மொபைல் அழைப்பு இணைப்பு: புதிய விதிமுறைகள் வெளியீடுமொபைல் அழைப்பு இணைப்பு: புதிய விதிமுறைகள் வெளியீடு ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.63.56 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.63.56 ...
2017 டிசம்பர் மாதத்தில்...தயாரிப்பு துறையில் விறுவிறுப்பு:5 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2018
00:26

புதுடில்லி:கடந்த, 2017 டிசம்­ப­ரில், இந்­திய தயா­ரிப்­புத் துறை­யின் உற்­பத்தி, 5 ஆண்­டு­களில் இல்­லாத வகை­யில், விறு­வி­றுப்­பான வளர்ச்சி விகி­தத்தை கண்­டி­ருப்­பது, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.
இது குறித்த, ‘நிக்கி – மார்­கிட்’ ஆய்­வ­றிக்கை:நுகர்­வோ­ரின் தேவை, இடை­நிலை பொருட்­கள் விலை, முத­லீடு ஆகிய மூன்று பிரி­வு­களின் அடிப்­ப­டை­யில், தயா­ரிப்­புத் துறை வளர்ச்சி கணிக்­கப்­ப­டு­கிறது.கடந்தாண்டு டிசம்­ப­ரில், தயா­ரிப்­புத் துறை­யின் உற்­பத்தி வளர்ச்­சியை குறிக்­கும், ‘நிக்கி இந்­தியா, எம்.பி.எம்.,’ குறி­யீடு, 54.7 புள்­ளி­க­ளாக உயர்ந்­துள்­ளது. இது, நவம்­ப­ரில், 52.6 புள்­ளி­க­ளாக இருந்­தது.
தயா­ரிப்­புத் துறை­யின் உற்­பத்தி வளர்ச்சி, தொடர்ந்து ஐந்து மாதங்­க­ளாக, 50 புள்­ளி­களை தாண்­டியே இருக்­கிறது. இந்த அள­வீட்­டிற்கு குறை­வாக இருக்­கும் பட்­சத்­தில், அது, தயா­ரிப்­புத் துறை உற்­பத்தி வளர்ச்­சி­யின் பின்­ன­டைவை குறிக்­கும்.கடந்த, 2012 டிச., மற்­றும் 2016 அக்­டோ­ப­ருக்கு பின், மதிப்­பீட்டு மாதத்­தில் தான் அதிக, ‘ஆர்­டர்’கள் கிடைத்­து உள்ளன.
இத­னால், வர்த்­த­கச் செயல்­பா­டு­கள் விறு­வி­றுப்­ப­டைந்து, உற்­பத்தி வளர்ச்சி விகி­தம் வேக­மாக அதி­க­ரித்­துள்­ளது.உள்­நாட்­டி­லும், வெளி­நா­டு­க­ளி­லும், நுகர்­வோ­ரின் தேவை அதி­க­மாக இருந்­தது. இது, தயா­ரிப்­புத் துறை­யின் உற்­பத்தி உயர துணை புரிந்­தது.
நிறு­வ­னங்­கள், உற்­பத்­தியை அதி­க­ரிக்க, அதி­க­ள­வில் ஊழி­யர்­களை நிய­மித்­தன. இதன் கார­ண­மாக, தயா­ரிப்பு நிறு­வ­னங்­களில், 2012 ஆகஸ்­டுக்கு பின், ௨௦௧௭ டிசம்­ப­ரில் தான், அதிக வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கின.ஜூலை­யில் அறி­மு­க­மான, ஜி.எஸ்.டி., மூலப்­பொ­ருட்­கள் விலை­யில் ஏற்­ப­டுத்­திய தாக்­கம், இன்­னும் தொடர்­கிறது.அதே சம­யம், நுகர்­வோ­ரின் தேவை அதி­க­ரித்­துள்­ளது. செல­வு­களை கட்­டுப்­ப­டுத்தி வந்த நுகர்­வோர், டிசம்­ப­ரில், சற்று தாரா­ள­மான போக்கை கடை­பி­டித்­த­னர். இந்த வாய்ப்பை நழுவ விடாத நிறு­வ­னங்­கள், மூலப்­பொ­ருட்­கள் விலை உயர்வை, நுகர்­வோர் தலை­யில் சுமத்­தா­மல் ஏற்­றன. இத­னால், நிறு­வ­னங்­களின் லாப வரம்­பில், தாக்­கம் ஏற்­பட்­டுள்­ளது.
ஆய்­வில் பங்­கேற்ற பல நிறு­வ­னங்­கள், அடுத்த ஓராண்­டில், சந்தை நில­வ­ரம் மேம்­படும் என்­ப­தால், வரும் காலாண்­டி­லும் வளர்ச்சி நீடிக்­கும் என, நம்­பிக்கை தெரி­வித்து உள்ளன. இந்­தாண்டு, தயா­ரிப்­புத் துறை சிறப்­பாக செயல்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
எழுச்சியை நோக்கி
பண மதிப்பு நீக்­கம், ஜி.எஸ்.டி., அறி­மு­கம் ஆகி­யவை, பொரு­ளா­தார வளர்ச்­சி­யில், தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி உள்ளன. அதி­லி­ருந்து மீள்­வ­தற்­கான சவால்­களை, தயா­ரிப்­புத் துறை சந்­திக்க வேண்டி உள்­ளது. எனி­னும், இத்­து­றை­யின் உற்­பத்தி வளர்ச்சி குறித்த வர­லாற்­று­டன் ஒப்­பி­டும் போது, ஒட்­டு­மொத்த அள­வில், வீழ்ச்­சி­யில் இருந்து எழுச்சி கண்டு வரு­வது தெள்­ளத் தெளி­வாக தெரி­கிறதுஆஷ்னா தோதியா பொரு­ளா­தார வல்­லு­னர், ஐ.எச்.எஸ்., மார்­கிட்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)