வளமான வர்த்தக வாய்ப்பு:சிறகடிக்குது சில்லரை விற்பனை துறை:சிறிய நகரங்களில் பெருகுது முதலீடுவளமான வர்த்தக வாய்ப்பு:சிறகடிக்குது சில்லரை விற்பனை துறை:சிறிய ... ... சிறகு முளைத்த தனி­யார் துறை சிறகு முளைத்த தனி­யார் துறை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஒரே ஆண்டில் ரூ.10 ஆயிரம் 1 லட்சமாக மாறுகிறது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2017
23:50

உல­கில் முதன்­மு­த­லாக டச் கிழக்­கிந்­திய கம்­பெனி, 1602ம் ஆண்டு மக்­க­ளுக்கு பங்­கு­களை வெளி­யிட்­டது. அன்று முதல் 400 ஆண்­டு­க­ளாக மக்­கள், வங்கி, பங்­குச் சந்தை, பத்­தி­ரங்­கள், ரியல் எஸ்­டேட், தங்­கம் போன்­ற­வற்­றில் முத­லீடு செய்து வரு­கின்­ற­னர். நான்கு நுாற்றாண்­டு­க­ளுக்­குப்­பின், பணத்தை முத­லீடு செய்­வ­தற்கு புதி­தாக, ‘கிரிப்­டோ­க­ரன்சி’ எனும் ‘மறை­கு­றி­யீட்டு நாண­யம்’ வந்­துள்­ளது.
பிட்­காய்­னில் ஒரு­வர், 2017 ஜன­வ­ரி­யில், 10 ஆயி­ரம் ரூபாய் முத­லீடு செய்­தி­ருந்­தால், தற்­போது அதன் மதிப்பு, 1 லட்­ச­மாக உயர்ந்­தி­ருக்­கும். இது ஆயி­ரம் மடங்கு வளர்ச்சி!‘பிட்­காய்ன்’ என்­றால் என்ன?பிட்­கா­ய்ன் என்­பது ஒரு மெய்­நி­கர் கரன்சி. இதை கண்­ணால் பார்க்க முடி­யாது; கையால் தொட்டு உணர முடி­யாது. 2009ல், ‘சட்­தோஷி நக­மோடோ’ என்ற புனை பெயர் ­கொண்ட, கம்ப்­யூட்­டர் இன்­ஜி­னி­ய­ரால் உரு­வாக்­கப்­பட்­டது. இதை கணி­னி­யில் உள்ள, ‘அல்­கா­ரி­தம்’ வகை கணி­தத்தை பயன்­ப­டுத்தி உரு­வாக்­கி­யுள்­ள­னர். இந்த வழி­மு­றை­யில் பிட்­கா­யின் உரு­வாக்­கு­வதை மைனிங் (mining) என குறிப்­பி­டு­கி­ன்றனர். இது இணை­யம் மூலம் நடை­பெ­று­கிறது. இதை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு ரிசர்வ் வங்கி, உல­க­ வங்கி போன்ற எந்த அமைப்­பும் கிடை­யாது.எங்கு மதிப்பு அதி­கம்?பிட்­கா­ய்ன் உரு­வாக்­கும் போதே மொத்­தம், 2.1 கோடி பிட்­கா­ய்ன் மட்­டுமே உரு­வாக்க முடி­யும் என, புரோ­கி­ராம் செய்­யப்­பட்­டி­ருக்­கிறது.
எப்­படி பெறு­வது?இரண்டு வழி­களில் பிட்­காய்ன் பெற­லாம். உல­க­ள­வில் உள்ள மெய்­நி­கர் கரன்சி எக்­சேஞ்ச் மையங்­களில், பான்­கார்டு, ஆதார் கார்டு கொடுத்து இந்த டிஜிட்­டல் கரன்­சி­களை பெற­லாம். மற்­றொரு வழி, மைனிங் நிறு­வ­னங்­கள் மூல­மும் பெற­லாம். பிட்­காய்ன் பரி­வர்த்­த­னை­க­ளுக்கு ஒப்­பு­தல் வழங்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு ‘மைனிங் நிறு­வ­னங்­கள்’ என்று பெயர்.
மைனிங் எப்­படி?கஷ்­ட­மான கணக்­கு­களை செய்­வ­தற்கு கம்ப்­யூட்­டர் பயன்­ப­டு­கிறது. இது­போல கணித அல்­கா­ரி­தத்தை பயன்­ப­டுத்தி பிட்­காய்ன்­கள் மைனிங் செய்­யப்­ப­டு­கின்றன. இது­வரை, 1.6 கோடி பிட்­காய்ன்­கள் உரு­வாக்­கப்­பட்டு மைனிங் செய்­யப்­பட்­டுள்ளன. இன்­னும், 50 லட்­சம் பிட்­காய்ன்­கள் மட்­டுமே மைனிங் செய்­யப்­பட வேண்­டும்.
ஆபத்­தா­னதா?பிட்­காய்ன் முத­லீடு ஆபத்­தான ஒன்­று­ தான். 2013 நவம்­ப­ரில் பிட்­காய்ன், 60 ஆயி­ரம் ரூபா­யாக இருந்­தது. அதே ஆண்டு டிசம்­ப­ரில், 31 ஆயி­ரம் ரூபா­யாக குறைந்­தது. ஏற்ற இறக்­கங்­கள் இருந்­தா­லும், இதை நீண்­ட­கா­லம் வைத்­தி­ருந்­தால் அதிக மதிப்பை பெற்­றுத்­த­ரும்.
சட்­டப்­பூர்­வ­மா­னதா?
இந்­தி­யா­வில் இது­வரை பிட்­காய்ன் பரி­வர்த்­த­னை­க­ளுக்கு எவ்­வித சட்­டப்­பூர்வ அங்­கீ­கா­ர­மும் வழங்­கப்­ப­ட­வில்லை. இருப்­பி­னும், இந்­தி­யா­வில் முத­லீட்­டா­ளர்­கள் பிட்­காய்ன்­களை வாங்கி, விற்று வரு­கின்­ற­னர். இணைய புரட்­சி­யின் மூல­மாக, தற்­போது நாம் தொடர்பு கொண்டு வரு­கி­றோம். அது போல, இணை­யம் மூலம் இந்த பிட்­காய்­னில் பணம் ஈட்­டப்­படும்.
இரண்டு வித­மான கருத்து
பிட்­காய்ன் பற்றி இரண்டு வித­மான கருத்து நில­வு­கிறது. ஒரு பிரி­வி­னர், பிட்­காய்ன் எதிர்­கால உல­கின் பணம் என, நம்­பிக்கை வைத்­துள்­ள­னர்; மற்­றொரு பிரி­வி­னர் இது முற்­றி­லும் ஏமாற்று வேலை என்­கின்­ற­னர்.
நீங்­கள், ‘ரிஸ்க்’ எடுக்க விரும்­பக்­ கூ­டி­ய­வ­ரா­க­வும், விடா­மு­யற்சி உடை­ய­வ­ரா­க­வும் இருந்­தால், இத்­து­றை­யில் முத­லீடு செய்து வரு­வாய் ஈட்­டும் வாய்ப்பு உண்டு.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)