மொபைல் போன் சார்ஜர் துறையில் 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புமொபைல் போன் சார்ஜர் துறையில் 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ... பிட்காயினை ஒதுக்கி விட முடியாது: ‘செபி’ தலைவர் பிட்காயினை ஒதுக்கி விட முடியாது: ‘செபி’ தலைவர் ...
தனியார் வங்கிகள் மீது அதிகரிக்கும் புகார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2017
23:50

கோல்கட்டா : பொதுத் துறை வங்­கி­களை விட, தனி­யார் துறை வங்­கி­கள் மீதான புகார்­கள் அதி­க­ரித்து வரு­வ­தாக, ரிசர்வ் வங்கி தெரி­வித்­துள்­ளது.

இவ்­வங்கி வெளி­யிட்­டுள்ள, வங்கி மத்­தி­யஸ்த மையத்­தின், கடந்த நிதி­யாண்டு அறிக்கை: தனி­யார் வங்­கி­கள் மீது, வாடிக்­கை­யா­ளர்­கள் அளித்த புகார்­களின் எண்­ணிக்கை, மூன்று ஆண்­டு­க­ளாக அதி­க­ரித்­துள்­ளது. 2015 – 16ம் நிதி­யாண்டை விட, 2016 – 17ம் நிதி­யாண்­டில், புகார்­கள், 30 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்ளன. இதே காலத்­தில், எச்.டி.எப்.சி., வங்கி மீதான புகார்­கள், 7,709லிருந்து, 9,884 ஆக உயர்ந்­துள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மீது கூறப்­பட்ட புகார்­கள், 7,897லிருந்து, 9,541 ஆக அதி­க­ரித்­துள்ளன.

வங்கி மத்­தி­யஸ்த மையம் கையாண்ட மொத்த புகார்­கள், 27 சத­வீ­தம் உயர்ந்து, 1.36 லட்­ச­மாக பெருகி உள்­ளது. பெரும்­பா­லான புகார்­கள், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு உறுதி அளித்­த­படி, வங்­கி­கள் நடந்து கொள்­வ­தில்லை என­வும், வங்­கி­களின் நியா­ய­மற்ற செயல்­பா­டு­கள் தொடர்­பா­க­வும் உள்ளன. ஏ.டி.எம்., அல்­லது டெபிட் கார்டு தொடர்­பாக, 12.5 சத­வீ­தம்; ஓய்­வூ­தி­யம் தொடர்­பாக, 6.5 சத­வீத புகார்­கள் வந்­துள்ளன.

கிரெ­டிட் கார்டு தொடர்­பான புகார்­களின் எண்­ணிக்கை, 8.5லிருந்து, 6.4 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. கடந்த நிதி­யாண்­டில், பொதுத் துறை வங்­கி­கள் மீதான புகார்­கள், 64லிருந்து, 62 சத­வீ­த­மாக சரி­வ­டைந்து உள்­ளது. இதில், எஸ்.பி.ஐ., குழும வங்­கி­கள் மீது மட்­டும், 27 சத­வீத புகார்­கள் வந்­துள்ளன. தனி­யார் மற்­றும் வெளி­நாட்டு வங்­கி­கள் மீது, முறையே, 26.5 சத­வீ­தம் மற்­றும், 2.5 சத­வீ­தம் என்ற அள­வில் புகார்­கள் குவிந்­துள்ளன. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மேல்முறையீடு:
தற்­போது, 34 வங்­கி­களில், தனி மத்­தி­யஸ்த மையங்­கள் உள்ளன. அவற்­றில் தீர்வு கிடைக்­கா­தோர், வங்கி மத்­தி­யஸ்த மையத்தை அணுகி முறை­யி­ட­லாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)