முத­லீட்டின் பலனை பெற  தவிர்க்க வேண்­டிய தவ­றுகள்முத­லீட்டின் பலனை பெற தவிர்க்க வேண்­டிய தவ­றுகள் ... ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.63.26 ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.63.26 ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
ஜன­வ­ரியை கவ­ன­மாக அணுக வேண்­டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2018
00:28

புத்­தாண்­டில் சிறப்­பான துவக்­கம் கண்­டது, இந்­திய பங்கு சந்தை. முதல் வாரத்­தில் தொடர்ந்து ஏற்­றம் கண்ட சந்­தைக்கு, எப்.ஐ.ஐ., முத­லீட்­டா­ளர்­கள் மீண்­டும் இந்­திய பங்­கு­களை வாங்க தொடங்­கி­யது பக்­க­ப­ல­மாக அமைந்­தது.
இது கடந்த ஆண்­டில் அவர்­கள் எடுத்த முத­லீட்டு நிலைப்­பாட்­டில் இருந்து ஒரு முக்­கிய மாற்­றம். 2017ல் எப்.ஐ.ஐ., முத­லீட்­டா­ளர்­கள் பெரும்­பா­லும் இந்­திய பங்­கு­களை விற்­றார்­கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.புத்­தாண்­டின் இன்­னொரு முக்­கிய மாற்­றம், உற்­பத்தி சார்ந்த குறி­யீ­டான, பி.எம்.ஐ.,ல் ஏற்­பட்ட அப­ரி­மித வளர்ச்சி. பொரு­ளா­தா­ரம் மீண்­டும் எழும் சூழல் வலுக்­கிறது.
துவக்­கம் இனிதே நடந்­தா­லும், சந்­தை­யில் தொடர்ந்து என்ன நடக்­கும்? வரும் வாரங்­களில் என்ன எதிர்­பார்க்­க­லாம்? கடந்த ஆண்டு முதல், மத்­திய அர­சின் பட்­ஜெட், பிப்­ர­வரி 1ம் தேதி தாக்­கல் செய்­யப்­ப­டு­கிறது. இதன் விளை­வாக ஆண்­டு­தோ­றும் எதிர்­பார்ப்பு சார்ந்து நடக்­கும், பட்­ஜெட் பங்கு வர்த்­த­கம், ஜன­வ­ரிக்­குள் முடிந்­து­வி­டும்.
முன் ஜன­வ­ரி­யில், பன்­னாட்டு முத­லீட்­டா­ளர்­கள் வருகை சார்ந்­தும், பண­வ­ரத்து சார்ந்­தும் மட்­டுமே சந்­தை­யின் போக்கு அமை­யும். இப்­போது, பட்­ஜெட் வர்த்­த­க­மும் அவற்­றோடு சேர்ந்­து­கொண்டு ஒரு விறு­வி­றுப்­பான சந்தை சூழலை உரு­வாக்­கி­யுள்­ளது.இதில் முக்­கிய அம்­சம் என்­ன­வென்­றால், நடக்­கும் பா.ஜ., ஆட்­சி­யின் இறுதி பட்­ஜெட் இதுவே. அடுத்த ஆண்டு பட்­ஜெட், பொதுத்­தேர்­தலை வென்று புதி­தாக ஆட்சி அமைக்­கும் அர­சால் தாக்­கல் செய்­யப்­படும்.இந்த ஆட்­சி­யின் இறுதி பட்­ஜெட்­டில் என்ன எதிர்­பார்க்­க­லாம்? பங்­குச் சந்தை சார்ந்த மாற்­றங்­கள் எப்­படி அமை­யும்?
இந்த பட்­ஜெட், ஒரு தேர்­தல்பட்­ஜெட் என்றே எதிர்­பார்க்­க­லாம். அதில், மக்­களை கவ­ரும் வண்­ணம் அறி­விப்­பு­கள் வந்தே ஆக வேண்­டும். முக்­கி­ய­மாக சம்­ப­ளம் வாங்­கும் நடுத்­தர வர்க்­கம், சிறு­தொ­ழில்மு னை­வோர் ஆகி­யோ­ருக்கு சலு­கை­கள் கொடுக்க வேண்­டிய கட்­டா­யத்­தில் அரசு இருக்­கிறது.
அரசு முத­லீ­டு­களும் தொடர்ந்து நடந்­தால் மட்­டுமே, பொரு­ளா­தார வளர்ச்­சியை கூட்ட முடி­யும். மேலும் கச்சா எண்­ணெய் விலை ஏறிய வண்­ணம் இருக்­கிறது. அர­சின் நிதி­கள் போது­மா­ன­தாக அமை­யாது.ஜி.எஸ்.டி., அம­லுக்கு வந்து வரி வசூல் வலுப்­ப­டாத நிலை­யில், பட்­ஜெட் நிச்­ச­யம் அரசை நிதி அழுத்­தத்­தில் தள்­ளும் சூழல் உரு­வா­கி­யுள்­ளது. அரசு செய்ய நினைக்­கும் அனைத்­தை­யும் செய்ய, நிச்­ச­யம் வரி­கள் கூட வேண்­டும். ஆனால், ஜி.எஸ்.டி., யை கூட்­டும் சாத்­தி­யக்­கூறு நிச்­ச­யம் இல்லை.
இந்­தச் சூழ­லில், பங்­குச் சந்­தை­யில் அதிக லாபம் ஈட்­டு­வோர், கண்­டிப்­பாக வரி அமைப்­புக்­குள் கொண்டு வரப்­ப­டு­வர். இதன் மூலம் அர­சால், ரூ.50,000 கோடி வரை கூடு­தல் வரி வசூ­லிக்க முடி­யும். அர­சி­யல் ரீதி­யா­க­வும், பணக்­கா­ரர்­க­ளி­டம் கூடு­தல் வரி வசூ­லித்து, அதி­லி­ருந்து ஏழை­கள் மற்­றும், நடுத்­தர வர்க்­கத்­திற்கு சலு­கை­கள் தரு­வது ஆட்­சி­யில் உள்­ளோ­ருக்கு சாத­க­மாக அமை­யும்.சந்தை இதை எதிர்­பார்த்து, பட்­ஜெட் வர்த்­த­கத்­தில் இறங்­கும். கச்சா எண்­ணெய் விலை மற்­றும் பண­வீக்­கம் சந்­தையை நிச்­ச­யம் பாதிக்­கும். மேலும், மக்­களை கவ­ரும் எண்­ணத்­தோடு போடப்­படும், பட்­ஜெட் எப்­படி சந்­தையை கவ­ரும் என்­பதை பொறுத்­தி­ருந்து பார்க்க வேண்­டும்.
இந்த சூழ­லில், சந்தை தொடர்ந்து உயர்ந்­தால், அது முத­லீட்­டா­ளர்­களின் குழப்­பத்தை மேலும் அதி­கா­ரிக்­கும். ஆக, இந்த ஜன­வ­ரி­யில், சுவா­ரஸ்­ய­மான பங்கு வர்த்­த­கத்தை எதிர்­பார்க்­க­லாம். ஆனால், இது முத­லீட்­டுக்கு உகந்த மாதமா என்­பதை, பட்­ஜெட் மட்­டுமே தீர்­மா­னிக்­கும். இப்­போது, நம் முத­லீட்டு முடி­வு­களின் எதிர்­கா­லத்தை நம்­மால் சரி­யாக கணிக்க இய­லாது. அத்­த­கைய நேரங்­களில், யூகங்­களின் அடிப்­ப­டை­யில் முத­லீடு செய்­வது மிக கடி­னம்.மிக நிதா­ன­மா­க­வும் கவ­ன­மா­க­வும் முத­லீட்டு முடி­வு­களை எடுக்­கும் நேர­மாக இந்த ஜன­வ­ரியை நாம் அணுக வேண்­டும்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)