தயாராகிறது மத்திய பட்ஜெட் உள்நாட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்க சுற்றுலா துறையை ஊக்குவிக்க திட்டம்தயாராகிறது மத்திய பட்ஜெட் உள்நாட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்க சுற்றுலா ... ... முத­லீட்டின் பலனை பெற  தவிர்க்க வேண்­டிய தவ­றுகள் முத­லீட்டின் பலனை பெற தவிர்க்க வேண்­டிய தவ­றுகள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உங்கள் சேமிப்பை அதி­க­ரிக்க உதவும் நிதி தீர்­மா­னங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2018
00:07

நிதி திட்­ட­மிடல் போலவே நிதி தீர்­மா­னங்­களும் முக்­கி­ய­மா­னவை. நிதி தீர்­மா­னங்கள், சேமிப்பு ஒழுங்கை ஏற்­ப­டுத்தி தரு­வ­தோடு, நிதி நிலையை மேம்­ப­டுத்­திக்­கொள்­ளவும் உதவும். முத­லீட்டு வாய்ப்­பு­களை சீர் துாக்கி பார்க்­கவும் வழி செய்யும். இதற்­காக, நீங்கள் பரி­சீ­லிக்க வேண்­டிய நிதி தீர்­மா­னங்கள்:
சேமிப்பை அதி­க­மாக்கி கொள்­வ­தற்­கான எளிய வழி, செல­வு­களை கட்­டுப்­ப­டுத்­து­வது தான். வரு­மா­னத்­திற்குள் செல­வு­களை சுருக்கி கொள்ள வேண்டும். ஆடம்­பர செல­வுகள் செல்வ வளத்தின் அடை­யா­ள­மாக இருக்­காது. சிக்­க­னமும், சேமிப்­புமே எதிர்­கால வளத்­திற்கு வழி செய்யும். செலவை குறைத்து, சேமிப்பை அதி­க­மாக்க உறுதி கொள்­ளுங்கள். அதற்­கான வழி­களை தேடி செயல்­ப­டுத்­துங்கள்.
விழாக்­கால தள்­ளு­ப­டிகள்,சலுகை அறி­விப்­புகள் நல்ல பலனை அளிப்­பது போல தோன்­றலாம். இவற்றை பார்த்­த­வுடன் வாங்­கவும் தோன்­றலாம். ஆனால், 50 சத­வீத தள்­ளு­ப­டியில் இரண்டு பொருட்­களை வாங்கும் போது, விலை குறைவு பலனை விட நீங்கள் தேவைக்கு அதி­க­மாக ஒன்றை வாங்­கு­கி­றீர்கள் என்­பதே உண்மை. எனவே தள்­ளு­படி மோகத்தில் தேவை­யில்­லாத பொருட்­களை வாங்­காமல் இருப்­பது நல்­லது.
தள்­ளு­ப­டியை விட, நல்ல நிலையில் உள்ள பயன்ப­டுத்­திய பொருட்­களை நாடலாம், கார்கள், லேப்­டாப்கள், கேட்­ஜட்கள் என எல்­லாமே இப்­போது பயன்­ப­டுத்­திய பொருட்­க­ளாக குறைந்த விலையில் கிடைக்­கின்­றன. புதிய பொருளின் ஈர்ப்பு இல்­லா­விட்­டாலும், இவை பணத்­திற்கு ஏற்ற மதிப்பை தரும். புதிய சாத­னங்­களை வாங்­கு­வதை விட, பயன்­ப­டுத்­திய பொருட்­களை வாங்­கலாம். பல்­வேறு இணை­ய­த­ளங்கள் இந்த சேவையை வழங்­கு­கின்­றன.
பல­ருக்கும் எதிர்­கா­லத்தில் பணம் வரும் எனும் நம்­பிக்­கையில் செலவு செய்யும் பழக்கம் இருக்­கி­றது. ஆண்டு இறு­தியில் போனஸ் கிடைக்­கலாம், பங்­குச்­சந்­தையில் அதிக பலன் கிடைக்­கலாம் எனும் நம்­பிக்­கையில் இப்­போது செலவு செய்­கின்­றனர். ஆனால் இந்த பணம் கிடைக்­காமல் போனால் சிக்கல் ஏற்­ப­டலாம். எனவே எதிர்­கால பணத்தின் அடிப்­ப­டையில் அல்­லாமல், தேவைக்­கேற்­பவே செலவு செய்ய வேண்டும்.
அடிக்­கடி பொருட்­களை மாற்­றாமல் இருப்­பது நல்­லது தான். ஆனால் அதற்­காக வீட்டில் பழைய பொருட்­களை பாது­காத்து வைப்­பதில் அர்த்தம் இல்லை. சரி­யான முறையில் செலவு செய்­வது பலன் அளிப்­பது, போல தேவை­யில்­லாத பொருட்­களை விற்­பதும் பலன் தரும். இந்த தொகை சேமிப்­பாக அமையும். இதற்­கென இணை­ய­த­ளங்கள் இருக்­கின்­றன. விற்க விரும்­பா­விடில் நன்­கொ­டை­யாக அளிக்­கலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)