வளமான வர்த்தக வாய்ப்பு:சிறகடிக்குது சில்லரை விற்பனை துறை:சிறிய நகரங்களில் பெருகுது முதலீடுவளமான வர்த்தக வாய்ப்பு:சிறகடிக்குது சில்லரை விற்பனை துறை:சிறிய ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.40 ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.40 ...
சிறகு முளைத்த தனி­யார் துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2017
23:55

பெரி­தும் எதிர்­பார்க்­கப்­பட்ட, ஜூலை – செப்­டம்­பர் காலாண்­டுக்­கான, ஜி.டி.பி., எனப்­படும், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 6.3 சத­வீ­த­மாக உயர்ந்­துள்ள தக­வலை, மத்­திய புள்­ளி­யி­யல் துறை வெளி­யிட்­ட­போது, ஒரு­வித நிம்­ம­தி­யும் கேள்­வி­களும் ஒருங்கே ஏற்­பட்­டன. ஜி.டி.பி.,யின் எண்­களை எப்­ப­டிப் புரிந்­து­ கொள்­வது, வளர்ச்சி எங்­கி­ருந்து வந்­துள்­ளது, எந்­தத் துறை­கள் அதற்கு பங்­க­ளித்­துள்ளன, எவை பங்­க­ளிக்­க­வில்லை என்ற கேள்­வி­களும் சுவா­ர­சி­ய­மா­னவை.
வெறும் சத­வீ­தக் கணக்­கையோ, அல்­லது எண்­க­ளையோ மட்­டும் படித்­தால், நமக்கு ஓர் அர்த்­தம் கிடைக்­கும். இந்­தக் கணக்­கீ­டு­க­ளுக்கு அடிப்­ப­டை­யாக உள்ள மூலத் தர­வு­க­ளை­யும் சேர்த்­துப் படிப்­ப­தன் மூலம், கூடு­த­லான புரி­தல் கிடைக்­கும்.
அந்­த­ வ­கை­யில், இரண்­டாம் காலாண்டு, ஜி.டி.பி., எண்­க­ளோடு அதற்கு அடிப்­ப­டை­யாக இருக்­கும் மொத்த மதிப்­புக் கூட்­ட­லை­யும் (ஜி.வி.ஏ.,) சேர்த்­துப் புரிந்­து­ கொள்ள முயற்சி செய்­தேன்.௬ சதவீதமாக சரிவுஇந்த உயர்­வுக்­குப் பங்­க­ளித்ததுறை­கள், ‘உற்­பத்தி, சுரங்­கம்,மின் உற்­பத்தி, எரி­வாயு, தண்­ணீர் சப்ளை மற்­றும் இதர சேவை­கள், வர்த்­த­கம், ஓட்­டல்­கள், தொலை­தொ­டர்பு மற்­றும் ஒலி­ப­ரப்பு சேவை­கள்’ ஆகி­யவை.
முத­லாம் காலாண்­டில், உற்­பத்­தித் துறை­யில், 1.7சத­வீத ஜி.வி.ஏ., மட்­டுமேஇருந்த நிலை­யில், இரண்­டாம் காலாண்­டில் அது 7 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இதற்­கான அடிப்­படை கணக்­கீட்­டுக்கு, மத்­திய புள்­ளி­யி­யல் துறை எடுத்­துக்­கொண்­டுள்ள தரவு, தனி­யார் கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களின் வளர்ச்­சி­யைத் ­தான்.
மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­யில் வர்த்­த­க­மா­கும் கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள் அளித்­துள்ள காலாண்டு அறிக்­கை­களே இதற்கு அடிப்­படை.சந்­தை­யில் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்ள நிறு­வ­னங்­களில், 70 சத­வீ­தம் உற்­பத்தி சார்ந்த நிறு­வ­னங்­கள் என்­ப­தால், இது நேர­டி­யாக உற்­பத்தி வளர்ச்­சி­யையே பிர­தி­ப­லிக்­கிறது என்று சொல்­ல­லாம். இந்த நிறு­வ­னங்­களின், ஜி.வி.ஏ., வளர்ச்சி, 11.4 சத­வீ­தம். முறை­சாரா தொழில்­கள் மற்­றும் அரசு சார்ந்த நிறு­வ­னங்­களின் உற்­பத்­தி­யைக் கணக்­கி­டும் தொழில் வளர்ச்­சிக் குறி­யீடோ (ஐ.ஐ.பி.,) 2.2 சத­வீ­தம்.
இவை­யி­ரண்­டின் ஒட்­டு­மொத்த பங்­க­ளிப்­பையே, 7 சத­வீத ஜி.வி.ஏ., வளர்ச்சி குறிப்­பி­டு­கிறது.இதன் அர்த்­தம் என்­ன­வென்­றால், தனி­யார் துறை வளர்ச்சி தான், ஜி.டி.பி.,க்குப் பங்­க­ளிப்­புச் செய்­துள்­ளது என, நிச்­ச­யம் புரிந்­து ­கொள்­ள­லாம்.
ஜூலை மாதம், ஜி.எஸ்.டி., அம­லா­வ­தற்கு முன், பழைய சரக்­கு­களை விற்­று­விட முனைந்த நிறு­வ­னங்­கள், பின்­னர், உற்­பத்­தியை மீண்­டும் துவக்­கி­ய­தன் அறி­குறி இது. இதே­போல், வணிக வாக­னங்­களின் விற்­ப­னை­யும் ஜூலை காலாண்­டில், 21 சத­வீத அள­வுக்கு உயர்ந்­துள்­ளது.இன்­னொரு புறம், அரசு செய்த செல­வு­கள் என்ன என்­ப­தை­யும் சேர்த்­துப் பார்ப்­போம்.
சென்ற ஆண்­டின், 2ம் காலாண்­டில், 9.5 சத­வீ­த­மாக இருந்த, ஜி.வி.ஏ., இந்­தக் காலாண்­டில், 6 சத­வீ­த­மாக சரிந்­தது.
பங்களிப்பு குறைவு
அதா­வது, 2016- – 17 நிதி­யாண்­டின் இதே காலாண்­டில், மத்­திய அரசு செய்த நிகர செலவு, 20.8 சத­வீ­தம் உயர்ந்­தது. இந்­தச் செல­வில் வட்­டித் தொகையோ, மானி­யங்­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்ட தொகையோ சேர்க்­கப்­ப­ட­வில்லை.அதே இனத்­தில், இந்­தக்காலாண்­டில், மத்­திய அரசு செலவு செய்­தி­ருப்­பது,0.8 சத­வீ­தம் மட்­டுமே உயர்ந்­துள்­ளது.
அதா­வது, உற்­பத்­தித் துறை­யிலோ, இதர உள்­கட்­டு­மா­னத் துறை­யிலோ, அர­சின் பங்­க­ளிப்பு என்­பது மிக­மி­கக் குறைவு.இன்­னும் சில விபரங்­க­ளை­யும் இத­னோடு சேர்த்­துப் பார்ப்­போம். முக்­கி­ய­மாக, விவ­சா­யம். அது இந்­தக் காலாண்­டில் பொய்த்­துப் போய்­விட்­டது.சென்ற ஆண்டு, இதே காலாண்­டில், 4.1 சத­வீ­த­மாக இருந்த மொத்த மதிப்­புக் கூட்­டல் இப்­போது, 1.7 சத­வீ­த­மாக மட்­டுமே உயர்ந்­துள்­ளது. கட்­டு­மா­னத் துறை­யின் மதிப்­புக் கூட்­டல், 4.3 சத­வீ­தத்­தில் இருந்து, 2.6 சத­வீ­த­மாக சரிந்­துள்­ளது. சேவைத் துறை­க­ளி­லும் தொய்வு.
வங்­கிச் சேமிப்­பு­களும் கடன்­களும், சென்ற 2016 இரண்­டாம் காலாண்­டில், 10.8 மற்­றும் 10.1 சத­வீத அள­வுக்கு வளர்ந்­தி­ருக்க, 2017 இரண்­டாம் காலாண்­டில் அவை, 8.6 மற்­றும் 6.8 சத­வீத அள­வுக்கே உயர்ந்­துள்ளன.அதா­வது, தொழில் வளர்ச்­சி­யி­லும் மொத்த மதிப்­புக் கூட்­ட­லி­லும் அர­சின் நேரடி பங்­க­ளிப்பு இங்­கே­யும் சரிந்­து உள்­ளது கண்­கூடு.தொழில் துறைக்கு அழகுஇரண்­டாம் காலாண்டு எண்­கள் நமக்கு ஒரு நல்ல விஷ­யத்தை முன்­வைக்­கிறது. விவ­சா­யம் சாராத, சேவை சாராத, அர­சு சாராத துறை­களின் பங்­க­ளிப்­பி­னா­லேயே மொத்த மதிப்­புக் கூட்­டல் உயர்ந்­து உள்­ளது.அத­னால், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி பெரு­கி­யுள்­ளது.
உண்­மை­யில் இங்கே தனி­யார் துறை­யின் சிற­கு­கள் முளைத்­து­விட்­டது என்றே அர்த்­தம்.இது­தான் உண்­மை­யில் நாம் மெச்­ச­வேண்­டிய போக்கு. அர­சின் நேர­டிக் கட்­டுப்­பா­டு­கள்இல்­லா­மல், சலு­கை­களோ, மானி­யங்­களோ இல்­லா­மல், படிப்­ப­டி­யா­கத் தன் சொந்­தக் காலில் நிற்­கத் துவங்­கு­வதே தொழில் துறைக்கு அழகு.
தனி­யார் துறை வலுப்­பெ­றும்­போ­து­தான், வேலை­வாய்ப்­பு­களும் முத­லீ­டு­களும் பல்­கிப் பெரு­கும். அதற்கு இந்­தப் போக்கு வழி­வகை செய்­தி­ருக்­கிறது என்­பது வர­வேற்­கத்தக்­க­து­தான்.
வளர்ச்சி தொடரும்
சரிவு முடிந்­து­விட்­டது, இனி வளர்ச்­சிப்­பாதை தான் என, மத்­திய புள்­ளி­யி­யல் துறை தெரி­வித்­த­போது, மக்­க­ளுக்கு மீண்­டும் நம்­பிக்கை பிறந்­தது. இந்த நம்­பிக்­கைக்கு உரம் சேர்க்­கும் வித­மான, உலக அள­வில் ஏற்­பட்­டு­ வ­ரும் பொரு­ளா­தார முன்­னேற்­ற­மும் இருக்­கிறது.
இவற்­றை­யெல்­லாம் கருத்­தில் கொண்டு பார்க்­கும்­போது, ரிசர்வ் வங்­கி­யின் அடுத்து வரும் சந்­திப்­பில், வட்­டி­வி­கி­தங்­க­ளைக் குறைக்­க­ வேண்­டும் என்ற கோரிக்கை அடி­பட்­டுப் போகும். வட்­டி­ வி­கி­தங்­களை நிலை­நி­றுத்­து­ம்போது தான், பண­வீக்­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யும். அந்த வகை­யில், ஜி.டி.பி.,யின் வளர்ச்சி, மத்­திய ரிசர்வ் வங்­கிக்கு ஒரு நம்­பிக்­கை­யைக் கொடுத்­துள்­ளது.
அடுத்த இரண்டு காலாண்­டு­கள் இதே­ வி­த­மான வளர்ச்சி தொட­ரும், நிதி­யாண்­டின் முடி­வில், 7 சத­வீ­தத்­துக்கு மேல் நாம் வளர்ச்சி பெறு­வோம் என்­பதே பொரு­ளா­தார நிபு­ணர்­களின் கருத்து. இந்­தப் பின்­ன­ணி­யில், இந்­தி­யப் பொரு­ளா­தார வளர்ச்சி பற்­றிய தன் கணிப்பை, 2018 ஜன­வரியில் மீண்­டும் தெரி­விக்­கும் என, செய்­தி­கள் வரு­கின்றன. நல்ல செய்­தி­கள் தொட­ரட்­டும்.
ஆர்.வெங்­க­டேஷ்
பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)