மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லைமாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை ...  ‘இ ----– மெயில்’ மோசடி எச்சரிக்கை தேவை ‘இ ----– மெயில்’ மோசடி எச்சரிக்கை தேவை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி சேமிப்­பு­கள் பாது­காப்­பா­ன­வையா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2017
00:19

‘வங்­கி­களில் போடப்­பட்­டுள்ள உங்­க­ளு­டைய சேமிப்­பு­கள், முதிர்வு காலத்­தில் திரும்பி வராது; அதை, வங்­கி­களே எடுத்து கொள்­ளப் போகின்றன’ என, பீதியை கிளப்­பும் குறுஞ்­செய்­தி­கள், ஏரா­ள­மாக உலா வரு­கின்றன. இதில் உண்மை என்ன? ஏன் இவ்­வ­ளவு பதற்­றம்? மத்­திய அர­சின் நிதித் துறை தலை­யிட்டு, ‘வங்கி முத­லீட்­டா­ளர்­கள் கவ­லைப்­பட வேண்­டாம்; உங்­கள் பாது­காப்பு, மேலும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது’ என, நம்­பிக்கை வார்த்­தை­கள் சொல்ல வேண்­டிய அவ­சி­யம் ஏன் ஏற்­பட்­டது?

குழப்­பத்­தை­யும், தெளி­வு­க­ளை­யும் புரிந்து கொள்­வோம்.

ஆகஸ்ட் மாதம், நிதி­யி­யல் தீர்­மா­னம், வைப்­புத் தொகை காப்­பு­றுதி மசோதா – 2017, பார்­லி­மென்­டில் தாக்கல் செய்­யப்­பட்­டது. இது, பின், நிலைக் குழு­வின் பரி­சீ­ல­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்டு உள்­ளது.
டிச., 15 முதல் துவங்­க­விருக்­கிற, பார்லி., குளிர் கால கூட்­டத்­தொ­ட­ரில், நிலைக் குழு­வின் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­படும். அதைத் தொடர்ந்து, இந்த மசோதா, சட்­ட­மாக நிறை­வே­ற­லாம் என்­பது எதிர்­பார்ப்பு.
இந்த சட்­டம், அடிப்­ப­டை­யில், நம் நிதி நிறு­வ­னங்­க­ளான, வங்­கி­கள், காப்­பீட்டு நிறு­வ­னங்­கள், இதர நிதி­யி­யல் நிறு­வ­னங்­கள், ஏதே­னும் ஒரு சிர­மத்­தைச் சந்­தித்து, திவா­லா­கும் சூழல் ஏற்­ப­டு­மா­னால், என்ன செய்ய வேண்­டும் என்­பதை விளக்­கு­கிறது. அதற்­கான சட்ட ரீதி­யான தீர்­வு­களை முன்­வைக்­கிறது.
பொது­வாக, வங்­கி­கள் சிர­மப்­படும் போது, அவற்­றுக்கு போது­மான மூல­த­னம் இல்­லாத போது, இது­வரை, ஒரு நடை­முறை கடை­பி­டிக்­கப்­பட்­டது. மத்­திய ரிசர்வ் வங்கி தலை­யிட்டு, அதை மற்­றொரு பெரிய வங்­கி­யோடு இணைத்துவி­டும்.
குளோ­பல் டிரஸ்ட் வங்கி சிர­மப்­பட்ட போது, அது, ஓரி­யன்­டல் பாங்க் ஆப் காமர்­சு­டன் இணைக்­கப்­பட்­டது நினை­வி­ருக்­க­லாம். பொதுத் துறை வங்­கி­யாக இருக்­கு­மா­னால், அதன் மூல­த­னத்தை அதி­கப்­ப­டுத்தி, காப்­பாற்­றும் நடை­மு­றையை மத்­திய அரசு மேற்­கொள்­ளும்.
இவற்­றுக்கு பெயர், ‘பெயில் – அவுட்’ என்­ப­தா­கும். அதா­வது, வங்­கிக்கு வெளி­யில் இருந்து உத­வி­கள் வந்து, அந்­நி­று­வ­னம் மீட்­கப்­படும் நடை­முறை இது. அடிப்­ப­டை­யில், அந்த வங்­கி­யில் முத­லீடு செய்­தி­ருப்­ப­வர்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தவே, இது பின்­பற்­றப்­படும்.
நிதி நிறு­வ­னங்­களை காப்­பாற்ற, புதிய சட்ட மசோ­தா­வில் பல்­வேறு விஷ­யங்­கள் பேசப்­பட்­டா­லும், இரு அம்­சங்­கள் தான், மிகப்­பெ­ரும் விவா­தத்தை ஏற்படுத்தி உள்ளன. முத­லா­வது, ‘பெயில் – இன்’ எனும் கருத்து.
மேலே தெரி­வித்த, ‘பெயில் – அவுட்’க்கு நேர்­மா­றா­னது, ‘பெயில் – இன்.’ அதா­வது, வெளி­யி­லி­ருந்து உத­வி­கள் பெறு­வ­தற்கு பதில், வங்­கிக்­குள்­ளேயே இருக்­கும் கடன்­கள், முத­லீ­டு­கள் ஆகி­ய­வற்றை கொண்டே, அந்த நிதி நிறு­வ­னத்தை காப்­பாற்­றும் வழி­முறை இது.
இதன்­படி, முதிர்வு காலத்­தில் பணத்­தைத் திருப்­பித் தரா­மல், அதற்கு பதி­லாக கடன் பத்­தி­ரங்­களை வழங்­க­லாம். முதிர்வு தொகை­யில், ஒரு குறிப்­பிட்ட சத­வீ­தத்தை குறைத்­துக் கொள்ள கோரப்­பட­லாம்.
வங்­கி­யில், மறு­மு­த­லீ­டாக அந்­தத் தொகை பயன்­ப­டுத்­தப்­ப­ட­லாம். பல மேலை­நா­டு­
களில், இந்த நடை­முறை
ஏற்­க­னவே இருக்­கிறது.
முதன்­மு­றை­யாக, நிதி­யி­யல் சட்ட மசோ­தா­வில், இந்த ஷரத்து சேர்க்­கப்­பட்டு உள்­ளது.
அதா­வது, நிதி நிறு­வ­னங்­கள், ‘திவால்’ நிலையை அடை­யும் போது, அதை காப்­பாற்ற பின்­பற்­றப்­படும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களில், ‘பெயில் – இன்’ முறை­யும் ஒன்று என்­பதே, இதன் அர்த்­தம். இங்கே தான், தேவை­யற்ற குழப்­ப­மும், பீதி­யும் ஏற்­பட்­டுள்ளன.
முத­லில், இந்­தி­யா­வில், எந்தவொரு நிதி நிறு­வ­ன­மும், திவால் நிலையை அடை­யும் வரை கண்டு கொள்­ளா­மல் விடப்­ப­டு­வ­தில்லை. இன்­று, புதிய திவால் சட்­டம் அம­லாகி இருக்­கும் நிலை­யில், வங்­கி­களின் வாராக்­க­டன்­கள் எவ்­வ­ளவு என்­பது, ஆரம்­பத்­தி­ லேயே தெரிந்து விடும்.
அவற்­றைத் தடுப்­ப­தற்­கான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள், வலு­வாக உள்ள நிலை­யில், வங்­கி­கள் கையறு நிலையை அடைந்து விடும் என, நம்­பு­வ­தற்கு வாய்ப்பே இல்லை.
அப்­படி ஒரு நிலை ஏற்­பட்­டால், என்ன செய்­ய­லாம் என்­பதை குறிப்­ப­தற்கே, ‘பெயில்- இன்’ என்­பது, ஒரு வாய்ப்­பாக முன்­வைக்­கப்­பட்டு உள்­ளது என, புரிந்து கொள்ள வேண்­டுமே அன்றி, நாளைக்கே, இந்த ஷரத்து அம­லுக்கு வந்து விடும் என, அர்த்­த­மில்லை.
மேலும், இந்த மசோ­தா­வி­லேயே, இதற்கு ஒரு பாது­காப்பு இருக்­கிறது. எல்லா வங்கி சேமிப்­பு­க­ளை­யும் இப்­படி, ‘பெயில் – இன்’ செய்­வ­தற்­கான வாய்ப்­பாக, வங்­கி­கள் பயன்­ப­டுத்­திக் கொள்ள முடி­யாது. 55 2(பி) துணைப் பிரிவு, மிகத் தெளி­வாக ஒரு விஷ­யத்­தைச் சொல்­கிறது.
வங்­கி­யில் முத­லீடு செய்­யும் போதே, நாளை இப்­ப­டிப்
­பட்ட அவ­ல­நிலை ஏற்­ப­டு­
மா­னால், என்­னு­டைய தொகையை, நீங்­கள் வங்­கியை காப்­பாற்­று­வ­தற்கு பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம் என, முத­லீட்­டா­ளர்­கள், ஒப்­பு­தல் பெறப்­பட்­டி­ருக்க வேண்­டும்.
அதா­வது, இது­வரை இத்­த­கைய ஒப்­பு­தல் பெறப்­ப­டாத நிலை­யில், வங்கி சேமிப்­பு­க­ளுக்கு, எந்த பாதிப்­பும் இல்லை.
நாளை, இந்த மசோதா இதே வடி­வில் நிறை­வேற்­றப்­ப­டு­மா­னால், அப்­போது, முத­லீடு செய்­யும் போதே, இந்த ஷரத்தை ஓர் ஆப்­ஷ­னாக, படிவம் குறிப்­பி­டும். அதை ஏற்­பதோ, ஏற்க மறுப்­பதோ, முத­லீட்­டா­ளர்­ கையி­லேயே இருக்­கிறது. இந்த பிரி­வுக்­கான ஒப்­பு­தலை, வங்­கி­கள் வற்­பு­றுத்­து­வ­தற்­கான வாய்ப்­பும் இல்லை.
இன்­னொரு விஷ­யம், வங்கி­கள் திவா­லா­னால், அதி­லுள்ள முத­லீ­டு­க­ளுக்­கான காப்­பு­றுதி. ஒரு வங்­கிக் கணக்­கில், ஒரு லட்­சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்­யப்­பட்­டி­ருந்­தால், வங்­கி­கள் திவா­லா­னால், ஒரு லட்­சம் ரூபாய் வரை, காப்­பீ­டுத் தொகை­யைத் திரும்­பப் பெற முடி­யும்.
இதை வழங்­கு­வ­தற்­கா­கத் தான், ‘வைப்­புத் தொகை காப்­பு­றுதி மற்­றும் கடன் உத்தர­வாத கார்ப்­ப­ரே­ஷன்’ என்ற அமைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.
அந்த அமைப்பு, புதிய சட்ட மசோ­தா­வால் உரு­வாக்­கப்­படும், ரெசல்­யூ­ஷன் கார்ப்­ப
ரே­ஷ­னோடு இணைத்­துக் கொள்­ளப்­படும் நிலை­யில், ஒரு லட்­சம் ரூபாய் காப்­பீடு வழங்­கப்­ப­டுமா என்ற தெளிவு இல்­லா­மல் இருக்­கிறது.
வழக்­க­மான அத்­தனை பாது­காப்­பு­க­ளோடு, கூடு­தல் பாது­காப்பை முத­லீட்­டா­ளர்­களுக்கு வழங்­கவே, இந்­தச் சட்­டம் கொண்டு வரப்­ப­டு­கிறது என்ற, நிதித் துறை­யின் விளக்கம் நம்பிக்கை அளிக்­கிறது.
குளிர் கால கூட்­டத்­தொடரில், பொது­மக்­களின் சந்­தே­கங்­களை தீர்த்து வைக்­கும் வித­மாக, இந்த மசோதா மீதான முழு­மை­யான விவா­தத்தை, பார்­லி­மென்ட் நடத்­து­மா­னால், இன்­னும் வெளிச்­சம் கிடைக்­கும்.
– ஆர்.வெங்­க­டேஷ்
பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)