பதிவு செய்த நாள்
05 ஜன2018
23:51
புதுடில்லி:‘நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.5 சதவீதமாக இருக்கும்’ என, மத்திய புள்ளியியல் அலுவலகத்தின், முதல் முன்கூட்டிய மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன் விபரம்:கடந்த, 2016- – 17ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 7.1 சதவீதமாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டில், 6.5 சதவீதமாக இருக்கும். ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவில், 5.7 சதவீதமாக குறைந்தது.அதன்பின், பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகள் தோன்றின.
இதனால், ஜூலை – செப்., வரையிலான, இரண்டாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6.3 சதவீதமாக வளர்ச்சி கண்டது. ஏப்., – செப்., வரையிலான முதல் அரையாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6 சதவீதமாக இருந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6.7 சதவீதமாக இருக்கும் என, தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|