புதிய ஆலையை துவக்கும் கெம்பிளாஸ்ட் நிறுவனம்புதிய ஆலையை துவக்கும் கெம்பிளாஸ்ட் நிறுவனம் ... ரூபாயின் மதிப்பும் சரிவு : ரூ.64.45 ரூபாயின் மதிப்பும் சரிவு : ரூ.64.45 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘ராய்ட்டர்ஸ்’ கருத்து கணிப்பு:சில்லரை விலை பணவீக்கம் ரிசர்வ் வங்கி இலக்கை விஞ்சும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2017
01:00

புதுடில்லி:‘உண­வுப் பொருட்­கள் விலை உயர்­வால், நவம்­ப­ரில், சில்­லரை விலை பண­வீக்­கம், ரிசர்வ் வங்கி நிர்­ண­யித்­துள்ள, 4 சத­வீத இலக்கை விஞ்­சி­யி­ருக்­கும்’ என, ‘ராய்ட்­டர்ஸ்’ நிறு­வ­னத்­தின் கருத்­துக் கணிப்­பில் தெரிய வந்­துள்­ளது.
இந்­நி­று­வ­னம், பொரு­ளா­தார வல்­லு­னர்­கள், 30 பேரி­டம், சில்­லரை விலை பண­வீக்­கம் குறித்து, கருத்­துக் கணிப்பு நடத்­தி­யது. அதன்­படி, நவம்­ப­ரில், சில்­லரை விலை பண­வீக்­கம், 0.62 சத­வீ­தம் உயர்ந்து, 4.20 சத­வீ­த­மாக அதி­க­ரித்­தி­ருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இது, அக்­டோ­ப­ரில், 3.58 சத­வீ­த­மாக இருந்­தது.கடந்த, 13 மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, நவம்­ப­ரில், சில்­லரை விலை பண­வீக்­கம் அதி­க­ரிக்க, பல பகு­தி­களில் பெய்த கன மழை, முக்­கிய கார­ணம் என­லாம்.கன மழை­யால், பழங்­கள், காய்­க­றி­கள் போன்ற அழு­கும் பொருட்­கள் பாதிக்­கப்­பட்­டன. இத­னால், வெங்­கா­யம், தக்­காளி உள்­ளிட்ட காய்­க­றி­கள் மற்­றும் பழங்­கள் விலை அதி­க­ரித்­துள்­ளது.
இத்­து­டன், அரசு ஊழி­யர்­களின் வீட்­டுப் படி உயர்வு, கச்சா எண்­ணெய் விலை­யேற்­றம், ஜி.எஸ்.டி.,யால் உயர்ந்­துள்ள மூலப்­பொ­ருட்­கள் விலை ஆகி­ய­வற்­றின் தாக்­கம் கார­ண­மா­க­வும், சில்­லரை விலை பண­வீக்­கம் அதி­க­ரித்­தி­ருக்­கும் என, கணிக்­கப்­பட்டு உள்­ளது.கடந்த, 2015 ஜன­வரி முதல், நடப்­பாண்டு ஆகஸ்ட் வரை, வங்­கி­களின் குறு­கிய கால கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்டி, 2 சத­வீ­தம் குறைக்­கப்­பட்டு, தற்­போது, 6 சத­வீ­தம் என்ற அள­வில் உள்­ளது.
ரிசர்வ் வங்கி, நடப்பு நிதி­யாண்­டில், சில்­லரை விலை பண­வீக்க இலக்கை, 4 சத­வீ­த­மாக நிர்­ண­யித்­துள்­ளது. 2018 மார்ச் வரை­யி­லான ஆறு மாதங்­களில், சில்­லரை விலை பண­வீக்­கம், 4.3 மற்­றும் 4.7 சத­வீ­தத்­திற்­குள் இருக்­கும் என, ரிசர்வ் வங்கி கணித்­துள்­ளது.இத­னால், 6ம் தேதி, ரிசர்வ் வங்கி வெளி­யிட்ட நிதிக் கொள்­கை­யில், வங்­கி­களின் குறு­கிய கால கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்டி விகி­தத்­தில் மாற்­றம் ஏதும் செய்­யப்­ப­ட­வில்லை. ‘நவம்­ப­ரில், மொத்த விலை பண­வீக்­கம், 3.78 சத­வீ­த­மாக இருக்­கும்’ என, ‘ராய்ட்­டர்ஸ்’ மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இது, அக்­டோ­ப­ரில், 3.59 சத­வீ­த­மாக இருந்­தது.
வட்டி விகிதம் குறையாது:கன மழை­யால், காய்­க­றி­கள், பழங்­கள் உள்­ளிட்ட, வேளாண் பொருட்­கள் உற்­பத்தி பாதிக்­கப்­பட்டு உள்­ளது. நாட்­டின் தொழில் துறை உற்­பத்தி வளர்ச்­சி­யும், பல­வீ­ன­மா­கவே உள்­ளது. செப்­டம்­ப­ரில் காணப்­பட்ட, 3.8 சத­வீத வளர்ச்சி, அக்­டோ­ப­ரில், 3 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. தேவை குறைவு, ஜி.எஸ்.டி., போன்­ற­வற்­றால் ஏற்­பட்ட தாக்­கம் இது. எனி­னும், ஒரு­சில துறை­கள், மந்த நிலை­யில் இருந்து விடு­பட்டு வரு­கின்றன. இருந்­தும், அனைத்து துறை­க­ளி­லும் இத்­த­கைய நிலை காணப்­ப­ட­வில்லை. தனி­யார் முத­லீ­டு­களும், மிகக் குறை­வா­கவே உள்ளன. இத்­த­கைய சூழ­லில், ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்டி விகி­தத்தை குறைப்­பது சாத்­தி­ய­மில்லை.ரூபா ரீகி நிட்ஸ்யூர் பொருளாதார குழு தலைவர், ‘லார்சன் அண்டு டூப்ரோ’

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
வர்த்தக துளிகள் டிசம்பர் 12,2017
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)