மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லைமாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை ...  ‘இ ----– மெயில்’ மோசடி எச்சரிக்கை தேவை ‘இ ----– மெயில்’ மோசடி எச்சரிக்கை தேவை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘லிக்விட் பண்ட்’ முதலீடு தேர்வு செய்வது எப்படி? ‘
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2017
00:35

லிக்விட் பண்ட்’கள் குறைந்த ரிஸ்க் கொண்ட கடன்சார் மற்றும் இதர நிதி சாத­னங்­களில் முத­லீடு செய்­வதால், வைப்பு நிதிக்­கான பொருத்­த­மான மாற்­றாக கரு­தப்­ப­டு­கின்­றன.

சரா­சரி முத­லீட்­டா­ளர்­களைப் பொறுத்­த­வரை, வைப்பு நிதி முத­லீடு மிகவும் அவ­சி­ய­மா­னது தான். பாது­காப்­பா­ன­தா­கவும், நிச்­ச­ய­மான பலன் அளிக்க கூடி­ய­தா­கவும் இருப்­பது, வைப்பு நிதிக்­கான சாத­க­மான அம்­சங்­க­ளாக அமை­கின்­றன. ஓய்­வூ­தி­ய­தா­ரர்­க­ளுக்கு மாத வரு­மா­னத்­திற்­கான சாத­ன­மா­கவும் இது அமை­கி­றது.

இதே போலவே, லிக்விட் பண்ட் முத­லீடும் ஏற்­ற­தாக நிதி வல்­லு­னர்­களால் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. லிக்விட் பண்ட் என்­பவை, ‘மியூச்­சுவல் பண்ட்’ திட்­டங்­களில் ஒரு வகை­யாகும். இந்த வகை நிதிகள், 90 நாள் முதிர்வு கொண்ட பத்­தி­ரங்கள் மற்றும் இதர கடன்சார் நிதி சாத­னங்­களில் முத­லீடு செய்­கின்­றன. குறு­கிய கால முத­லீட்­டிற்கு இவை மிகவும் ஏற்­ற­தாக கரு­தப்­ப­டு­கி­றது.

ரிஸ்க் குறைவு

மேலும், இவை அளிக்கும் பலனும் வைப்பு நிதி பலனை விட மேம்­பட்­ட­தாக இருப்­ப­தாக கரு­தப்­ப­டு­கி­றது. அதே நேரத்தில், தேவை எனில் உட­ன­டி­யாக பணத்தை விலக்கிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்­கி­றது.எனினும், புதிய முத­லீட்­டா­ளர்கள் லிக்விட் பண்ட் முத­லீட்­டிற்கு மாறு­வ­தற்கு முன், அதன் முக்­கிய அம்­சங்­களை புரிந்து கொள்­வது அவ­சியம்.

லிக்விட் பண்ட்கள் மியூச்­சுவல் பண்ட் ரகத்தைச் சேர்ந்­தவை என்­றாலும், இவை அடிப்­ப­டை
யில் குறைந்த ரிஸ்க் கொண்ட பத்­தி­ரங்கள் போன்­ற­வற்றில் முத­லீடு செய்­வதால், வைப்பு நிதிக்கு பொருத்­த­மான மாற்­றாக கரு­தப்­ப­டு­கின்­றன. இந்த முத­லீ­டு­களில் இருந்து வரும் வட்டி வரு­மானம் சேர்ந்து முத­லீட்டின் பல­னாக அமை­கி­றது. மேலும், முத­லீட்டின் சந்தை போக்­கிற்கு ஏற்ப பலன்கள், என்.ஏ.வி., எனப்­படும் யூனிட்­க­ளுக்­கான நெட் அசெட் வேல்­யூ­வாக முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு மாற்றி அளிக்­கப்­ப­டு­கி­றது.

வட்டி ஏற்ற, இறக்கம்

மற்ற நிதிகள் போலவே சந்தை சார்ந்த நிதி சாதங்­களில் முத­லீடு செய்­தாலும், இவற்­றுக்­கான ஏற்ற, இறக்கம் பொது­வாக குறை­வா­ன­தாக இருக்கும் என கரு­தப்­ப­டு­கி­றது. தொடர்ந்து சேரும் வட்டி, தின­சரி என்.ஏ.வி., மதிப்­புடன் சேர்­வது, இவற்றை சிறந்த சேமிப்­பிற்­கான வழி­யாக கரு­தப்­ப­டு­கி­றது. எனினும், வைப்பு நிதி போல இவற்றின் பலன் நிச்­ச­யிக்­கப்­பட்­டவை அல்ல.

மியூச்­சுவல் பண்ட் திட்­டங்கள் அனைத்தும் சந்தை போக்கு சார்ந்­தவை என்­பதால், இவற்றின் பலன் குறித்து, நிறு­வ­னங்கள் உறுதி அளிப்­ப­தில்லை; இதற்­கான அனு­ம­தியும் இல்லை.
வைப்பு நிதி முத­லீட்­டிற்­கான வட்டி விகிதம், சந்­தையின் வட்டி விகித போக்­கிற்கு ஏற்ப அமையும். அது போலவே, லிக்விட் பண்ட் முத­லீ­டு­களின் வட்டி வரு­மான பலனும்,
சந்­தையின் வட்டி விகித போக்­கிற்கு ஏற்­பவே அமையும்.

வட்டி விகிதம் ரெப்போ விகி­தத்­திற்கு ஏற்ப அமை­வதால், வைப்பு நிதிக்­கான வட்டி, 9 சத­வீ­தத்தில் இருந்து, 6 சத­வீ­தத்தை நோக்கி வந்­தி­ருக்­கி­றது. லிக்விட் பண்ட் திட்­டங்­களும் இதே போன்ற ஏற்ற, இறக்­கத்­திற்கு உள்­ளாகும் வாய்ப்­புள்­ளன என்­றாலும், இவற்றின் பலன், 9 முதல், 10 சத­வீ­தத்தில் இருந்து, 7 சத­வீதம் நோக்கி வந்­துள்­ளன.

சேரும் வட்டி வரு­மானம் தவிர, சந்­தையின் ஏற்­றத்தால் கிடைக்கும் பலனும் சேர்­வது, லிக்விட் பண்ட்கள் அளிக்கும் சாத­க­மாகும். எனினும், இது நிதியை நிர்­வ­கிக்கும் திறன் சார்ந்­தது என்­ப­தையும் கவ­னிக்க வேண்டும். முத­லீட்டின் மீதான பலனை அதி­க­மாக்கும் உத்தி மற்றும் கடன்சார் முத­லீட்டின் தரத்தை உறுதி செய்­வது ஆகி­ய­வற்றில், நிதியை நிர்­வ­கிக்கும் மேலாளர் கவனம் செலுத்­துவார்.

லிக்விட் பண்ட்கள் அளிக்கக் கூடிய அதிக பலன் தவிர அவற்றின் சாத­க­மான அம்­சங்­க­ளாக
அமை­வது, எளி­தாக பணத்தை விலக்கும் தன்மை மற்றும் வரி அம்சம் ஆகி­யவை ஆகும்.
லிக்விட் பண்ட் திட்­டங்­களில் கோரிக்கை வைத்த ஒரு அலுவல் நாளில், பணத்தை வங்கி கணக்கில் பெற்றுக் கொள்­ளலாம். உட­னடி பணம் பெறும் வச­தியை அளிக்கும் நிதிகள் மூலம், 50 ஆயிரம் வரை பெறலாம். இவற்றுக்கு டிவிடன்ட் வினியோக வரி உண்டு.

இந்த அம்­சங்­களை பரி­சீ­லித்து, ஒருவர் தன் நிதி சூழல், இலக்­கு­க­ளுக்கு ஏற்ப லிக்விட் பண்ட் முத­லீட்டை தேர்வு செய்­யலாம்.

குறு­கிய கால முத­லீடு

* மியூச்­சுவல் பண்ட் திட்ட வகை­களில் ஒன்­றாக லிக்விட் பண்ட் திட்­டங்கள் விளங்­கு­கின்­றன.
* இந்த வகை நிதிகள், 90 நாள் முதிர்வு கொண்ட பத்­தி­ரங்கள், நிதி சாத­னங்­களில்
முத­லீடு செய்­கின்­றன.
* கூடுதல் பலன் அளிக்கக் கூடி­ய­தோடு, தேவைக்­கேற்ப விலக்கிக் கொள்ளும் வாய்ப்பும் உள்­ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)