பதிவு செய்த நாள்
05 டிச2017
00:27

புதுடில்லி:‘இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில், 2022ல், 40 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்’ என, சி.ஐ.ஐ., – பி.சி.ஜி., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று, அதிகாரபூர்வமாக வெளியாக உள்ள இந்த அறிக்கையின் சாராம்சம்:ஊடகம் மற்றும் பொழுது போக்கு துறையில், ஏராளமான வளர்ச்சி காத்திருக்கிறது. இத்துறைக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு, அரசு, அதிகளவில் நிதி ஒதுக்காத நிலையிலும், 40 – 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் சாத்தியம் உள்ளது.
ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில், 2022ல், நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு வளர்ச்சியின் வேகம், மிக அதிகமாக இருக்கும்;மின்னணு தொழில்நுட்பம் பரவலாகும். கதாசிரியர்கள், தொழில்நுட்ப சேவையாளர்கள் ஆகியோருக்கு, இதற்கு முன் காணாத வகையில் வாய்ப்புகள் கிடைக்கும்.
ஊடகம் மற்றும் பொழுது போக்கு துறையில், திறமையானவர்களை அடையாளம் காண்பது தான், சவாலாக உள்ளது; இது, இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை வழங்கும்.குறிப்பாக, புதிய தொழில்நுட்பங்களுக்கு மாறும் போது, அதற்கான வல்லுனர்களின் தேவை அதிகரிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|