பதிவு செய்த நாள்
08 ஜன2018
00:12

சில்லரை முதலீட்டாளர்கள் அதிகம் நாடும் முதலீடு வாய்ப்புகளில் ஒன்றான ரிசர்வ் வங்கி பத்திரங்கள் என அழைக்கப்பட்ட, 8 சதவீத வட்டி விகிதம் கொண்ட அரசு சேமிப்பு பத்திரங்களுக்கு பதிலாக, புதிதாக, 7.75 சதவீத வட்டி விகிதம் கொண்ட சேமிப்பு பத்திரங்கள் அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 10 ம் தேதி மூலம் இவற்றில் முதலீடு செய்யலாம்.
வட்டி விகிதம் குறைந்த நிலையிலும் இந்த பத்திரங்கள் முதலீட்டாளர்களுக்கு ஏற்றவையா? என பார்க்கலாம். வட்டி விகிதம் குறைந்திருந்தாலும், நிலையான பலனை நாடும் முதலீட்டாளர்கள் இவற்றில் முதலீடு செய்யலாம் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.
ஏனெனில், வட்டி விகிதம் குறையும் சூழலில் பத்திரங்கள் மீதான வட்டி மாறாமல் இருக்க வேண்டும் என, எதிர்பார்க்க முடியாது என வல்லுனர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில் வைப்பு நிதி உள்ளிட்டவை, 7 சதவீதத்திற்கும் குறைவாகவே வரிக்கு முந்தைய பலன் அளிக்கும் நிலையில், அதிக ரிஸ்க்கை நாடாத முதலீட்டாளர்களுக்கு இந்த பத்திரங்கள் ஏற்றதாகவே இருக்கும்.
பெரும்பாலான சிறுசேமிப்பு திட்டங்கள் அளிக்கும் பலன்களும் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர். இந்த காரணங்களை நோக்கும் போது, சேமிப்பு பத்திரங்கள் முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாகவே இருக்கும் என்றாலும், பொருத்தமான மாற்று வாய்ப்புகளை பரிசீலிக்கும் அவசியம் இருப்பதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|