இந்­தி­யா­வில் மச­ராட்டி குவாட்­ர­போர்ட்டே ஜி.டி.எஸ்.,இந்­தி­யா­வில் மச­ராட்டி குவாட்­ர­போர்ட்டே ஜி.டி.எஸ்., ... அமெ­ரிக்க வட்டி உயர்வு நம்மை பாதிக்­குமா? அமெ­ரிக்க வட்டி உயர்வு நம்மை பாதிக்­குமா? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நிதி வாழ்க்கை உங்கள் கையில்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2017
23:55

எளி­மை­யான வழி­களை பின்­பற்­று­வதன் மூலம், நிதி வாழ்க்­கையை சீராக்கி, வாழ்க்­கையின் மற்ற அம்­சங்­களில் கவனம் செலுத்­தலாம் என்­கிறார், ‘ஈஸி மணி’ புத்­தக ஆசி­ரி­ய­ரான, லிஸ் புல்­லியம் வெஸ்டன்.

நிதி வாழ்க்­கையை கட்­டுப்­பாட்டில் எடுத்துக் கொள்­வ­தற்­கான வழி, நிதி நிலையை சரி­யாக அறிந்­தி­ருப்­பது தான். வங்கி சேமிப்பு கணக்கில் உள்ள தொகை, முத­லீடு கணக்கு, செலுத்­தப்­படும் பில்கள் என, எல்­லா­வற்­றையும் அறிந்­தி­ருக்க வேண்டும். பில் செலுத்­து­வது, சேமிப்பு போன்­ற­வற்றை தானி­யங்கி மய­மாக்க வேண்டும். நிதி நிலை பற்றி தெளி­வான புரிதல் கிடைத்­த­வுடன், செல­வு­களை கட்­டுப்­ப­டுத்த வேண்டும். வீட்­டிற்கு எடுத்து வரும் வரு­வாயில், 60 சத­வீதம் மட்­டுமே, மாத செல­வுக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.

எஞ்­சிய, 40 சத­வீத தொகையை, ஓய்வு கால சேமிப்பு, அவ­சர நிதி, திட்­ட­மிட்ட பெரிய செல­வுகள் போன்­ற­வற்­றுக்கு வைத்துக் கொள்ள வேண்டும். துவக்­கத்தில் இது கடி­ன­மாக தோன்­றலாம். ஆனால், பணம் செல­வாகும் வழி­களை கண்­ட­றிந்து கட்­டுப்­ப­டுத்­தினால், இது சாத்­தி­யமே. கிரெடிட் கார்­டு­களில், கடன் தொகையை நிலு­வையில் வைத்­தி­ருப்­பதை தவிர்க்க வேண்டும். கிரெடிட் கார்டு பழக்­கத்தில் கட்­டுப்­பாடு வரும் வரை, சில காலம் கார்டு பயன்­ப­டுத்­தாமல் இருக்­கலாம்.

ஓய்வு கால திட்­ட­மி­ட­லுக்கு ஏற்ற வகையில், தவ­றாமல் முத­லீடு செய்ய வேண்டும். காப்­பீடு பெறு­வ­திலும், போதிய கவனம் செலுத்த வேண்டும். ஆயுள் காப்­பீடு, மருத்­துவக் காப்­பீடு, வாகன காப்­பீடு அவ­சியம். பாது­காப்பை மட்டும் அளிக்கும், ‘டெர்ம் பாலிசி’ மிகவும் ஏற்­றது.

வீடு மற்றும் வாகனம் வாங்கும் போது, உங்கள் சக்­திக்கு மாறி­ய­வற்றை வாங்­கு­வதை தவிர்க்க வேண்டும். அதன்பின், மாதத் தவணை செலுத்த முடி­யாமல் அவ­திப்­பட வேண்டும். எந்த பெரிய செலவை செய்­வ­தற்கு முன், உங்கள் நிதி நிலையை ஆராய்ந்து பார்த்து, அதற்­கேற்ப திட்­ட­மிட வேண்டும். தேவை­யெனில், நிதி விஷ­யங்­களில் வழி­காட்ட, நிதி ஆலோ­ச­கர்கள் உத­வியை நாடலாம். நிதி ஆலோ­ச­கரை தேர்வு செய்யும் முன், அவர் நம்­ப­க­மா­ன­வரா என்­பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)