பேயர் – மான்சான்டோ இணைப்பால் பாதிப்பு?  பொது கருத்து கேட்கிறது சி.சி.ஐ.,பேயர் – மான்சான்டோ இணைப்பால் பாதிப்பு? பொது கருத்து கேட்கிறது சி.சி.ஐ., ... தயாராகிறது மத்திய பட்ஜெட் உள்நாட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்க சுற்றுலா துறையை ஊக்குவிக்க திட்டம் தயாராகிறது மத்திய பட்ஜெட் உள்நாட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்க சுற்றுலா ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ராயல் என்­பீல்டு:உற்­பத்தி நிறுத்­தப்­பட்ட பைக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2018
03:43

ராயல் என்­பீல்டு நிறு­வ­னம், அதன் பிர­பல, ‘கான்­டி­னென்­டல் ஜி.டி.,’ 535 ‘சிசி’ பைக்­கின் உற்­பத்­தியை நிறுத்தி உள்­ளது. எனி­னும், கான்­டி­னென்­டல் ஜி.டி., என்ற பெயர், அதன் ரசி­கர்­கள் மன­தில் பதிந்து விட்­டது. அத­னால், அடுத்து அறி­மு­க­மாக உள்ள, 650 ‘சிசி’ திற­னு­டைய, புதிய மாடல் பைக்­கிற்கு, கான்­டி­னென்­டல் ஜி.டி.,யின் பெயரை, ராயல் என்­பீல்டு, ‘ரிசர்வ்’ செய்­துள்­ளது.

‘கபே ரேசர்’ ரகத்­தைச் சேர்ந்த, கான்­டி­னென்­டல் ஜி.டி., 535 ‘சிசி’ பைக்­கின் உற்­பத்தி நிறுத்­தப்­பட்­டா­லும், அது சில டீலர்­க­ளி­டம், ‘ஸ்டாக்’ இருப்­ப­தால், அவை இன்­னும் விற்­ப­னைக்கு வைக்­கப்­பட்டு உள்ளன. புதி­தாக அறி­மு­க­மாக உள்ள இந்த, 650 ‘சிசி’ கபே ரேசர் ரக பைக்­கில், ஆங்­கு­லர் டேங்க், நீள­மான இருக்கை என, 535 ‘சிசி’யில் இருந்த அம்­சங்­கள் தொடர்­கின்றன. ஆனால் இதில், முன்­னதை விட இன்­னும், அழ­காக வடி­வ­மைக்­கப்­பட்டு இருக்­கி­ற­தாம். இதில், 47 எச்.பி., திறனை உரு­வாக்­கும், 648 ‘சிசி’ ஏர் கூல்டு பேர­லல் மோட்­டார் இன்­ஜின் பொருத்­தப்­பட்டு உள்­ளது.


யமஹா

மூன்­றா­வது தலை­முறை பைக்

யமஹா நிறு­வ­னம், அதன், ‘ஒய்.இசட்.எப்.,- ஆர்., 15’ பைக்­கின், மூன்­றா­வது தலை­முறை பைக்கை, வெகு விரை­வில், இந்­தி­யா­வில் அறி­மு­கம் செய்ய உள்­ளது. இந்­தி­யா­வில், பைக் ரசி­கர்­கள் மத்­தி­யில் பெரும் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்தி உள்ள, ஒய்.இசட்.எப்.,- ஆர்., 15, 3.0 பைக், இவ்­வா­ரத்­தில் ஏதே­னும் ஒரு நாளில் அறி­மு­கம் செய்­யப்­ப­ட­லாம் என, தக­வல் கசிந்­துள்­ளது.
இதற்கு, யமஹா ரசி­கர்­க­ளி­டையே பெரும் எதிர்­பார்ப்பு நில­வு­வ­தால், சில டீலர்­கள், முன்­ப­திவு செய்ய துவங்கி விட்­ட­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது. மிக­வும் ஸ்டை­லாக, இளை­ஞர்­கள் விரும்­பும் வகை­யி­லும், இந்த பைக் வடி­வ­மைக்­கப்­பட்டு உள்­ளது. இதில், 155 ‘சிசி’ சிங்­கிள் சிலிண்­டர் இன்­ஜின் பொருத்­தப்­பட்டு உள்­ளது. இதி­லி­ருந்து அதி­க­பட்­சம்,
19 எச்.பி., திறன் கிடைக்­கும். இது, லிக்­விட் கூல்டு இன்­ஜின், 6 ஸ்பீடு கியர்­பாக்ஸ், ஸ்லிப்­பர் கிளட்ச்’ உள்­ளிட்­ட­வற்­று­டன் உரு­வாக்­கப்­பட்டு உள்­ளது.

ஏப்­ரி­லியா

வரு­கிறது எஸ்.ஆர்., 125

இந்தி­யா­வில், ‘ஏப்­ரி­லியா ஸ்கூட்­டர்ஸ்’ நிறு­வ­னத்­தின் சக்தி வாய்ந்த, 150 ‘சிசி’ ஸ்கூட்­ட­ருக்கு, நல்ல வர­வேற்பு கிடைத்­தது. இந்­நி­லை­யில், அதை விட சற்று விலை குறைந்த, புதிய மாடல் ஸ்கூட்­டரை, ‘ஏப்­ரி­லியா’ கள­மி­றக்க முடிவு செய்­துள்­ளது. இது, 125 ‘சிசி’ இன்­ஜின் திற­னு­டைய ஸ்கூட்­டர். இந்த புதிய ஸ்கூட்­டர், சில டீலர்­க­ளுக்கு ஏற்­க­னவே அனுப்­பப்­பட்டு விட்­ட­தாக தெரி­கிறது.

முந்­தைய அறி­மு­க­மான, 150 ‘சிசி’ ஏப்­ரி­லி­யா­வின் விலை, 69,146 ரூபா­யில் துவங்­கு­வது குறிப்­பி­டத்­தக்­கது. அதில், புதிய பச்சை நிறம் ஓரிரு நாளில் அறி­மு­க­மாக உள்­ளது. வர­வி­ருக்­கும், 125 ‘சிசி’ ஸ்கூட்­ட­ரின் விலை, இன்­னும் முடிவு செய்­யப்­ப­ட­வில்லை என்­றா­லும், அதன், ஷோரூம் துவக்க விலை, 65,309 ரூபா­யாக இருக்­க­லாம் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இரு நிறங்­களில் களம் காண­வுள்ள, புதிய ஸ்கூட்­டர் குறித்த வேறு தக­வல்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை என்­றா­லும், தோற்­றத்­தில், 150 ‘சிசி’ சகோ­த­ரனை போலவே, இந்த 125 ‘சிசி’ காட்சி அளிக்­கிறது. ஓரிரு வாரங்­களில், இது விற்­ப­னைக்கு வர­வுள்­ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)