செயல்­திறன் மேம்­பட உதவும் 3 வழிகள்!செயல்­திறன் மேம்­பட உதவும் 3 வழிகள்! ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.39 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.39 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
காப்­பீடு பெறும் முன் கவ­னிக்க வேண்­டி­யவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2017
00:41

போது­மான ஆயுள் காப்­பீடு பெற்­றி­ருப்­பது நிதி பாது­காப்­பிற்கு மிகவும் முக்­கி­ய­மா­னது. ஆனால், நடை­மு­றையில் ஆயுள் காப்­பீடு, பாது­காப்பு தவிர பிற அம்­சங்­க­ளுக்­கா­கவும் பெறப்­ப­டு­கி­றது. குழந்­தைகள் கல்வி, வரிச்­ச­லுகை, திரு­மண திட்­ட­மிடல் என பல­வி­த­மான நோக்­கங்­க­ளு­டனும் பாலி­சி­களை பெறும் வழக்கம் இருக்­கி­றது. எனவே, காப்­பீடு சரி­யான பலனை அளிக்க, பொது­வாக பலரும் செய்­யக்­கூ­டிய வழக்­க­மான தவ­று­களை செய்­யாமல் இருப்­பது நல்­லது.

நோக்கம் என்ன?

எதற்­காக காப்­பீடு பெறு­கிறோம் என்­பது தெரி­யாமல் பாலிசி வாங்­கு­வதை விட பெரிய தவறு வேறு இருக்க முடி­யாது. எனவே, முதலில் காப்­பீட்­டிற்­கான நோக்கம் குறித்த தெளிவு வேண்டும். காப்­பீட்டின் முதன்மை நோக்கம், குடும்­பத்­திற்­கான பாது­காப்­பாகும்; வரிச்­ச­லுகை அளிப்­பது அல்ல. அது ஒரு கூடுதல் பலன் அவ்­வ­ளவே. இதை மனதில் கொண்டு, தேவை­யான
அளவு காப்­பீடு பெற்­றி­ருக்க வேண்டும்.

எவ்­வ­ளவு தேவை?

காப்­பீடு பெறும் போது ஒருவர் தனக்கு எந்த அளவு பாது­காப்பு தேவை என்­பதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்­பிட்ட கட்­டத்தில் எவ்­வ­ளவு தேவை என கணக்­கி­டாமல், அதி­க­பட்­ச­மான சம் அஷ்­யூர்டு கொண்ட பாலி­சியை மட்டும் பெறு­வதால் பலன் இல்லை. ஆண்டு செல­வீ­னத்தை கணக்­கிட்டு பார்த்து பாலிசி அளவை தீர்­மா­னிப்­பதன் மூலம், தேவை­யில்­லாமல் அதிக பிரீமியம் செலுத்­து­வதை தவிர்க்­கலாம்.

எந்த பாலிசி?

ஒருவர் தனக்கு எந்த வகை பாலிசி தேவை என்­ப­திலும் கவ­ன­மாக இருக்க வேண்டும். டெர்ம் பாலி­சியே போதுமா? யூலிப் பாலிசி தேவையா போன்ற விஷ­யங்­களை ஆராய வேண்டும். யூலிப்கள் காப்­பீடு மற்றும் முத­லீடு கலந்­தவை. டெர்ம் பாலி­சிகள் பாது­காப்பை மட்டும்
அளிப்­பவை. என்­டோமென்ட் பாலி­சிகள் முதிர்வு கால பலன் கொண்­டி­ருந்­தாலும், அவற்றின் பலன் குறைவு என கரு­தப்­ப­டு­கி­றது.

பிரீமியம் என்ன?

ஒவ்­வொரு பாலி­சிக்கும் குறிப்­பிட்ட பிரீ­மியம் தொகையை செலுத்த வேண்டும். ஒவ்­வொரு
பாலி­சியும் அதன் தன்­மைக்­கேற்ப மாறு­பட்ட பிரீமியம் செலுத்த வேண்­டிய காலத்தை கொண்­டுள்­ளன. இதை அறிந்­தி­ருப்­பதன் மூலம் காப்­பீட்­டிற்­காக ஒருவர் செலுத்­தக்­கூ­டிய மொத்த தொகையை அறிந்து கொள்­ளலாம். இதன் மூலம் காப்­பீடு தரக்­கூ­டிய பலன்­களை சீர் துாக்கி பார்க்க முடியும்.

கிளைம் செய்யும் வழி

காப்­பீடு பாலி­சி­களை பல நிறு­வ­னங்கள் வழங்­கு­கின்­றன. குறிப்­பிட்ட நிறு­வ­னத்தை தேர்வு
செய்யும் முன், அந்­நி­று­வ­னத்தின் கிளைம் விகித செயல்­பாடு எப்­படி இருக்­கி­றது என்­பதை
பார்க்க வேண்டும். காப்­பீடு தொடர்­பான கிளைம்கள் நிறை­வேற்­றப்­படும் விதமே இவ்­வாறு
குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. கிளைம் விகிதம் கொண்டு நிறு­வ­னத்தின் நம்­ப­கத்­தன்­மையை தீர்­மா­னிக்­கலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)