பதிவு செய்த நாள்
23 டிச2017
03:38

புதுடில்லி : ‘‘பெட்ரோல், டீசல் கார்களை விட, மின்சார கார்கள் விலை குறைவாக இருக்காது,’’ என, மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர், ஆர்.சி.பார்கவா கூறியதாவது:மத்திய அரசு, 2030ல், இந்தியா முழுவதும் மின்சார கார்கள் மயமாக வேண்டும் என, இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கு, மின் கார் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். மேலும், மின் கார்களின் விலையும் மலிவாக இருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாத பட்சத்தில் மின் கார்கள் விற்பனை, எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. இது, கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மிக சவாலான அம்சமாக உள்ளது. அதனால், மின் கார்கள் குறித்த சந்தை ஆய்வு மேற்கொள்ள, நிறுவனம் முடிவு செய்துள்ளது. மின் கார்களுக்கான மின்கலம், ‘சார்ஜ்’ மையங்கள் உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் குறித்து, மக்களிடம் கருத்து கேட்கப்படும்.
சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான மின்சார கார் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு தனி கொள்கையை உருவாக்க வேண்டும்.மாருதி சுசூகி நிறுவனம், டொயோட்டோ நிறுவனத்துடன் இணைந்து, 2020ல் மின்சார கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
40 சதவீதம்:
இந்தியாவில், தற்போது, ஆண்டுக்கு, 33 லட்சம் கார்கள் விற்பனையாகின்றன. இது, 2030ல், ஒரு கோடியாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அதில், 40 சதவீத கார்கள் மட்டுமே, மின்சாரத்தில் இயங்குபவையாக இருக்கும். 60 லட்சம் கார்கள், வழக்கமான எரிபொருளில் இயங்கும்.
ஆர்.சி. பார்கவா தலைவர், மாருதி சுசூகி இந்தியா
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|