பதிவு செய்த நாள்
23 டிச2017
03:39

புதுடில்லி : இந்திய மக்களிடம் அதிக நம்பிக்கையை பெற்ற நுகர்பொருள், ‘பிராண்டு’களில், பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது.
இது குறித்து, பாபா ராம்தேவின் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.திஜர்வாலா வெளியிட்டுள்ள, ‘டுவிட்டர்’ செய்தி: இந்தாண்டுக்கான, இந்திய பிராண்டு டிரஸ்ட் ஆய்வறிக்கையில், அதிவேகமாக விற்பனையாகும் நுகர்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களில், மக்களிடம் பெரிதும் நம்பிக்கையை பெற்ற, ‘பிராண்டு’களில், பதஞ்சலி முதலிடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆய்வுக்காக, 16 முக்கிய நகரங்களில் விற்பனையாகும், 11ஆயிரத்திற்கும் அதிகமான நுகர்பொருள், ‘பிராண்டு’கள் தேர்வு செய்யப்பட்டன. மேலும், 10ஆயிரத்திற்கும் அதிகமான பிராண்டுகளில், ‘மிகவும் கவர்ச்சிகரமான பிராண்டு’ என்ற சிறப்பும் பதஞ்சலிக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மக்களுக்கு ஆயுர்வேதம் சார்ந்த நுகர்பொருட்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், 2006ல் பாபா ராம்தேவ், ஆச்சார்ய பால்கிருஷ்ணா ஆகியோர் இணைந்து, பதஞ்சலி நிறுவனத்தை துவக்கினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|