மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லைமாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை ...  ‘இ ----– மெயில்’ மோசடி எச்சரிக்கை தேவை ‘இ ----– மெயில்’ மோசடி எச்சரிக்கை தேவை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
தேர்­தல் முடி­வு­களும், சந்­தை­யின் போக்­கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2017
00:15

டிசம்­பர் மாதம், பங்­குச் சந்­தை­யின் வருங்­கால நிகழ்­வு­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் பெற்­றது. ஒவ்­வொருஆண்­டின் இறு­தி­யி­லும், பன்­னாட்டு முத­லீட்­டா­ளர்­கள், தங்­கள் முத­லீ­டு­களை மறு ஆய்வு செய்து, அடுத்த ஆண்­டில் அவற்­றின் வாய்ப்­பு­கள் குறித்து, முக்­கிய முடி­வு­களை எடுக்­கும் காலகட்­டம் இது.

ஓராண்டு முடிந்து, மறு ஆண்டு துவங்­கு­வது, மன­த­ள­ வி­லும், வியூக ரீதி­யா­க­வும், பல மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வதை, நாம் கண்­டி­ருக்­கி­றோம்.ஓராண்­டின் இறு­தி­யில் எடுக்­கும் வியூ­கங்­களை, மறு ஆண்­டின் துவக்­கத்­தில், முற்­றி­லும் மாற்­றி­ய­மைக்­கும் சந்தை போக்­கை­யும், நாம் பார்த்­தி­ருக்­கி­றோம்.

இந்த மாற்­றங்­களின் முன்­னோ­டி­கள், எப்.ஐ.ஐ., முத­லீட்­டா­ளர்­களே. அவர்­கள் எடுக்­கும் முடி­வு­க­ளையே, பிறர் பின்­பற்­று­கின்­ற­னர்.காலப் போக்­கில், எப்.ஐ.ஐ., முத­லீட்­டா­ளர்­கள், இந்­திய சந்­தை­யின் முக்­கிய அங்­க­மாக திக­ழும் சூழல் ஏற்­பட்­ட­தும், டிசம்­பர் நிகழ்­வு­களை கூர்ந்து கவ­னிக்க வேண்­டிய தேவை, நமக்கு ஏற்­பட்­டது. அத­னால், இது கால மாற்­றங்­க­ளுக்கு ஒத்த சூழல் அமைப்பு என்றே சொல்ல வேண்­டும்.

எப்.ஐ.ஐ., முத­லீட்­டா­ளர்­கள், இந்­திய சந்­தைக்­குள் நுழைந்த, முதல் சில ஆண்­டு­களில், டிச., மாதம், சந்­தைக்கு ஒரு­வித விடுப்பு கால­மாக விளங்­கி­யது.பன்­னாட்டு நிதி மேலா­ளர்­கள் விடுப்­பில் சென்று விட, சந்தை மந்­த­மாக விளங்­கிய டிசம்­பர்­கள் எத்­த­னையோ! ஆனால், போட்டி சூழல் வலுக்­கத் துவங்­கி­ய­தும், டிசம்­ப­ரி­லும், பலர் சந்­தை­யில் ஆர்வம் காட்ட துவங்­கி­னர்.

அடுத்த ஆண்­டின் துவக்­கத்­தில், விடுப்பு முடிந்து திரும்­பும் நிதி மேலா­ளர்­கள் எடுக்­கப் போகும் புதிய வியூ­கங்­களை, முன்பே கணிப்­பது, சந்­தை­யின் முக்­கிய தேவை­யா­னது. உள்­நாட்டு வர்த்­த­கர்­கள், இந்த வியூ­கங்­களை முன்­கூட்­டியே யோசித்து, தங்­கள் முத­லீ­டு­களை, வளர்ந்து வரும் சூழ­லுக்கு ஏற்ப மாற்றி அமைத்து கொள்­ளத் துவங்­கி­னர்.

காலப் போக்­கில், ஜன­வ­ரி­யில் எடுக்­கும் முத­லீட்டு மாற்­றங்­களை, டிசம்­ப­ரி­லேயே எடுப்­பது தான் சிறந்­தது என, பல, எப்.ஐ.ஐ., முத­லீட்­டா­ளர்­கள் கருதத் துவங்­கி­னர். இது, உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள் மத்­தி­யில், ஒரு­வித அவசரத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

எப்­போ­தும், எப்.ஐ.ஐ., நகர்­வு­களை ஒட்­டியே இயங்­கும் வர்த்­த­கர்­கள், டிசம்­ப­ரில், அதிக கவ­ன­மாக பல முடி­வு­களை எடுக்க வேண்­டிய கட்­டா­யத்­திற்கு ஆளா­கி­னர். பங்குத்­ த­ர­கர்­கள், தங்­கள் பங்கு ஆய்வு மாற்­றங்­களை முன்­கூட்­டியே எடுக்க வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­ட­னர்.
சில ஆண்­டு­க­ளாக, டிச., – ஜன., மாதங்­கள், ஒரு­வித அழுத்­த­மான காலகட்­ட­மாக, சந்தை சார்ந்­தோ­ருக்கு ஆகி­விட்­டது. மாற்­றங்­களின் வேகத்­திற்கு ஈடு­கொ­டுக்க வேண்­டிய கட்­டா­யமே, இதற்கு கார­ணம்.

சில்­லரை வர்த்­த­கம் செய்­யும் முத­லீட்­டா­ளர்­கள், இந்த மாற்­றங்­களை கணிக்­கத் தவ­று­வ­தை­யும், நாம் பல­முறை கவ­னித்து உள்­ளோம்.இந்த சூழ­லில், இந்த டிசம்பர், பல முக்­கிய அரசியல் நிகழ்­வு­க­ளை­யும் சேர்த்­து அமைந்­தால், சந்­தை­யின் சிக்கல்­கள் மேலும் அதிகரிக்­கும்.

பிர­த­ம­ரின் சொந்த மாநி­ல­மான, குஜ­ராத்­தின் சட்­ட­சபை தேர்­தல் முடி­வு­கள், இந்த டிசம்­பரை, இன்­னும் சுவா­ர­சி­யப்­படுத்தி விட்­டன என, சொல்ல வேண்­டும்.பொரு­ளா­தார ரீதி­யாக ஏற்­படும் மாற்­றங்­கள், அர­சி­யல் சார்ந்த தாக்­கங்­க­ளுக்கு உட்­பட்­டது என்­பதே, சந்­தை­யின் நம்­பிக்கை.
அர­சி­யல் வெற்றி, தோல்­வி­கள் சந்­தை­யின் போக்கை மாற்றி அமைக்­கக்­கூ­டிய வல்­லமை பெற்­றவை. குஜ­ராத்­தில் வெற்றி பெற்­றால், அதில் பெரிய சந்தை மாற்­றம் ஏற்­பட வாய்ப்­பில்லை.

ஒரு­வேளை, மாற்று சூழல் அமைந்­தால், அதற்கு சந்தை தயா­ராக இல்லை என்­பதை, நாம் உணர வேண்­டிய தருணம் இது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)