அக்மி சோலார் – எச்.ஜி., இன்ப்ரா., பங்கு வெளியீட்டிற்கு, ‘செபி’ அனுமதிஅக்மி சோலார் – எச்.ஜி., இன்ப்ரா., பங்கு வெளியீட்டிற்கு, ‘செபி’ அனுமதி ... ரூபாயின் மதிப்பும் ஏற்ற - இறக்கம் ரூபாயின் மதிப்பும் ஏற்ற - இறக்கம் ...
நுகர்பொருள், நுகர்வோர் சாதனங்கள் விற்பனை புத்தாண்டில் சூடுபிடிக்கும்; தயாரிப்பு நிறுவனங்கள் நம்பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2017
23:48

புதுடில்லி : பண மதிப்பு நீக்­கம், ஜி.எஸ்.டி., ஆகி­ய­வற்­றால் ஏற்­பட்ட பாதிப்­பு­கள் மறைந்து வரு­வ­தால், வரும் புத்­தாண்­டில், விற்­பனை சிறப்­பாக இருக்­கும் என, நுகர்­பொ­ருள் மற்­றும் நுகர்­வோர் சாத­னங்­கள் துறை­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­கள், நம்­பிக்கை தெரி­வித்து உள்ளன.

அதன் விப­ரம்: சுனில் டிசோசா, நிர்­வாக இயக்­கு­னர், வேர்ல்­பூல் இந்­தியா: ஜி.எஸ்.டி., அம­லாக்­கத்­திற்கு பின், நுகர்வு சந்தை, ஸ்தி­ர­மாக, மேம்­பாடு கண்டு வரு­வ­தற்­கான அறி­கு­றி­கள் தோன்றி உள்ளன. வரும் ஆண்­டில், மக்­களின் தேவை­கள், கிரா­மப்­பு­றங்­க­ளி­லும், நகர்ப்­பு­றங்­க­ளி­லும், சரி­ச­ம­மான அள­வில் அதி­க­ரிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அத­னால், நிறு­வ­னத்­தின் விற்­ப­னை­யும் சிறப்­பாக இருக்­கும்.

ஹர்ஷ வர்­தன் அகர்­வால், இயக்­கு­னர், இமாமி: சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களின் பாதிப்­பில் இருந்து, சில்­லரை விற்­ப­னை­யும், கிரா­மப்­புற வர்த்­த­க­மும் முழு­வ­து­மாக மீண்டு, இரட்டை இலக்க வளர்ச்சி என்ற ஆரோக்­கி­ய­மான பாதை­யில் நடை­போ­டத் துவங்கி உள்ளன. மொத்த விற்­பனை, 80 சத­வீத எழுச்­சியை கண்­டுள்­ளது. அடுத்த ஆண்டு, நுகர்­பொ­ருட்­க­ளுக்­கான தேவை அதி­க­ரிக்­கும்.

சதிஷ் பத்­ம­னா­பன், தலை­வர், சோனி இந்­தியா: நீண்ட கால வளர்ச்­சியை கருதி, மத்­திய அரசு சில சீர்­தி­ருத்­தங்­களை மேற்­கொண்­டது. அத­னால் ஏற்­பட்ட தாக்­கம் மறைந்து, ஆக்­க­பூர்­வ­மான சூழல் உரு­வாகி உள்­ளது. இந்­தாண்டை விட, வரும் ஆண்டு, நுகர்­வோர் சாத­னங்­கள் துறை மேம்­பட்­ட­தாக இருக்­கும். அனைத்து பிரி­வு­க­ளி­லும், நவீன தொழில்­நுட்ப வச­தி­க­ளு­டன், மின்­னணு சாத­னங்­களை அறி­மு­கப்­ப­டுத்த உள்­ளோம்.

சுனில் கட்­டா­ரியா, இந்­திய பிரிவு தலை­வர், ஜி.சி.பி.எல்.: பண மதிப்பு நீக்க நட­வ­டிக்கை, இந்­திய பொரு­ளா­தா­ரத்­தின், ‘கறுப்பு வாத்து’ ஆக வர்­ணிக்­கப்­ப­டு­கிறது. இத­னால், பல சோத­னை­களை, நுகர்­பொ­ருள் தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் சந்­திக்க வேண்­டிய நிலை உண்­டா­னது. இந்­தாண்டை போன்று இல்­லா­மல், அடுத்த ஆண்டு, வர்த்­த­கச் சூழல் நன்கு இருக்­கும் என, தெரி­கிறது.

லலித் மாலிக், தலைமை நிதி அதி­காரி, தாபர் இந்­தியா: பண மதிப்பு நீக்­க­மும், ஜி.எஸ்.டி., அம­லாக்­க­மும், மொத்த விற்­ப­னையை வெகு­வாக பாதித்­தன. குறிப்­பாக, நுகர்­பொ­ருட்­கள் வினி­யோ­கம் பாதிக்­கப்­பட்­டது. ஜி.எஸ்.டி., கார­ண­மாக, வணி­கர்­கள் கையி­ருப்பை குறைக்­கும் நோக்­கில், கொள்­மு­தலை குறைத்து கொண்­ட­னர். இத­னால், இத்­துறை நிறு­வ­னங்­கள் பாதிக்­கப்­பட்­டன. தற்­போது, இந்த தற்­கா­லிக பாதிப்பு மறைந்து, வளர்ச்­சியை நோக்கி பய­ணம் தொடர்­கிறது

ராஜீவ் புடானி, துணைத் தலை­வர், சாம்­சங் இந்­தியா: அடுத்த ஆண்டு, மின்­னணு சாத­னங்­கள் துறை­யில், புதிய கண்­டு­பி­டிப்­பு­களை, இந்­திய நுகர்­வோ­ருக்கு முதன்­மு­த­லாக வழங்க திட்­ட­மிட்டு உள்­ளோம். இதைத் தொடர்ந்து, வியக்­கத்­தக்க, புது­மை­யான சாத­னங்­களை அறி­மு­கப்­ப­டுத்த உள்­ளோம். குறிப்­பாக, குளிர்­சா­தன பிரி­வில், உல­கின் முதல் கண்­டு­பி­டிப்பை இணைத்து, 2018ம் ஆண்டை துவக்க முடிவு செய்­துள்­ளோம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)