ஜி.எஸ்.டி.,அறி­வோம் – தெளி­வோம்ஜி.எஸ்.டி.,அறி­வோம் – தெளி­வோம் ... சிறகு முளைத்த தனி­யார் துறை சிறகு முளைத்த தனி­யார் துறை ...
வளமான வர்த்தக வாய்ப்பு:சிறகடிக்குது சில்லரை விற்பனை துறை:சிறிய நகரங்களில் பெருகுது முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2017
00:36

புதுடில்லி:வர்த்­தக வாய்ப்­பு­கள் அதி­க­ரித்து வரு­வ­தால், நக­ரங்­கள் மற்­றும் சிறிய நக­ரங்­களில், வரும் ஆண்­டு ­களில், சில்­லரை விற்­பனை துறைக்கு, சிறப்­பான வளர்ச்சி காத்­தி­ருப்­ப­தாக, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.இந்­தி­யா­வின் சில்­லரை விற்­பனை துறை குறித்து, ரியல் எஸ்­டேட் ஆலோ­சனை நிறு­வ­ன­மான, ஜே.எல்.எல்., மற்­றும் இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்­பான – சி.ஐ.ஐ., இணைந்து வெளி­யிட்­டுள்ள கூட்­ட­றிக்கை:கடந்த, 2006 – 17 வரை­யி­லான, 10 ஆண்­டு­களில், இந்­திய பெரு நக­ரங்­களில், சில்­லரை விற்­பனை துறை­யின் முத­லீடு, 129 கோடி டாலர் என்ற அள­விற்கே உள்­ளது.
அதே சம­யம், இதே காலத்­தில், நக­ரங்­கள் மற்­றும் சிறிய நக­ரங்­களில், சில்­லரை விற்­பனை துறை­யின் முத­லீடு, 619 கோடி டாலர் என்ற அள­விற்கு உயர்ந்­துள்­ளது.பெரு நக­ரங்­களில், சில்­லரை விற்­பனை கடை­களை அமைப்­ப­தற்­கான இடம் கிடைப்­பது, கடி­ன­மாக உள்­ளது. மேலும், கடை­க­ளுக்­கான குத்­தகை அல்­லது வாடகை தொகை­யும், மிக அதி­க­மாகவசூ­லிக்­கப்­ப­டு­கிறது.அத­னால், பல­வகை பொருட்­களை, சில்­ல­ரை­யில் விற்­பனை செய்­யும் துறை­யைச் சேர்ந்­தோ­ரின் இலக்கு, நகர்ப்­பு­றங்­கள் மற்­றும் சிறிய நக­ரங்­களின் பக்­கம் திரும்பி வரு­கிறது.லக்னோ, கொச்சி, புவ­னேஸ்­வர், நாக்­பூர் போன்ற நக­ரங்­களில், சர்­வ­தேச விமான போக்­கு­வ­ரத்து சேவை வசதி உள்­ளது.
இதன் கார­ண­மாக, இது போன்ற நக­ரங்­களில், பன்­னாட்டு நிறு­வ­னங்­கள், சில்­லரை விற்­பனை கடை­களை அமைப்­ப­தி­லும், ஏற்­க­னவே உள்ள வர்த்­த­கத்தை விரி­வு­ப­டுத்­து­வ­தி­லும் ஆர்வம் காட்­டு­கின்றன.மக்­க­ளி­டம் செல­வ­ழிப்பு வரு­வாய் அதி­க­ரித்­தி­ருப்­ப­தும், சில்­லரை விற்­பனை துறை­யின் வளர்ச்­சிக்கு துணை புரி­கிறது.‘‘சிறிய நக­ரங்­களில், அனைத்து மட்­டத்­தி­லும் மாற்­றங்­கள் நிகழ்ந்து வரு­கின்றன. இந்­திய பொரு­ளா­தா­ரத்­தின் ஆற்­றல், சிறிய நக­ரங்­களின் வளர்ச்­சி­யில் அடங்கி இருக்­கிறது.
‘‘இதை கருதி, சில்­லரை விற்­பனை துறைக்கு, சிறப்­பான வர்த்­தக வாய்ப்­பு­கள் உள்ள நக­ரங்­கள், சிறிய நக­ரங்­கள் ஆகி­ய­வற்­றின், அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்த வேண்­டும்,’’ என்­கி­றார், சி.ஐ.ஐ., இயக்­கு­னர், சந்­தி­ர­ஜித் பானர்ஜி.நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு, சில்­லரை விற்­பனை வாயி­லான, நக­ரங்­கள் மற்­றும் சிறியநக­ரங்­களின் பங்­க­ளிப்பு அதி­க­ரிக்­கும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
புதிய கொள்கை
மத்­திய அரசு, சில்­லரை விற்­பனை உட்­பட, அனைத்து துறை­களின் வளர்ச்சிக்­கும், கொள்­கை­களை உரு­வாக்­கும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ளது.ஆற்­றல்­மிக்க சில்­லரை விற்­பனை துறை, தயா­ரிப்பு, விவ­சா­யம் மற்­றும் சேவை துறை­களின் வளர்ச்­சி­யில், முக்­கிய பங்­க­ளிப்பை வழங்­கும். இத்­து­றை­யில், பல ஆண்­டு­க­ளாக உள்ள, அமைப்பு சாரா நிறு­வ­னங்­களை வெளி­யேற்­று­வது போன்ற செயல்­களில், அமைப்பு சார்ந்த கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள் ஈடு­ப­டக் கூடாது. மாறாக, இணைந்து செயல்­பட்டு, வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்க வேண்­டும். பொருட்­கள் விலையை நியா­ய­மாக நிர்­ண­யிக்க வேண்டும். இது, ஒட்­டு­மொத்த துறை­யின் வளர்ச்­சிக்கு உத­வும்.சுரேஷ் பிரபு, மத்திய வர்த்தகம் – தொழில் துறை அமைச்சர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)