பதிவு செய்த நாள்
13 டிச2017
00:13

சென்னை:லெனோவா குழுமத்தைச் சேர்ந்த, ‘மோட்டோரோலா மொபிலிட்டி’ நிறுவனம், தென்னிந்தியாவில், முதன்முதலாக, சென்னையில், ‘மோட்டோரோலா ஹப்’ என்ற மொபைல் போன் விற்பனையகத்தை திறந்துள்ளது.
விஜயா போரம் மாலில் அமைந்துள்ள இந்த கடையில், வலைதளத்தில் மட்டுமே கிடைக்கும், மோட்டோரோலாவின் பிரத்யேக ஸ்மார்ட் போன்கள் உட்பட, அதன் அனைத்து வகையான மொபைல் போன்களும் கிடைக்கும்.
இது குறித்து, மோட்டோரோலா மொபிலிட்டி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், சுதின் மாத்துார் கூறியதாவது:
இந்தியாவில், முன்னணியில் உள்ள, ஐந்து ஸ்மார்ட் போன் சந்தைகளில் ஒன்றாக, சென்னை உள்ளது.சென்னையில், மோட்டோரோலா ஸ்மார்ட் போன்களுக்கு, சிறந்த வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக, தென்னிந்தியாவில் முதன்முதலாக, சென்னையில், சில்லரை விற்பனையகத்தை திறந்து உள்ளோம்.இத்துடன், இந்தியாவில், ‘மோட்டோரோலா ஹப்’களின் எண்ணிக்கை, 17 ஆக உயர்ந்துள்ளது. தென்னிந்தியாவில், மேலும் பல நகரங்களில், இது போன்ற பிரத்யேக கடைகளை திறக்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|