பேயர் – மான்சான்டோ இணைப்பால் பாதிப்பு?  பொது கருத்து கேட்கிறது சி.சி.ஐ.,பேயர் – மான்சான்டோ இணைப்பால் பாதிப்பு? பொது கருத்து கேட்கிறது சி.சி.ஐ., ... முத­லீட்டின் பலனை பெற  தவிர்க்க வேண்­டிய தவ­றுகள் முத­லீட்டின் பலனை பெற தவிர்க்க வேண்­டிய தவ­றுகள் ...
தயாராகிறது மத்திய பட்ஜெட் உள்நாட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்க சுற்றுலா துறையை ஊக்குவிக்க திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2018
03:49

புதுடில்லி:நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சியை மேம்­ப­டுத்­த­வும், அதி­க­ள­வில் வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­க­வும், சுற்­றுலா துறை­யில் வரி குறைப்பு உள்­ளிட்ட ஊக்­கு­விப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­, மத்­திய அரசு திட்­ட­மிட்டு உள்­ளது. இவை குறித்த அறி­விப்­பு­கள், பிப்., 1ல் தாக்­கல் செய்­யப்­பட உள்ள, மத்­திய பட்­ஜெட்­டில் வெளி­யாகும் என, தக­வல் கசிந்து உள்­ளது.

இது குறித்து, பெயர் குறிப்­பிட விரும்­பாத, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:
இந்­திய சுற்­றுலா துறை சந்தை மதிப்பு, 13.65 லட்­சம் கோடி ரூபா­யாக உள்­ளது. இத்­துறை, 2017 ஏப்., – செப்., வரை­யி­லான அரை­யாண்­டில், 10 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது. இது, 2016ல், இதே காலத்­தில், 8 சத­வீ­தத்தை நெருங்கி இருந்­தது.

சுற்­றுலா துறை­யின் ஆற்­றலை, முடிந்த அளவு பயன்­ப­டுத்தி, அதி­க­ள­வில் முத­லீ­டு­களை ஈர்த்து, பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்­த­வும், வேலை­வாய்ப்பை பெருக்­க­வும் மத்­திய அரசு
விரும்­பு­கிறது.

இத்­து­றை­யில் தற்­போது, 4 கோடி பேர் பணி­யாற்­று­கின்­ற­னர். அடுத்த, 10 ஆண்­டு­களில் கூடு­த­லாக, 1 கோடி வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்க, அரசு திட்­ட­மிட்டு உள்­ளது.இதற்­காக, மத்­திய பட்­ஜெட்­டில், கவர்ச்­சி­க­ர­மான திட்­டங்­கள் அறி­விக்­கப்­படும் என, தெரி­கிறது.குறிப்­பாக, நட்­சத்­திர ஓட்­ட­லுக்கு, 28 சத­வீத, ஜி.எஸ்.டி., என்­பது குறைய வாய்ப்பு உள்­ளது.

ஏனெ­னில், இதர ஆசிய நாடு­க­ளு­டன் ஒப்­பி­டும் போது, இந்­தி­யா­வில் தான், சுற்­றுலா பய­ணி­யர் ஓட்­டல் அறை­க­ளுக்­கும், பய­ணங்­க­ளுக்­கும் சரா­ச­ரி­யாக, 30 சத­வீ­தம் வரி செலுத்­து­கின்­ற­னர்.
இது, சிங்­கப்­பூர், தாய்­லாந்து, இந்­தோ­னே­ஷியா ஆகிய நாடு­களில், 10 சத­வீ­தத்­திற்­கும் குறை­வாக உள்­ளது.

வரி குறைக்­கப்­பட்­டால், சுற்­றுலா பய­ணி­யர் விமான போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­கள், ஓட்­டல் குழு­மங்­கள், சுற்­றுலா நிறு­வ­னங்­கள் பயன் பெறும்.பட்­ஜெட்­டில், சுற்­றுலா துறை­யின் உட்­கட்­ட­மைப்பு திட்­டங்­க­ளுக்­கான நிதி ஒதுக்­கீட்டை அதி­க­ரிக்­க­வும், புதிய ஓட்­டல்­களில் மேற்­கொள்­ளும் முத­லீ­டு­க­ளுக்கு வரி விலக்கு சலுகை அளிக்­க­வும் வாய்ப்பு உள்­ளது.

ஓட்­டல் கட்­டு­மா­னத்­திற்கு வரிச்­ச­லு­கை­கள்; புதிய சுற்­றுலா ரயில்­க­ளுக்கு கூடு­தல் நிதி ஒதுக்­கீடு; சுற்­றுலா தலங்­களை இணைக்­கும் சாலை வசதி திட்­டங்­கள் ஆகி­ய­வை­யும், பட்­ஜெட்­டில் வெளி­யா­கும் என, தெரி­கிறது.புதிய மற்­றும் குறை­வான பய­ணி­யர் போக்­கு­வ­ரத்து உள்ள, பிராந்­திய விமான நிலை­யங்­களை ஊக்­கு­விக்­கும் திட்­டங்­க­ளை­யும், பட்­ஜெட்­டில் எதிர்­பார்க்­க­லாம்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

அதிகரிப்பு

குறைந்த கட்­ட­ணத்­தி­லான, ‘உதான்’ விமான சேவை திட்­டம், உள்­நாட்டு விமான போக்­கு­வ­ரத்து மற்­றும் விமான பய­ணி­யர் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க துணை புரிந்­துள்­ளது.

கண்டறியப்படும்

நாட்­டின் பல பகு­தி­கள், சுற்­றுலா தலங்­க­ளாக மாற்­றும் தகு­தி­யு­டன் உள்ளன. அவற்றை கண்­ட­றிந்து, உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை ஏற்­ப­டுத்தி, சுற்­றுலா பய­ணங்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும்.

அல்போன்ஸ்

மத்திய இணை அமைச்சர், கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)