பதிவு செய்த நாள்
23 டிச2017
03:38

புதுடில்லி : ‘‘சர்வதேச வர்த்தகத்தில், இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
அவர், பிரகதி மைதானத்தில், சர்வதேச கண்காட்சி மையத்திற்கான அடிக்கல்லை நாட்டி பேசியதாவது: சர்வதேச வர்த்தகத்தில், இந்தியாவின் பங்கு, 1.7 சதவீத அளவிற்கு உள்ளது. இதை, 3 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்றுமதியும், இறக்குமதியும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு, குறிப்பிடத்தக்க பங்கை வழங்குகின்றன. நமது தேவையை பூர்த்தி செய்யவே, ஒரு பொருளை இறக்குமதி செய்கிறோம். அதன் மூலம், உலகத் தரமான பொருட்களை தயாரிக்கும் திறன் அதிகரிக்கிறது.
அதேசமயம், ஒரு பொருளை ஏற்றுமதி செய்வதன் மூலம், புதிய திறன்களை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக, இந்தியாவை உருவாக்க, உள்நாட்டில் முதலீடுகளும், நுகர்வும் அதிகரிக்க வேண்டும். அத்துடன், சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துவதும் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|