கூடுதல் பணியாளர் தேர்வில் இந்தியாவுக்கு 3வது இடம்கூடுதல் பணியாளர் தேர்வில் இந்தியாவுக்கு 3வது இடம் ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.44 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.44 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
15 மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியது சில்லரை விலை பணவீக்கம் 4.88 சதவீதமாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2017
00:18

புதுடில்லி:நாட்­டின் சில்­லரை விலை பண­வீக்­கம், 15 மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, நவம்­ப­ரில், 4.88 சத­வீ­த­மாக உயர்ந்­து உள்­ளது.

உண­வுப் பொருட்­கள், எரி­பொ­ருள் ஆகி­ய­வற்­றின் விலை உயர்­வால், பொரு­ளா­தார வல்­லு­னர்­கள், சில்­லரை பண­வீக்­கம், 4.20 சத­வீ­த­மாக உய­ரும் என, கணித்­தி­ருந்­த­னர். இதை­யும் விஞ்சி, பண­வீக்­கம் அதி­க­ரித்­துள்­ளது.மத்­திய புள்­ளி­யி­யல் மற்­றும் திட்ட அம­லாக்க அமைச்­ச­கத்­தின் கீழ் செயல்­படும், மத்­திய புள்­ளி­யி­யல் அலு­வ­ல­கம், மாதந்­திர சில்­லரை விலை பண­வீக்­கத்தை வெளி­யி­டு­கிறது.

வீழ்ச்சி

இதன்­படி, நவம்­ப­ரில், சில்­லரை விலை பண­வீக்­கம் குறித்த புள்ளி விப­ரம், நேற்று வெளி­யி­டப்­பட்­டது.அதில், நாட்­டின் சில்­லரை விலை பண­வீக்­கம், நவம்­ப­ரில், 4.88 சத­வீ­த­மாக அதி­க­ரித்து உள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. இது, 15 மாதங்­களில் இல்­லாத உச்­ச­மா­கும்.அக்­டோ­ப­ரில், சில்­லரை விலை பண­வீக்­கம், 3.58 சத­வீ­த­மாக இருந்­தது. 2016 ஆகஸ்­டில், சில்­லரை விலை பண­வீக்­கம், அதி­க­பட்­ச­மாக, 5.05 சத­வீ­த­மாக இருந்­தது.

அது முதல், படிப்­ப­டி­யாக குறைந்­தது. செப்­டம்­ப­ரில், சில்­லரை விலை பண­வீக்­கம், 4.31 சத­வீ­த­மாக சரி­வ­டைந்­தது. இதைத் தொடர்ந்து, 14 மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, அக்­டோ­ப­ரில், 4.20 சத­வீ­த­மாக குறைந்­தது. இது, நவம்­ப­ரில், 3.63 சத­வீ­த­மாக மேலும் வீழ்ச்சி கண்­டது.

நிதி கொள்கை

இந்­நி­லை­யில், கச்சா எண்­ணெய் விலை உயர்வு, கன மழை­யால், காய்­க­றி­கள், பழங்­கள் உள்­ளிட்ட வேளாண் பொருட்­கள் உற்­பத்தி பாதிப்பு, ஜி.எஸ்.டி., தாக்­கம், தொழில் துறை உற்­பத்தி வளர்ச்­சி­யில் மந்த நிலை போன்ற, பல்­வேறு கார­ணி­கள், பண­வீக்க உயர்­வுக்கு வழி­வ­குத்­துள்ளன.ரிசர்வ் வங்கி, நடப்பு, 2017 -– 18ம் நிதி­யாண்­டில், சில்­லரை விலை பண­வீக்க இலக்கை, 4 சத­வீ­த­மாக நிர்­ண­யித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், மத்­திய அரசு ஊழி­யர்­களின் வீட்டு வாடகை படி உயர்வு உள்­ளிட்ட கார­ணங்­க­ளால், இரண்­டாம் அரை­யாண்­டில், பண­வீக்­கம், 4.2 – 4.6 சத­வீ­த­மாக இருக்­கும் என, ரிசர்வ் வங்கி, சமீ­பத்­தில் வெளி­யிட்ட நிதிக் கொள்­கை­யில் தெரி­வித்­தி­ருந்­தது.இதன் கார­ண­மா­கவே, நிதிக் கொள்­கை­யில், வங்­கி­களின் குறு­கிய கால கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்டி விகி­தத்­தில், ரிசர்வ் வங்கி மாற்­றம் ஏதும் செய்­ய­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

எரிபொருள், உணவு பொருட்கள்

நவம்­ப­ரில், உண­வுப் பொருட்­களின் சில்­லரை விலை பண­வீக்­கம், 4.42 சத­வீ­த­மாக உயர்ந்­து
உள்­ளது. இது, அக்­டோ­ப­ரில், 1.90 சத­வீ­த­மா­க­வும், 2016 நவம்­ப­ரில், 2.03 சத­வீ­த­மா­க­வும் இருந்­தது.உணவு மற்­றும் பானங்­கள் பிரி­வின், சில்­லரை விலை பண­வீக்­கம், 4.41 சத­வீ­த­மாக உள்­ளது. புகை­யிலை மற்­றும் லாகிரி பொருட்­கள் பண­வீக்­கம், 7.75 சத­வீ­தம்; ஆயத்த ஆடை மற்­றும் கால­ணி­கள் பண­வீக்­கம், 4.96; வீட்டு வசதி, எரி­பொ­ருள் மற்­றும் இதர பிரி­வு­களின் பண­வீக்­கம், முறையே, 7.36 சத­வீ­தம், 7.92 சத­வீ­தம் மற்­றும் 3.63 சத­வீ­தம் என்ற அள­வில் உள்ளன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)