பதிவு செய்த நாள்
24 டிச2017
07:30

ஹீரோ: 3 புதிய பைக்குகள் அறிமுகம்க் விற்பனையில் முன்னணியில் இருக்கும், ‘ஹீரோ மோட்டோ கார்ப்’ நிறுவனம், தற்போது, அதன் மூன்று பைக்குகளில் மாற்றங்களை செய்து, சந்தையில் புதியனவாக களமிறக்கி உள்ளது.இந்நிறுவன பைக்குகளில் அதிகம் விற்பனையாகும், ‘ஸ்பிளெண்டர்’ பைக்கில், சில மாற்றங்களை செய்து, ‘சூப்பர் ஸ்பிளெண்டர்’ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதில், அதிக திறனுடைய, 125 ‘சிசி’ இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இதில் உள்ள, ‘ஐ 3 எஸ், ஸ்டார்ட் – ஸ்டாப்’ எனும் தொழில்நுட்பம், இன்ஜின், ‘ஆன்’ செய்யப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட வினாடிகளுக்கு மேல் நீடித்தால், அது தானாக, ‘ஆப்’ ஆகி, எரிபொருளை சேமிக்கும். ‘கிளட்சை’ அழுத்தினால் போதும், மீண்டும், ‘ஸ்டார்ட்’ ஆகி விடும். இத்துடன், பொருட்கள் வைக்க அதிக இட வசதி, ‘சைடு ஸ்டேன்ட் இண்டிகேட்டர், ஆட்டோ ஹெட் லேம்ப்’ என, கூடுதல் அம்சங்கள் பலவும் சேர்க்கப்பட்டு உள்ளன.இது போல், 110 ‘சிசி’ இன்ஜின் மற்றும், ‘ஐ 3 எஸ், ஸ்டார்ட் – ஸ்டாப்’ வசதி உடைய, புதிய, ‘பேஷன் புரோ, பேஷன் எக்ஸ் புரோ’ பைக்குகளையும் அறிமுகம் செய்துள்ளது.‘எக்ஸ் புரோ’வில், ‘பேஷன் புரோ’வில் உள்ள, அதே இன்ஜின் உள்ளிட்ட அம்சங்களுடன், கூடுதலாக, ‘டெயில் லேம்ப், ஹெட்லேம்ப், டிஜிட்டல் மீட்டர்’ போன்ற, பல அம்சங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டு உள்ளன.
மாருதி சுசூகி
வருகிறது புதிய, ‘சுவிப்ட்’மாருதி நிறுவனத்தின், ‘ஹேட்ச்பேக்’ வகை காரான, ‘சுவிப்ட்’ வாடிக்கையாளர்களிடையே, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் தற்போது, பல்வேறு மாற்றங்களை செய்து, ‘நியூ ஜென்’ சுவிப்ட் காரை அறிமுகம் செய்ய, அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இந்த புதிய தலைமுறை சுவிப்டில், வாகனத்தின் புறத் தோற்றத்தில், பெரிய மாறுதல்கள் இல்லை எனினும், ‘ஹெட்லேம்ப், டெயில் லைட், நோஸ்’ ஆகியவற்றில், மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.அதே நேரத்தில், பெட்ரோல் வேரியன்டில், அதே, 1.2 லி., டீசல் வேரியன்டில், அதே, 1.3 லி., டீசல் இன்ஜின் தொடர்கிறது. ஆனால், டீசல் இன்ஜினின் சக்தியை மட்டும், பின் அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.மேலும், இரு வேரியன்ட்களிலும், கியர் பயன்பாடு இல்லாத, ஆட்டோமேட்டிக் வேரியன்ட்கள் இடம்பெற உள்ளன. ‘சேஸிஸ்’ பொறுத்தவரை, இலகுவாக, ஆனால் கடினமானதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. உட்புறத்தில், ‘ஆப்பிள் கார் பிளே’ போன்ற, நவீன தொடுதிரை இன்போடெயின்மென்ட், கால்களை நீட்டி மடக்கி அமர, கூடுதல் இடம் போன்ற பல அம்சங்கள், புதிதாக இருக்கும். இது, டில்லியில், பிப்ரவரியில் நடக்கும், ‘ஆட்டோ ஷோ’வில் அறிமுகமாகிறது. இது, ‘போர்டு பிகோ, ஹுண்டாய் கிராண்ட் ஐ 10’க்கு போட்டியாக விளங்கும்.
மஹிந்திராவருகிறது, டியுவி 300 பிளஸ்மஹிந்திரா நிறுவனத்தின் சிறிய ரக, எஸ்.யு.வி.,யான, ‘டியுவி 300’க்கென, பிரத்யேக வாடிக்கையாளர் கூட்டம் உண்டு. அதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, அதில் மேலும் சில மாற்றங்களை செய்ய, மஹிந்திரா முடிவெடுத்தது. அதன்படி, வாகனத்தின் நீளத்தை சற்று அதிகரித்து, ‘டியுவி 300 பிளஸ்’ எனும் பெயரில் புதிய, எஸ்.யு.வி.,யை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இது குறித்த, அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், சில தகவல்கள் கசிந்துள்ளன.அதன்படி, இதில், 120 எச்.பி., திறனை உருவாக்கும், ‘2.0 லி., டீசல் இன்ஜின்’ பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் ஷோரூம் விலை, 9.47 லட்சம் ரூபாயில் இருந்து துவங்கக்கூடும். மேலும், முந்தைய மாடலை விட, இதில், உடல் அமைப்பு மேலும் வலுவுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.பின்புறத்திலும், அழகுக்காக புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இருக்கைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. விரைவில்அறிமுகமாக உள்ள, ‘டியுவி 300பிளஸ்’ மஹிந்திராவின், ‘சைலோ’வுக்கு மாற்றாக, சாலைகளில் வலம் வரும் என, சந்தையில் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹுண்டாய்புத்தாண்டில் விலை உயர்வுஇந்தியாவில், கார் உற்பத்தியில் இரண்டாமிடத்தில் உள்ள, ‘ஹுண்டாய்’ நிறுவனம், அதன் வாகனங்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. ஜன., முதல், ஹுண்டாய் வாகனங்களின் விலை, 2 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. ஆனால், இதற்கு முன், உயர்த்தியதை விட, இது குறைவு தான் என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.ஹுண்டாய் தயாரிப்புகளில், விலை அதிகமான, டுக்ஸன், எஸ்.யு.வி.,யின் விலை, கடந்த ஆண்டு உயர்வின் போது, ஒரு லட்சம் ரூபாய் அதிகரித்தது. ஆனால் இம்முறை, அதன் விலை, 50 ஆயிரம் ரூபாய் வரை தான் உயர்த்தப்பட உள்ளது. இது குறித்து, ஹுண்டாய் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர், ராகேஷ் ஸ்ரீவஸ்தவா கூறும் போது, ‘உற்பத்தி செலவும், உதிரி பாகங்களுக்கான செலவினமும் அதிகரித்ததால் தான், விலையை உயர்த்த வேண்டியுள்ளது’ என்றார். ஏற்கனவே, ‘மாருதி, டாடா, மஹிந்திரா, டொயோட்டா, ஜீப், ரெனோ, போக்ஸ்வேகன், ஸ்கோடா’ உள்ளிட்ட, 10 நிறுவனங்கள், விலையை உயர்த்தப் போவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒகினாவாஅதிவேக, ‘இ – ஸ்கூட்டர்’ஜப்பானிய நிறுவனமான, ‘ஒகினாவா ஸ்கூட்டர்ஸ்’ இந்தியாவில், ‘ரிட்ஜ்’ எனும், ‘பேட்டரி’யால் இயங்கும், ‘இ – ஸ்கூட்டரை’ ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், அது, அடுத்த அறிமுகமாக, ‘பிரைஸ்’ எனும் சக்தி வாய்ந்த, இ – ஸ்கூட்டரை களமிறக்கி உள்ளது. இதில், 1,000 வாட் மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது. அது, நிற்காமல், 170 – 200 கி.மீ., வரை ஓடக் கூடியது என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் உச்சபட்ச வேகம், மணிக்கு, 75 கி.மீ., ஆகும். இது, இந்தியாவிலேயே வேகமான, இ – ஸ்கூட்டராக அறியப்படுகிறது.இதில், விலை உயர்ந்த, லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்படுவதால், வேகமாக, அதாவது, ஆறு மணி நேரத்திற்கு பதில், இரண்டு மணி நேரத்திலேயே, ‘சார்ஜ்’ ஆகி விடுமாம். அதனால், காத்திருக்கும் நேரம் குறைகிறது. டில்லியில் ஷோரூம் விலை, 59,889 ரூபாயில் இருந்து துவங்குகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|