வளமான வர்த்தக வாய்ப்பு:சிறகடிக்குது சில்லரை விற்பனை துறை:சிறிய நகரங்களில் பெருகுது முதலீடுவளமான வர்த்தக வாய்ப்பு:சிறகடிக்குது சில்லரை விற்பனை துறை:சிறிய ... ... சிறகு முளைத்த தனி­யார் துறை சிறகு முளைத்த தனி­யார் துறை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இந்­திய முத­லீட்­டா­ளர்­களின் மமதை தோற்­றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2017
23:52

சந்­தை­யில் தொடர்ந்து வர­லாறு காணாத அளவு அதி­க­மான பணப்­பு­ழக்­கம் நில­வு­கிறது. உள்­நாட்டு முத­லீ­டு­கள் சந்­தை­யில் குவி­யும் தற்­கால சூழ­லில், பன்­னாட்டு முத­லீட்­டா­ளர்­களை நாம் சட்டை செய்­யக்­கூட முயல்­வ­தில்லை.
பன்­னாட்டு முத­லீட்­டா­ளர்­களின் முத­லீட்டு நகர்­வு­களின் நுணுக்­கங்­களை, எப்­போ­தும் தொடர்ந்து கவ­னிக்­கும் பழக்­க­முள்ள இந்­திய முத­லீட்­டா­ளர்­கள், சற்றே மம­தை­யோடு இப்­போது தோன்­று­கி­ன்றனர்.இந்த தோற்­றத்­திற்­கான அடிப்­ப­டைக் கார­ணம், சந்­தை­யின் தொடர் வளர்ச்­சி­யும், இந்த ஆண்டு சந்தை கொடுத்­தி­ருக்­கும் அப­ரி­மி­த­மான லாபங்­களும் ஆகும்.அடுத்து என்ன வாங்­க­லாம்? எந்த பங்­கு­களை வாங்­கி­னால், மிக குறு­கிய காலத்­தில் அதிக லாபம் ஈட்­ட­ மு­டி­யும் என்­பது சார்ந்த தேடல் வேட்­டை­யில், அனைத்து உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­களும் ஈடு­பட்­டுள்­ள­னர்.
திணறும் சூழல்
பங்­கு­களை வாங்­கு­வ­தில் நில­வும் கடும் போட்­டிச் சூழல், பங்­கு­களை நிர்­வ­கிக்­கும் நிதி­மே­லா­ளர்­கள் மீது பெரும் அழுத்­தத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஐ.பி.ஓ., மூலம் செய்­யப்­படும் பங்­கு­களின் விற்­ப­னை­க­ளில்­ கூட கடும் போட்டி நில­வு­கிறது.இந்த சூழ­லில், சந்­தைக்­குள் பண­வ­ரத்து சிறி­தும் குறை­யா­த­தால், செலுத்த வேண்­டிய முத­லீ­டு­களை சீராக செலுத்த முடி­யா­மல், மேலா­ளர்­கள் தவிக்­கின்­ற­னர். சந்தை வீழ்ச்­சியே காணாத நிலை­யில், நாட்­கள் கடக்க கடக்க, நிதி மேலா­ளர்­கள் முத­லீடு செய்ய அவ­ச­ரம் காட்ட துவங்­கி­ உள்­ள­னர்.இந்த அவ­ச­ரம், அதிக விருப்பு பெற்ற பங்­கு­களின் விலை, தொடர் உச்­சங்­களை தொடக் கார­ண­மாகி உள்­ளது.
நவம்­ப­ரில், சந்­தை­யின் விருப்பு பெற்ற தனிப்­பட்ட பங்­கு­கள் அதி­கம் உயர்ந்­தா­லும், ஒட்­டு­மொத்த சந்­தை­யின் குறி­யீ­டான, நிப்­டி­யில் மாற்­ற­மில்லை. மாதத்­தின் துவக்­கத்­தில் இருந்த­தை­விட சற்று குறைந்தே நிப்டி நவம்­பரை கடந்­தது.இந்­தச் சூழ­லில்,தொடர்ந்து வர­லாறு காணாத அளவு, பரஸ்­பர நிதி­களில் பணம் குவி­யக் குவிய, அதன் மேலா­ளர்­கள், அந்த பணத்தை நிர்­வ­கிக்க திண­றும் சூழல் நில­வு­கிறது.
நுணுக்க ஆய்வு
பங்­கு­களை தங்­க­ளுக்கு சாத­க­மான மதிப்­பீட்­டில் வாங்க முடி­ய­வில்லை என்­பதை மேலா­ளர்­கள் உணர்ந்­தா­லும், பண வரத்தை அவர்­கள் தடுப்­ப­தில்லை. அந்த பணம் பெரும்­பா­லும், மிட்-கேப் வகை பங்­கு­க­ளி­லும், சிறு மற்­றும் குறு பங்­கு­க­ளி­லும் குவிந்து வரு­வது, அவர்­களின் சங்­க­டத்தை மேலும் உயர்த்­தி­ உள்­ளது.இந்த வகை பங்­கு­களில், வர­லாறு காணாத சூதாட்­டம் புழங்­கு­கிறது. விரை­வில்,இந்த பங்­கு­களில் நில­வும் சூதாட்ட சூழல் தணிக்­கப்­பட வேண்­டும். அது நடக்க, இன்­னும் நிறைய புதிய நிறு­வ­னங்­கள் சந்­தைக்­குள் நுழைய வேண்­டும்.
அல்­லது, ஒட்டு மொத்த சந்­தை­யில், முத­லீட்­டா­ளர்­களின் முத­லீட்டு அவ­ச­ரம் குறைய வேண்­டும்.டிசம்­பர் மாதம் எப்­போ­துமே மாற்­றத்­திற்­கான கால­கட்­டம் ஆகும். உலக சந்­தை­கள், எப்­போ­துமே டிசம்­ப­ரில் அடுத்த ஆண்­டுக்­கான புதிய முத­லீட்டு வியூ­கங்­களை அமைப்­பது வாடிக்கை. ஆகவே, கடந்த ஆண்டு எடுத்த நிலைப்­பாட்­டில் இருந்து வித்­தி­யா­ச­மான முடி­வு­களை வரும் ஆண்­டில் எடுப்­ப­தா­யின், அந்த மாற்­றங்­கள், டிசம்­ப­ரில் கசி­யத் துவங்­கும்.
மேலும், குஜ­ராத் தேர்­த­லில் ஆளும் கட்­சிக்கு பின்­ன­டைவு ஏற்­ப­டு­மா­யின், அது­வும் சந்­தை­யில் பெரிய மாற்­றத்­தை ஏற்­ப­டுத்­தும்.ஆகவே, அடுத்த ஆண்டு சந்­தை­யில் தென்­ப­டக்­கூ­டிய முத­லீட்டு சூழ­லின் முன்­னு­ரை­யாக, டிசம்­பர் மாத நிகழ்­வு­கள் அமை­யும்.நிக­ழும் மாற்­றங்­களை நுணுக்­க­மாக ஆய்வு செய்ய வேண்­டும். நிதா­ன­மான முடி­வு­கள் தொடர வேண்­டும்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)