தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ... ‘வாட்’ வரியால் சவுதி இந்தியர்கள் பாதிப்பு ‘வாட்’ வரியால் சவுதி இந்தியர்கள் பாதிப்பு ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
வீடுகளின் கட்டுமான செலவு சதுர அடிக்கு ரூ.400 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2018
00:10

சென்னை:மணல், சிமென்ட், கம்பி விலை உயர்­வால், அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­களின் கட்­டு­மான செலவு, 1 சதுர அடிக்கு, 400 ரூபாய் உயர்ந்து உள்­ள­தாக, இந்­திய ரியல் எஸ்­டேட் மேம்­பாட்­டா­ளர்­கள் சங்­கங்­களின் கூட்­ட­மைப்­பான, ‘கிரெ­டாய்’ நிர்­வா­கி­கள் தெரி­வித்­த­னர்.இது குறித்து, ‘கிரெ­டாய்’ சென்னை பிரிவு தலை­வர், சுரேஷ் கிருஷ்­ணன் கூறி­ய­தா­வது:தமி­ழ­கத்­தில், ஆறு மாதங்­க­ளுக்கு முன், கட்­டு­மான பணி­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­படும் மண­லின் விலை, 1 கன அடி, 35 ரூபா­யாக இருந்­தது. இது தற்­போது, 135 ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. சிமென்ட் விலை, ஒரு மூட்டை, 270 ரூபா­யில் இருந்து, 330 ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.டி.எம்.டி., கம்­பி­கள் விலை, 1 டன், 34 ஆயி­ரம் ரூபா­யாக இருந்­தது. தற்­போது, 47 ஆயி­ரம் ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இத்­து­டன் செரா­மிக் பதி­கற்­கள், மின் ஒய­ரிங் பொருட்­கள் விலை­யும் உயர்ந்­துள்­ளது.இந்த திடீர் விலை உயர்வு கார­ண­மாக, அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­க­ளுக்­கான கட்­டு­மான செலவு, சதுர அடிக்கு, 400 ரூபாய் உயர்ந்­துள்­ளது. இதை, வீட்­டின் விலை­யில் சேர்ப்­பதை தவிர, எங்­க­ளுக்கு வேறு வழி தெரி­ய­வில்லை.இத­னால், நான்கு தளங்­கள் வரை­யி­லான குடி­யி­ருப்­பு­களில், வீட்­டின் விலை­யில் கட்­டு­மான செலவு மட்­டும், சதுர அடிக்கு, 3,000 ரூபா­யில் இருந்து, 3,400 ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இந்­நி­லை­யில், பெரிய நிறு­வ­னங்­கள் புதிய குடி­யி­ருப்பு திட்­டங்­களை அறி­விப்­பதை நிறுத்தி விட்­டன. இதே போன்று, வீடு­கள் விற்­ப­னை­யின் மீது மத்­திய அரசு விதித்­துள்ள, ஜி.எஸ்.டி.,யில், நிலத்­தின் மதிப்பு சேர்க்­கப்­ப­டு­வ­தால், வீடு­கள் விற்­பனை விலை­யில் குழப்­பம் ஏற்­பட்­டு உள்­ளது. இப்­பி­ரச்­னை­க­ளால், 10 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீ­டு­கள் முடங்கி உள்ளன; 10 லட்­சம் பணி­யா­ளர்­கள் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர்.இந்த விவ­கா­ரத்­தில் அரசு தலை­யிட்டு தீர்வு காண நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)