முத­லீட்டின் பலனை பெற  தவிர்க்க வேண்­டிய தவ­றுகள்முத­லீட்டின் பலனை பெற தவிர்க்க வேண்­டிய தவ­றுகள் ... ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.63.26 ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.63.26 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தள்­ளு­படி செய்­வது நியா­யமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2018
00:34

வாராக் கடன் பிரச்­னை­யைத் தீர்ப்­ப­தற்கு, இந்­தி­யன் ஓவர்­சீஸ் வங்கி மேற்­கொண்­டி­ருக்­கும் ஒரு நடை­முறை, விமர்­ச­னங்­க­ளை­யும் வர­வேற்­பை­யும் ஒருங்கே பெற்­றி­ருக்­கிறது. வழக்­கத்­துக்கு மாறான இந்த முயற்­சியை மற்ற வங்­கி­களும் பின்­பற்­று­வ­தற்கு வாய்ப்­புண்டா?

கடந்த, 2017 செப்­டம்­பர் மாதத்­தோடு முடிந்த இரண்­டாம் காலாண்­டின் இறு­தி­யில், இந்­தி­யன் ஓவர்­சீஸ் வங்­கி­யின் (ஐ.ஓ.பி.) வாராக் கடன் 18,950 கோடி ரூபாய். இது அதற்கு முந்­தைய காலாண்­டு­க­ளோடு ஒப்­பி­டும்­போது படிப்­ப­டி­யாக குறைந்து வந்­துள்­ளது. மொத்த கொடுக்­கப்­பட்ட கடன்­க­ளோடு ஒப்­பி­டும்­போது, 13.88 சத­வீ­தம் வாராக்­க­டன்­க­ளா­கத் தேங்­கிப் போய்­விட்­டன.

மத்­திய ரிசர்வ் வங்கி, ஏற்­கெ­னவே ஐ.ஓ.பி.யை, தன் உட­னடி சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டிய பொதுத்­ துறை வங்­கி­களின் பட்­டி­ய­லி­லேயே 2015 செம்­டம்­பர் முதல் வைத்­தி­ருக்­கிறது.இந்த நிலை­யில், ஐ.ஓ.பி., வாராக் கடன் அள­வைக் குறைக்க பல­வி­தங்­களில் முயற்சி செய்து வந்­தது.
வேலை­வாய்ப்பு
பூஷண் ஸ்டீல் நிறு­வ­னத்­துக்கு, அது வழங்­கிய கடன்­க­ளைக் கூட, அது வேறு ஒரு நிறு­வ­னத்­துக்கு, 40 சத­வீத கழி­வில் விற்­று­விட்­டது. வந்­த­வ­ரைக்­கும் லாபம் என்­பதே இந்த அணு­கு­முறை.தற்­போது, ஐ.ஓ.பி. 6,978.94 கோடி ரூபாய் வாராக் கடனை, தன்­னு­டைய சொந்த இருப்­பி­லி­ருந்தே ‘தள்­ளு­படி’ செய்­து­விட முடிவு செய்­தி­ருக்­கிறது. இதற்கு, அது பயன்­ப­டுத்­தப் போவது ஷேர் பிரி­மி­யம் அக்­கெ­ளன்­டில் உள்ள நிதியை.இதர வங்­கி­களும் வாடிக்­கை­யா­ளர்­களும் ஒரு­பக்­கம் இந்த முடி­வைக் கண்டு ஆச்­ச­ரி­யப்­பட, வெள்­ளிக்­கி­ழமை அன்று, பங்­குச் சந்தை முத­லீட்­டா­ளர்­கள் இந்த முடிவை வர­வேற்­கும் வித­மாக, ஐ.ஓ.பி.,யின் பங்கை வாங்­கிக் குவித்­தார்­கள்.
அன்று காலை வணி­கம் தொடங்­கி­ய­போது, ஐ.ஓ.பி., பங்கு விலை, 9 சத­வீத அள­வுக்கு உயர்ந்­தது.
பின்­னணி என்ன?
வாராக் கடன்­களை வசூல் செய்­வ­தற்கு பல்­வேறு முயற்­சி­களை, மத்­திய ரிசர்வ் வங்கி செய்­து­வ­ரு­வ­தைப் படித்­தி­ருப்­பீர்­கள். இந்­திய பொதுத்­துறை வங்­கி­களில், 10 லட்­சம் கோடி ரூபாய்க்கு மேல் வாராக் கடன் நில­வு­வ­தால், வங்­கித் துறை­யில் தேக்­கம். அத­னைச் சரி­செய்து, வங்­கி­களின் பேலன்ஸ் ஷீட்­டு­கள் வளம் பெற, மத்­திய அரசு பெரும் தொகையை மறு­மு­த­லீடு செய்ய முனைந்­தி­ருக்­கிறது.
இப்­ப­டிச் செய்­வ­தன் மூலம், மீண்­டும் வங்­கி­கள் கடன் கொடுப்­பது தொடங்­கும்; அதன்­மூ­லம் தொழில் வளர்ச்சி, வேலை­வாய்ப்பு பெருக்­கம் ஏற்­படும்.அதே­ச­ம­யத்­தில் வாராக் கடன்­களை வைத்­துள்ள பெரு நிறு­வ­னங்­கள் மீது நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு, அவர்­களை திவால் சட்­டத்­தின் கீழ் கொண்டு வந்து, முடிந்­த­வரை வசூல் செய்­ய­வேண்­டும் என்ற முயற்­சி­களும் தொடர்­கின்றன.
அட்­ஜெஸ்ட்­மென்ட்
இந்த நிலை­யில், ஐ.ஓ.பி. ஷேர் பிரி­மி­யம் அக்­கெ­ளன்­டைப் பயன்­ப­டுத்தி, தன்­னு­டைய வாராக் கடனை அடைத்­துக்­கொண்­டி­ருக்­கிறது.ஒரு பங்­கின் முக­ம­திப்பு ஒரு ரூபாய் என்று வைத்­துக்­கொள்­ளுங்­கள். அது சந்­தை­யில் 10 ரூபாய்க்கு விற்­பனை ஆகி­யி­ருந்­தால், மிச்­ச­முள்ள ஒன்­பது ரூபாயை, இந்த ஷேர் பிரி­மி­யம் அக்­கெ­ளன்­டில் தான் சேமித்து வைப்­பார்­கள். இந்­த தொகையை ஒரு­சில குறிப்­பிட்ட விஷ­யங்­க­ளுக்­குத்­தான் பயன்­ப­டுத்த வேண்­டும் என்று கட்­டுப்­பா­டு­கள் உண்டு.
நிறு­வ­னச் சட்­டம், 2013ன் படி, இந்­தத் தொகையை, 5 கார­ணங்­க­ளுக்­கா­கப் பயன்­ப­டுத்­த­லாம். அதில், போனஸ் பங்­கு­கள் வழங்­க­வும், கடன் பத்­தி­ரங்­கள் வாங்­க­வும், செல­வி­னங்­களை ‘தள்­ளு­படி’ செய்­ய­வும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்­தக் கடைசி ஷரத்­தைப் பயன்­ப­டுத்தி, ஐ.ஓ.பி., வாராக்­க­டன்­க­ளைத் தள்­ளு­படி செய்ய முடி­வெ­டுத்­துள்­ளது. அதற்­கான உரிய அனு­ம­தி­களை மத்­திய ரிசர்வ் வங்­கி­யி­ட­மி­ருந்­தும் பெற்­றுள்­ளது.
ஐ.ஓ.பி.,யின் ஷேர் பிரி­மி­யம் அக்­கெ­ளன்­டில், 7,650 கோடி ரூபாய் இருப்­ப­தால், 6,978.94 கோடி ரூபா­யைத் தள்­ளு­படி செய்­வது பெரிய விஷ­ய­மாக இராது. அதா­வது, இங்கே ஏற்­கெ­னவே இருந்த சேமிப்­பில் இருந்து பணம் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. புதி­தாக பணம் வெளி­யி­லி­ருந்து கோரப்­ப­ட­வில்லை. ஒரு­வ­கை­யில் இரு கணக்­குப் புத்­த­கத்­தில் செய்­யப்­பட்ட அட்­ஜெஸ்ட்­மென்ட். நிகர வரு­வா­யும் இல்லை, நிகர செல­வும் இல்லை. ஆனால், வேறு கேள்­வி­கள் எழுந்­துள்ளன.

சரி­யான முறையா?
இந்­தப் பணம் யாரு­டை­யது? முத­லீட்­டா­ளர்­க­ளு­டை­யது. அதனை, அவர்­க­ளு­டைய நல­னுக்­கா­கப் பயன்­ப­டுத்­த­வேண்­டுமே அன்றி, வாராக் கடனை அடைப்­ப­தற்­குப் பயன்­ப­டுத்­த­லாமா? கடைத் தேங்­காயை எடுத்து வழிப்­பிள்­ளை­யா­ருக்கு உடைத்த மாதிரி இல்­லையா? வேறு வழி­யில்லை, பயன்­ப­டுத்­த­லாம் என்­ப­தைத்­தான் மத்­திய ரிசர்வ் வங்­கி­யின் அனு­மதி எடுத்­துச் சொல்­கிறது.
பங்­கு­தா­ரர்­கள் மத்­தி­யில் இதற்­கான அனு­மதி பெறப்­பட வேண்­டாமா? வேண்­டும். ஜன­வரி 30 ம் தேதி நடை­பெ­ற­வி­ருக்­கும் அசா­தா­ரண பொதுக்­குழு சந்­திப்­பில் கடு­மை­யான வாதங்­கள் இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.ஆனால், பங்­குச் சந்தை இந்த அறி­விப்பை வர­வேற்­றுள்­ள­து­தான் இங்கே கவ­னிக்க வேண்­டி­யது. ஒன்­பது சத­வீத அள­வுக்கு அதன் பங்கு விலை­கள் உயர்ந்­தன.
அதா­வது, இனி­மேல் அந்த வங்­கி­யின் வர­வு­செ­லவு கணக்­கில் வாராக்­க­டன் சுமை இருக்­காது. அத­னால், லாப­க­ர­மாக இயங்க ஒரு வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது என்­ப­தைப் பங்­குச் சந்தை வர­வேற்­றுள்­ள­தா­கவே அர்த்­தம்.வலக்­கை­யில் இருந்­தால் என்ன இடக்­கை­யில் இருந்­தால் என்ன? அந்­தத் தொகை வங்­கிக்­குள் தானே இருக்­கிறது என்­பதே இங்கே சொல்­லப்­படும் லாஜிக்.
பெரும் நஷ்­டமோ, முத­லீட்­ட­ாளர்­க­ளுக்­குப் பெரும் சேதமோ இல்­லா­மல், ‘தளுக்’க்காக கடன்­கள் தள்­ளு­படி செய்­யப்­பட்­டால் போதும், வங்­கி­கள் மீண்­டு­விட்­டால் போதும் என்ற மனப்­பான்மை இங்கே செயல்­ப­டு­வ­தா­கவே தோன்­று­கிறது.ஆனால், ஒரு கேள்வி மட்­டும் மிச்­ச­மி­ருக்­கிறது. ஷேர் பிரி­மி­யம் அக்­கெ­ளன்ட் என்­பது நிச்­ச­யம் ஏதே­னும் ஒரு முக்­கிய தேவையை ஒட்­டியே உரு­வாக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டும்.
வாராக்­க­டனை விட பெரிய இடர் ஏதே­னும் ஒன்று தோன்­று­மா­னால், அப்­போது வங்­கி­கள் நிதி­யைத் திரட்ட எங்கே போகும்? பிற பொதுத் துறை வங்­கி­களும் இதே நடை­மு­றை­யைப் பின்­பற்­றத் தொடங்­கி­னால் என்ன விளைவு ஏற்­படும்?
இது ஒரு தவ­றான முன்­னு­தா­ர­ணம் ஆகி­வி­ட­லாம் என்று கவலை தெரி­விப்­ப­வர்­கள் இருக்­கி­றார்­கள். ஆனால், இப்­போ­தையை வாராக்­க­டன் பிரச்­னை­யைத் தீர்க்க, ஐ.ஓ.பி., ஒரு வழி கண்­டு­பி­டித்­துள்­ளது என்­பது மட்­டும் உண்மை.
-– ஆர்.வெங்­க­டேஷ்பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)