பதிவு செய்த நாள்
05 டிச2017
00:39

உதய்பூர்:‘‘ஐ.பி.ஓ., எனப்படும், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன,’’ என, மணிபால் குளோபல் எஜூகேஷன் தலைவர், டி.வி.மோகன் தாஸ் பாய் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:நாடு முழுவதும் தற்போது, 32 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக, 7,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகின்றன. 2025க்குள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, 1 லட்சம் என்ற அளவில் இருக்கும்.இதன் மூலம், 30.25 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர். இதன் சந்தை மதிப்பு, 50 ஆயிரம் கோடி டாலராக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தையில், சிறிய நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு வர, தனிப்பிரிவு உள்ளது.
ஸ்டார்ட் அப் போன்ற சிறிய நிறுவனங்கள், அப்பிரிவில், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி ங்குச் சந்தையில், சிறிய நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு வர, தனிப்பிரிவு உள்ளது.
ஸ்டா, நிதி திரட்டிக் கொள்ள ஆயத்தமாகி வருகின்றன.அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, சிறந்த சந்தையாக, இந்தியா உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
வலைதளத்தில் புதுமையான தொழிலில் ஈடுபடும் நிறுவனம், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் எனப்படும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|