்கு, சுல­ப­மாக இருக்­கும் கார­ணத்­தா­லும், குள­று­ப­டி­களை கட்­டுப்­ப­டுத்த செய்­யப்­பட்­டுள்ள வழி­மு­றை­க­ளா­லும், பெரும்­பா­லான பொருட்­களின் ஒட்டு மொத்த வரிச்­சுமை குறை­யும். இது, நுகர்­வோ­ருக்கு பய­ன­ளிக்­கும்.
மாநி­லங்­க­ளுக்கு இடையே பரி­மாறி கொள்ளப்­படும், சரக்கு மற்­றும் சேவை­க­ளுக்கு, ஏன், ஐ.ஜி.எஸ்.டி., விதிக்­கப்­ப­டு­கிறது?
‘இன்­புட் டேக்ஸ் கிர­டிட்’டை, ஒரு மாநி­லத்­தில் இருந்து மற்ற மாநி­லத்­துக்கு தடை­யில்­லா­மல் கொண்டு செல்­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே, ஒருங்­கி­ணைந்த, ஜி.எஸ்.டி., வழி­முறை உரு­வாக்­கப்­பட்டு உள்­ளது.
ஜி.எஸ்.டி.,யில், இறக்­கு­ம­திக்கு எவ்­வாறு வரி விதிக்­கப்­படும்?
இறக்­கு­ம­திக்கு விதிக்­கப்­படும் கூடு­தல் கலால் வரி, சிறப்பு கூடு­தல் வரி ஆகி­யவை, ஜூலை, 1க்கு பின், ஜி.எஸ்.டி.,யில் இணைக்­கப்­பட்டு விட்­டது. ஜூலை, 1க்கு பின், ஜி.எஸ்.டி.,யில், அர­சி­யல் சாச­னத்­தின் பிரிவு, 269 ஏ – 1ன் படி, இந்­திய எல்­லைக்­குள் அனைத்து இறக்­கு­ம­திக்­கும், ஐ.ஜி.எஸ்.டி., விதிக்­கப்­படும்.இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்­கள் மற்­றும் சேவை­க­ளுக்கு, உள்­ளீட்டு வரி வரவு எடுத்து கொள்­ள­லாம். இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்­களை பயன்­ப­டுத்­தும் மாநி­லங்­கள், இறக்­கு­ம­திக்­காக செலுத்­தப்­படும் ஒருங்­கி­ணைந்த, ஜி.எஸ்.டி.,யில் இருந்து, தங்­கள் பங்கை பெற முடி­யும்.
ஏற்­று­ம­திக்­கான, ஜி.எஸ்.டி., நடை­முறை என்ன?
பூஜ்­ஜிய வரி விகித அடிப்­ப­டை­யில், ஏற்­று­மதி மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது. ஏற்­று­மதி செய்­யப்­படும் சரக்கு மற்­றும் சேவை­க­ளுக்கு, வரி செலுத்த அவ­சி­ய­மில்லை. இருப்­பி­னும், உள்­ளீட்டு வரி வரவு சலுகை உள்­ளது. அதையே, ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு திருப்பி கொடுக்­கும்­ப­டி­யா­க­வும் அமைய பெற்­றுள்­ளது. ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு சலு­கை­களை தெரிவு செய்­யும் வாய்ப்­புள்­ளது. அதா­வது, ஏற்­று­ம­தி­யா­கும் சரக்கு அல்­லது சேவை மீதான வரியை செலுத்தி, பின் அதை, ஐ.ஜி.எஸ்.டி.,யாக திரும்ப பெற­லாம் அல்­லது வரியை செலுத்­தா­மல், ஒப்­பந்த பத்­தி­ரத்­தில் ஏற்­று­மதி செய்து, உள்­ளீட்டு வரி வர­வாக, அதை திருப்பி தரக் கோர­லாம்.
நாங்­கள், ஏற்­று­மதி தொழில் மட்­டுமே செய்­கி­றோம். இந்­தி­யா­வில், விற்­பனை கிடை­யாது. நாங்­கள், ஜி.எஸ்.டி., எண் பெற வேண்­டுமா?
உங்­கள் ஆண்டு விற்­பனை, 20 லட்­சம் ரூபாய்க்கு அதி­க­மாக இருந்­தால், ஜி.எஸ்.டி., பதிவு அவ­சி­யம். ஏற்­று­மதி செய்­யும் கார­ணத்­தால், நீங்­கள் உள்­ளீட்டு வரி பயன் பெற­லாம்
நான், ‘ஜாப் ஒர்க்’ எடுத்து செய்­யும் ஒரு பணி­யா­ளர். நான், கட்­டா­யம், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்­டுமா?​
‘ஜாப் ஒர்க்’ ஒரு சேவை என்­ப­தால், ​உங்­க­ளது ஆண்டு வரு­மா­னம், 20 லட்­சம் ரூபாய்க்­கும் அதி­க­மாக இருக்­கும்­பட்­சத்­தில், ​நீங்­கள் கட்­டா­யம் பதிவு செய்ய வேண்­டும்.​ ​இல்­லை­யேல், பதிவு அவ­சி­ய­மில்லை.
ஜி.எஸ்.டி.,யில், வழங்­கு­ப­வர் அல்­லது பெறு­ப­வர்­களை தவிர, வேறு யாரா­வது வரி செலுத்த வேண்­டுமா?
ஆம். மத்­திய, மாநில அர­சு­கள், மின்­னணு வர்த்­த­கத்தை இயக்­கு­ப­வ­ரின் சேவை­க­ளுக்கு வரி விதித்­துள்­ளது.​ சேவை­கள் மின்­னணு வர்த்­த­கத்தை இயக்­கு­ப­வ­ரின் வாயி­லாக வழங்­கப்­பட்டு இருந்­தால், ​அனைத்து சட்ட விதி­மு­றை­களும், இந்த மின்­னணு வர்த்­த­கத்தை இயக்­கு­ப­வ­ரின் ​ சேவை­க­ளுக்கு பொருந்­தும். அம்­மா­திரி சேவை­களை வழங்­கிய நபர், வரி செலுத்த கட­மைப்­பட்­ட­வர்.
அறக்­கட்­டளை மூலம் வினி­யோ­கிக்­கப்­படும் அத்­தி­யா­வ­சி­ய­மான பொருட்­க­ளுக்­கும், ஜி.எஸ்.டி., விதிக்­கப்­ப­டுமா?
அறக்­கட்­ட­ளை­யின் வினி­யோ­கங்­கள், வியா­பா­ரத்தை பெருக்­கும் நோக்­கத்­தில் இருந்­தால், சரக்கு மற்­றும் சேவை­க­ளுக்கு, ஜி.எஸ்.டி.,யில் வரி விதிக்­கப்­படும். இல்­லை­யென்­றால், ஜி.எஸ்.டி.,யில் வரி விதிக்­கப்­பட மாட்­டாது.
– ஜி.எஸ்.டி., முதன்மை கமி­ஷ­னர் மற்­றும் கலால் துறை­யின் சென்னை பிரிவு வெளி­யீடு. இந்த தக­வல், பொது­வான கண்­ணோட்­டத்­தில் வழங்­கப்­ப­டு­வ­தால், இது, சட்ட ஆலோ­ச­னை­யாக அல்­லது கருத்­தாக கரு­தப்­ப­டாது.(அடுத்த ஞாயிறு சந்­திப்­போம்)

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)