ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய – மாநில அரசுகள் ஆலோசனைஏற்றுமதியை அதிகரிக்க மத்திய – மாநில அரசுகள் ஆலோசனை ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.63.72 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.63.72 ...
வலைதள சந்தை நிறுவனங்களால் பாதிப்பு:சில்லரை விற்பனைக்கு தேசிய கொள்கை வர்த்தகர்களுக்கு மத்திய அரசு உறுதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2018
00:57

புதுடில்லி:சிறிய வியா­பா­ரம், பெரிய அள­வி­லான சில்­லரை விற்­பனை, மின்­னணு வர்த்­த­கம், நுகர்­வோ­ருக்கு நேரடி விற்­பனை உட்­பட, பல­த­ரப்­பட்ட வர்த்­த­கத்­திற்­கென, தேசிய வர்த்­தக கொள்­கையை, மத்­திய அரசு அறி­மு­கப்­ப­டுத்த உள்­ளது.
இது குறித்து, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­ச­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:அனைத்­திந்­திய வர்த்­த­கர்­கள் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­கள், அதன் செக­ரட்­டரி ஜென­ரல், பிர­வீன் கந்­தல்­வால் தலை­மை­யில், மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர், சுரேஷ் பிர­புவை சந்­தித்து பேசி­னர்.
அப்­போது, மின்­னணு வணிக நிறு­வ­னங்­கள், அன்­னிய நேரடி முத­லீட்டு கொள்­கை­களை மீறி, நுகர்­வோ­ருக்கு நேர­டி­யாக பொருட்­களை விற்­ப­தால், தங்­களின் வர்த்­த­கம் பாதிக்­கப்­ப­டு­வ­தாக, அவர்­கள் புகார் தெரி­வித்­த­னர்.
தடைவலை­தள சந்தை நிறு­வ­னங்­கள், நேர­டி­யாக நுகர்­வோ­ருக்கு பொருட்­களை வழங்க, அன்­னிய நேரடி முத­லீட்டு சட்­டம் தடை செய்­கிறது.இந்­நி­று­வ­னங்­கள், வியா­பா­ரி­க­ளுக்­குத் தான் பொருட்­களை விற்க வேண்­டும் என, சட்­டம் கூறு­கிறது. ஆனால், வலை­தள சந்தை நிறு­வ­னங்­கள், கவர்ச்­சி­க­ர­மான தள்­ளு­ப­டி­க­ளை­யும், சலு­கை­க­ளை­யும் அளிப்­ப­தாக, மிகப்­பெ­ரிய அள­வில், ஊட­கங்­களில் விளம்­ப­ரம் செய்­கின்றன.
சமீ­ப­கா­ல­மாக, பல நிறு­வ­னங்­கள், பொருட்­களின் விலையை வெகு­வாக குறைத்து, விற்­பனை செய்­வது அதி­க­ரித்து வரு­கிறது. தள்­ளு­படி சலு­கை­க­ளால் தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளுக்கு ஏற்­படும் இழப்பை, வலை­தள சந்தை நிறு­வ­னங்­கள் ஈடு செய்­கின்றன.இந்த வகை­யில், இந்­நி­று­வ­னங்­கள், அப்­பட்­ட­மாக, அன்­னிய நேரடி முத­லீட்டு விதி­மு­றை­களை மீறி, நுகர்­வோரை நேர­டி­யாக அணுகி பொருட்­களை விற்­கின்றன என, வர்த்­த­கக் குழு­வி­னர், குற்­றஞ்­சாட்­டி­னர்.
கேள்வி
வலை­தள சந்தை நிறு­வ­னங்­கள், வியா­பா­ரி­க­ளுக்கே பொருட்­களை விற்­ப­தாக கூறி­னா­லும், எதற்­காக, நுகர்­வோரை நேர­டி­யாக ஈர்க்­கும் வகை­யில், பெரிய அள­வில் விளம்­ப­ரங்­களை வெளி­யிட வேண்­டும் என, அமைச்­ச­ரி­டம் வர்த்­தக பிர­தி­நி­தி­கள் கேள்வி எழுப்­பி­னர்.ஆகவே, வலை­தள சந்தை நிறு­வ­னங்­களின் சட்­ட­மீ­றலை தடுக்க, தேசிய அள­வில், சில்­லரை விற்­பனை கொள்­கையை, மத்­திய அரசு உரு­வாக்க வேண்­டும். சிறிய வியா­பா­ரம், பெரிய நிறு­வ­னங்­களின் சில்­லரை விற்­பனை, மின்­னணு வர்த்­த­கம், நேர­டி­யாக, நுகர்­வோ­ருக்கு பொருட்­களை விற்­கும் முறை ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கி­ய­தாக, இக்­கொள்கை இருக்க வேண்­டும் என, அமைச்­ச­ரி­டம் தெரி­விக்­கப்­பட்­டது.
இது தொடர்­பான மனுவை பெற்ற அமைச்­சர், விரை­வில், இப்­பி­ரச்னை குறித்து, இரு தரப்பு குழுவை கூட்டி விவா­திப்­ப­தா­க­வும், சில்­லரை வியா­பா­ரி­களின் தொழிலை பாது­காக்க, தேசிய சில்­லரை விற்­பனை கொள்கை உரு­வாக்­கப்­படும் என­வும் உறுதி அளித்­தார்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)