பதிவு செய்த நாள்
17 டிச2017
03:51
பல்ஸர் பிளாக் பேக்பஜாஜ் நிறுவன தயாரிப்புகளில் அதிகமாக விற்பனையாகும், ‘பல்ஸர்’ வரிசை பைக்குகள், உலகின் பல்வேறு நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அவற்றின் விற்பனை, ஒரு கோடியை கடந்துள்ளது. அதை கொண்டாடும் வகையில், ‘பிளாக் பேக்’ எனும், சிறப்பு பதிப்பு பைக்குகளை, பஜாஜ் தயாரித்து சந்தையில் களமிறக்கி உள்ளது. அது, 150, 180 மற்றும், 220 எப் என, மூன்று ரகங்களில் தயாரிக்கப்பட்டு உள்ளது.இவற்றில், புதிய அலாய் வீல், எரிபொருள் டேங்கின் இரு புறங்களிலும், டிகேல், கறுப்பு மற்றும் சாம்பல் நிற பூச்சு, ‘குரோம்’ புகைபோக்கி என, சில புதிய அம்சங்கள் உள்ளன. எனினும், தொழில்நுட்ப அம்சங்களில், மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. அது போல், விலையிலும் மாற்றம் இல்லை.150 ‘சிசி’ பைக்கின் ஷோரூம் துவக்க விலை, டில்லியில், 76,723 ரூபாயில் இருந்து துவங்குகிறது. இது போல், 180 ‘சிசி’ பைக்கின் விலை, 81,651 ரூபாய் மற்றும், 220 எப் பைக்கின் துவக்க விலை, 93,683 ரூபாய் என, வழக்கமான விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|